லொள்ளு சபா ஆண்டனியின் மோசமான நிலைமை.. கூடா நட்பால் வந்த வினை! சந்தானம் செய்யும் உதவி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலர் புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் நடிகர் ஆன்டனி இவர் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார்.
ஆனால் சமீபத்தில் அவர் உடல்நிலை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அது குறித்து அவர் கண்ணீரோடு சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று இணைத்து அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பொதுவாக ஒரு சிலர் உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் போது அஜாக்கிரதையாக செய்யும் செயல்களால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அது குறித்து பிரச்சனை வந்து கஷ்டப்படும்போது தான் வலி வேதனைகள் எல்லாம் தெரிகிறது. ஒரு சிலர் என்னதான் தப்பு செய்தாலும் நமக்கு எதுவும் ஆகாது என்ற ஒரு அஜாக்கிரதையால் தங்களை கவனிக்காமல் விட்டுவிட பிறகு பல்வேறு துயரங்களை படுகிறார்கள்.
அப்படித்தான் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஆண்டனியின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. சமீபத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் 20 ஆண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி இருந்தனர். அதில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் அந்த ரியூனியனில் கலந்து கொள்ளாதவர்களை பற்றி தேடிய போது தான் ஆண்டனியின் நிலைமை தெரியவந்து அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பலபேரை சிரிக்க வைத்த ஆண்டனி இப்போது மருத்துவமனையில் நிம்மதியாக படுத்து தூங்க கூட முடியாத நிலைமையில் தவிக்கிறாராம். அதாவது அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
அப்போது அது குறித்து செக் பண்ணுவதற்காக மருத்துவமனைக்கு போயிருந்த நிலையில் அவருக்கு காலில் வெரிகோஸ் நோயுள்ளதால் வீங்கி இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். அதனால் அவரால் நிம்மதியாக படுத்து தூங்கக்கூட முடியவில்லை. அப்படியே படுத்து தூங்கினால் நெஞ்செல்லாம் அடைக்கிற மாதிரி இறுக்கமாக இருக்கிறதாம். அதனால் நின்று கொண்டு தான் தூங்குகிறாராம். ஆனால் நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்ததால் பிளாடர் வீங்கி விட்டதாக அவர் சொல்லும் போது கேட்பவர்களுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்..
அந்த அளவிற்கு அவருடைய நிலைமை மோசமாக இருக்கிறது. நல்ல சம்பாதித்து சினிமாவில் சாதிக்க நினைத்திருந்தவருக்கு தவறான நண்பர்களின் சகவாசத்தால் பிசினஸ் செய்து அதில் லாஸாகி இருந்த நிலையில் பல கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகி இப்படி ஆகிவிட்டேன் என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அதோடு தன்னை நடிகர் சந்தானம் தான் மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்து உதவிகளை செய்து வருகிறார் என்றும் அவர் ஆரம்பத்தில் நான் நல்லா இருக்கும்போதே என்னை ஆபிசுக்கு வர சொன்னார்.
அப்போ நான் போகாமல் போய்விட்டேன். அப்படி போயிருந்தால் தேவையில்லாத நண்பர்களோடு சேர்ந்து என்னுடைய வாழ்க்கையை சீரழித்திருக்க மாட்டேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அதோடு தனக்கு உடல்நிலை சரியில்லாமல் தான் மருத்துவமனையில் சேரும் நிலை வந்ததும் தன்னுடைய மனைவி தன்னை விட்டு பிரிந்து போய்விட்டார் என்றும் கூறியிருக்கிறார். கூடா நட்பு கேடு விளைவிக்கும் என்பது லொள்ளு சபா ஆண்டனியின் கஷ்டங்கள் மூலம் மற்றவர்களுக்கும் புரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications