லொள்ளு சபா சேஷு காலமானார்.. கடைசியாக இன்ஸ்ட்டாவில் வெளியிட்ட வீடியோ.. ஐயோ! இவரு இவ்வளவு நல்லவரா?
சென்னை: லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சேஷு மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (மார்ச் 26) காலமாகி இருக்கிறார். அது குறித்து ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணையில் அவருடைய வீட்டில் வைத்து அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அப்போது அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலமாகி இருக்கிறார்.

அதே நேரத்தில் சேஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மார்ச் 14ஆம் தேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் பகுதியை சார்ந்த ஒரு கடையில் இருக்கும் ஒரு நபரிடம் தினமும் உங்க ஓனர் எங்கே என்று கேட்க, அவர் துபாய்க்கு போயிருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
அந்த நபரோடு சேஷூ பேசிய சில வீடியோக்களை ஏற்கனவே பதிவிட்டு இருக்கிறார். அதுபோல கடைசியாக அவர் வெளியிட்ட வீடியோவில் துபாய் எங்கே இருக்கிறது என்று கேட்க, அதற்கு அவர் அது ஏதோ வெளிநாடாம்.... அங்கே இருக்கிறதாம், அங்கு போயிருக்கிறாராம் என்று அந்த நபர் வெகுளித்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அவரை கிண்டல் செய்து கொண்டே இருந்த சேஷு பிறகு அவரிடம் கேமராவை மறைத்தபடி கொஞ்சம் பணத்தை கொடுத்து இருக்கிறார். அதோடு நான் உன்னை விளையாட்டாக தான் தினமும் கிண்டல் செய்தேன் என்று சொல்லி இந்த பணத்தை செலவுக்கு வச்சுக்கோ என்று கொடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதே நேரத்தில் சேஷு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும் அவர் பகுதி மக்கள் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வரவேண்டும் என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோக்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அத்தனை பேர் வேண்டியும் கடவுள் ஏமாற்றிவிட்டாரே பலருக்கு உதவி செய்த சேஷு என்று இந்த உலகத்தை விட்டு போய்விட்டார். ஆனாலும் அவரால் உதவி பெற்ற அவர் பகுதி மக்கள் அவர் செய்த பல உதவிகள் குறித்து தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் அந்தப் பகுதி மக்கள் சேசு நல்லபடியாக மீண்டும் திரும்பி வரணும். அவர்தான் எங்களுக்காக பல உதவிகளை செய்து வந்தார். இந்த பகுதி மக்கள் ஒரு நல்ல ரோட்டில் போவதற்கு காரணம் கூட அவர்தான். பல பேருடைய திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். எங்கள் வீட்டில் ஒருவராக பல உதவிகளை செய்தார் என்று கண்ணீரோடு பேசியிருக்கிறார்கள். சேஷுவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லோரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications