சேஷுக்கு 10 லட்சம் உதவி கிடைக்கல! “அவங்க” நினைச்சிருந்தா காப்பாத்தி இருக்கலாம்.. டெலிபோன் ராஜ் பகீர்
சென்னை: நடிகர் சேஷுவிற்கு 10 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணமடைந்தார். இன்று அவருடைய உடலுக்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சேஷுவின் இறப்பினால் பலர் வருத்தங்களில் இருக்கும் நிலையில் அவருடைய நண்பரான "டெலிபோன் ராஜ்" கண்ணீரோடு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
சேஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு 10 லட்சம் ரூபாய் ஆபரேஷன் செய்வதற்காக தேவைப்படுகிறது என்று நடிகர் அமுதவாணன் உட்பட பலர் சேஷுவுக்காக வீடியோ வெளியிட்டு இருந்தனர். ஆனால் அந்த பணம் அவருக்கு சேரவில்லை என்று சமீபத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அது குறித்து டெலிபோன் ராஜ் காட்டமாக பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் சேஷு உயிரோடு இருக்கும்போது பலருக்கு உதவி செய்திருக்கிறார். பல குடும்பங்கள் அவரால் வாழ்ந்திருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கு கிடைப்பதே சொற்ப வருமானமாக இருந்தாலும் அதை கொண்டு பலருக்கு உதவி செய்வதுதான் சேஷுவின் வேலை.
அவர் தனக்கு கிடைத்த வருமானத்தை சேர்த்து வைத்திருந்தால் இன்று அவருக்கு இந்த நிலைமை வந்து இருக்காது. அவருக்கு கடைசி நேரத்தில் 10 லட்சம் ரூபாய் ஆபரேஷன் செய்வதற்காக தேவைப்படுகிறது என்று சொன்னபோது கூட அவரோடு நடித்த நடிகர்கள் யாருமே அவருக்கு உதவி செய்யவில்லை என்று தெரிகிறது.
சேஷு கடைசியாக நடித்த படமாக இருக்கட்டும் அல்லது அவருடைய நண்பர்களில் சிலர் பெரிய நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கூட தங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்திருக்கலாம். எங்களை போன்ற சின்ன நடிகர்களுக்கு 10,000 என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால் பெரிய நடிகர்களுக்கு அப்படி இல்லை. அவர்களால் பத்து லட்சம் என்பது எளிதாக புரட்ட கூடியது.
அதை அவர்கள் கொடுத்திருந்தால் சேஷு இன்று உயிரோடு இருந்திருப்பார். எங்களை நடிகர் சங்கமும் பெரியதாக கண்டுக்கவில்லை. எங்களை சில படங்களிலோ ஈவெண்டுகளிலோ நடிக்க வைத்துவிட்டு அதற்கான சம்பளத்தை சரியாக தராமல் அலைக்கழிக்கிறார்கள் அது குறித்து நாங்கள் நடிகர் சங்கத்தில் முறையிட்டால் கூட அதை சரி செய்வது இல்லை.
அது போல சேஷு அவருடைய வருமானத்தில் இன்சுரன்ஸ் போட்டு வைத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. ஆனால் அவரால் அது செய்ய முடியாது. ஏனென்றால் எங்களுக்கு எப்போதும் வருமானம் வந்து கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் சூட்டிங் இருக்கும் பிறகு நாட்களில் நாங்கள் சும்மாதான் இருக்கிறோம். கிடைக்கிற சம்பளம் அடுத்த நாள் செலவுக்கு போய்விடுகிறது.
பெரியதாக எதுவும் சேர்த்து வைக்க முடியவில்லை. சேது பலருக்கு உதவி செய்திருக்கிறார். அவரோடு பலர் நண்பர்களாக இருந்தபோதும் அவருடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது. என்னை போன்ற சின்ன நடிகர்களுக்கெல்லாம் இப்படி ஒரு பிரச்சனை வந்தால் யாரும் உதவ மாட்டார்கள் என்று தெரிகிறது என்று கண்ணீரோடு அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications