Nayagi Serial: காதல்..கர்ப்பம்..கல்யாணம் வரிசை சரிதானே!
சென்னை: தொலைக்காட்சிகளின் பல சீரியல்களில் லவ்வர்ஸ் காதலிக்கறாங்க..கர்ப்பமாகிடறாங்க. இதுக்குப் பிறகுதான் கல்யாணத்துக்கு போராடி காதலிச்சவனையே பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் செய்துக்கறாங்க.
இதுதான் இன்றைய சீரியல்களில் செம டிரென்டிங்க்கான விஷயம். காதலிச்சவனை கல்யாணம் செய்துக்கணுமா, காதலர்கள் இன்றைய தொலைக்காட்சி சீரியல்களின் டிரெண்டிங்கை பின்பற்றலாம் என்கிற அளவுக்கு நிலைமை ஆகிப்போச்சு.
இதை எல்லாம் யாரும் கண்டுக்கொள்வதில்லை, தட்டிக் கேட்பதும் இல்லை. ஏதோ சீரியல்னு ஒன்னு ஒளிபரப்புங்க. அதை மக்களை பார்க்க வச்சுருங்க. உங்களுக்கு விளம்பரம் நாங்க கேரன்டின்னு விளம்பரதாரர் சொல்லிடறாங்க போல.

விளம்பரதாரர்கள் விழிக்க
சில படங்களை இந்த சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிச்சால், படம் 100 நாள் ஓடுவது கண்டிப்பு என்று மக்களின் கணிப்பு இருக்கும். அதற்கேற்றாற்போல அந்த படமும் தரமான படமாக இருக்கும். காரணம் என்ன என்று பார்த்தால் அந்த நிறுவனம் நல்ல தரமான கதைகளை தேர்ந்தெடுப்பதுதான். அது போல தொலைக்காட்சி சீரியல்கள் தயாரிக்கும் நிறுவனங்களும், அதற்கு விளம்பரம் தரும் நிறுவனங்களும் இப்படி ஒரு கொள்கையை கடைப்பிடித்தால் போதும்.

கன்னா பின்னா கதைகள்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களை டென்சன் படுத்தும் கன்னா பின்னா கதைகள் கொண்ட சீரியல்களை தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்காமல் இருக்கும்.நல்ல தரமான கதை, தரமான சீரியல்கள் என்று நிலைமை தலைகீழாக மாறும். இது சமுதாயத்துக்கு நல்லதுதானே.. இதை ஏன் விளம்பர நிறுவனங்களும்,தயாரிப்பு நிறுவனங்களும் பின்பற்றக் கூடாது?

அனு கர்ப்பம்
சன் டிவியின் நாயகி சீரியலை பெரிய அளவிலான மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இதைத் தயாரிப்பது விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம். அதாவது பாரம்பரிய பத்திரிகை என்று பெயர் எடுத்த ஆனந்த விகடன் சார்ந்த நிறுவனம். ஆனால், நாயகி சீரியலில் கல்யாணமாகாமல் குழந்தை பெற்றுக்கொண்ட அனன்யா. இப்போது கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் அனு என்று கேவல கேவலமான கதை. இதே போல தமிழ்ச்செல்வி சீரியலிலும் தமிழ்ச்செல்வியின் நாத்தனார் இலக்கியா கர்ப்பம். பிறகுதான் கல்யாணம்.

காற்றின் மொழி சீரியல்
விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் நாயகனின் தங்கை கர்ப்பமாக இருக்கிறாள் என்பதற்காகவே காதலித்தவனுடன் கல்யாணம் செய்து வைக்க மனம் இல்லாமல் சம்மதிக்கிறார் தாய்மாமா. இதை எல்லாம் பார்த்துவிட்டு, பெண்களுக்கு ஏன் ஆண்களுக்கும்தான் கல்யாணத்துக்கு முன் கர்ப்பமாவது தவறில்லை என்கிற அப்பிராயம் வந்துவிடாதா? காதலுக்கு சம்மதிக்காத பெற்றோர் இப்படி கர்ப்பம் ஆகிவிட்டால் கல்யாணம் எப்படியாவது பெற்றோர் சம்மதத்துடன் நடந்துவிடும் என்கிற தவறான நம்பிக்கையை தந்து தவறான வழிக்காட்டுதல் ஆகிவிடாதா?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications