சிலரை வாழ்க்கையில் ரீபிளேஸ் பண்ண முடியாது.. லாஸ்லியா எமோஷனல்.. பிரேக்கப் பற்றி விளக்கம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை லாஸ்லியா முதல் முறையாக கவின் பற்றியும் அவருடைய கல்யாணம் பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதோடு சில பேர் மட்டும் நம்முடைய வாழ்க்கையில் ரீப்ளேஸ் பண்ணவே முடியாது என்று எமோஷனலாக லாஸ்லியா பேசியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய தற்போதைய நிலை குறித்தும் தான் எதனால் காதல் பிரேக்கப் ஆனது என்பது பற்றியோ அந்த வீடியோவில் லாஸ்லியா பேசியிருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி பல சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பல காதலர்கள் உருவாகிவிடுவது வழக்கமானது தான். அதிலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் அந்த நேரத்தில் பலருடைய மனம் கவர்ந்ததாக இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதலித்துக் கொண்டு இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்ததும் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர். அவரவர் தங்களுடைய பாதையை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டனர். அந்த நேரத்தில் தான் லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகள் வந்தது. அதுபோல கவினும் புது திரைப்படங்களில் கமிட்டாகி கொண்டிருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கவின் அவருடைய சிறு வயது தோழியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
இந்த நிலையில் லாஸ்லியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் கவின் அவருடைய திருமண வாழ்க்கையில் இணைந்தது எனக்கு சந்தோசம் தான். அவர் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
அதுபோல நம்முடைய வாழ்க்கையில் நாம பல பேரை பார்த்து இருப்போம் ஆனா அவங்க அடுத்த நேரம் நம்மை விட்டு போயிருவாங்க. அதற்காக நாம அவங்கள நினைச்சுக்கிட்டே இருக்க முடியாது. வாழ்க்கை என்பது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து போகக்கூடியது தான். நமக்குன்னு நம்ம சார்ந்தவங்க இருப்பாங்க. நமக்காக நாம வாழனும். நாளைக்கு நமக்கு என்ன நடக்கும்னு எதுவும் தெரியாது.

அதனால எதுக்காக ஒரு விஷயத்தை அப்படியே பிடித்து வச்சிட்டு இருக்கணும். அதனால போறது என்றால் போகட்டும் எது நடந்தாலும் ஓகே. வாழ போறது ஒரு வாழ்க்கை அதனால எதுக்கு சில கஷ்டங்களை பிடித்து கொள்ள வேண்டும் என்று அந்த பேட்டியில் லாஸ்லியா பேசியிருக்கிறார்.
அதோடு நான் ஆரம்பத்தில் சினிமா வாழ்க்கைக்கு வரும்போது 50 கிலோவில் இருந்தேன். அதற்கு பிறகு திடீரென்று எடை கூடிவிட்டேன். அதற்கு பிறகு தான் நம்முடைய உடம்பை நாம் தான் கவனிக்க வேண்டும் என்று ஆரோக்கியமான வழியில் உடம்பை குறைப்பதற்காக ஜிம் போனேன். ஆரம்பத்தில் எனக்கு ஜிம் போவதற்கு பெரிய அளவில் விருப்பம் இருக்காது.
ரொம்பவே கஷ்டப்படுவேன். ஆனால் இப்போது ஒரு நாள் போகவில்லை என்றாலும் பெரியதாக ஒன்றை இழந்தது போன்று இருக்கிறது. நம்முடைய மகிழ்ச்சியை நோக்கி நாம் நடை போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற லாஸ்லியா தன்னுடைய ஆரோக்கியம் குறித்தும் பேசி இருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications