மாறு வேஷம் இல்லை.. மாறன் வேஷம்.. என்னா மாதிரி கெத்து சீன்ய்யா இது!
சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை சமூக வலைத்தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர்.
இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பூனை கண்ணு, முகத்தில் மரு, பெரிய மீசை என குழந்தைகளை பயமுறுத்துகிற மாதிரியே மாறுவேஷம் போடுவாங்கன்னு தெரியலையே!!என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.
அதுவும் கண்ணில் மட்டுமே லென்ஸை வைத்துக்கொண்டு ஐப்ரோவை கட் செய்திருந்தால் மாறன் என்று அனைவரும் நம்பனும் இதுதான் உண்மை என தற்போது வெளியிட்டிருக்கும் பிரோமோவை பார்த்து ரசிகர்களும் வகைவகையாக கமெண்டுகளை கொட்டுகின்றனர்.

மாஸ் காட்டிய மாறன் என்ட்ரி
அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த மாறனின் என்ட்ரியை பார்த்து இப்போது ரசிகர்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர். என்னதான் டபுள் கேரக்டராக இருந்தாலும் இப்படி மாறு வேஷத்தையே கேவலப்படுத்திடிங்கிலே என்று பலர் கலாய்த்தாலும், டபுள் கேரக்டர் என்றால் இப்படித்தான் காலம் காலமாக சினிமாக்களிலும் சீரியல்களிலும் ரசிகர்களை ஏமாற்றுகிறார்களா!!எவ்வளவோ டெக்னிக்குகளில் வளர்ச்சி அடைந்தாலும் இந்த மாதிரி விஷயத்தில் இன்னும் நாம் வளர்ச்சி அடையாமல் தான் இருக்கிறோம் என்று பலர் கூறி வருகின்றனர்.

மனதை அள்ளும் மீம்ஸ்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பான கதைகளத்தோடு சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனின் முதல் பகுதியில் இரண்டு கேரக்டரில் செந்தில் நடித்திருந்தார். அதேபோல தற்போது இரண்டாவது சீசனிலும் இதுவரைக்கும் மாயன் என்ற ஒரு கேரக்டரில் செந்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது மாறன் கேரக்டர் ஆகவும் புதியதாகவும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த கேரக்டரை பற்றித்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் பிரோமோவை போட்ட சிறிது நேரத்திற்குள்ளே மீம்ஸ்கள் சும்மா ரெக்க கட்டி பறந்து வருகிறது.

மாயன் கையெழுத்து போட்டு விட்டாரே
இதுவரைக்கும் இந்த சீரியலில் முத்துராசுவை சுட்டது யார் என்று பெரும் குழப்பத்தோடு ஒரு மாத காலமாக சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் கடைசியாக முத்துராசு வை சுட்டது காயத்திரி தான் என்று காயத்ரியே ஒப்புக்கொண்ட பிறகு மாசாணி இந்த வீட்டை முத்துராசுவின் கொலைக்காக தங்களுக்கு எழுதி தரவேண்டும் என்று கூறவே மாயனும் எழுதிக் கொடுத்து விடுகிறார். இந்தநிலையில் மாசாணியும், முத்து ராசுவின் அம்மாவும் மாயனோட குடும்பத்தை அனைவரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தும்போது மாறன் என்ட்ரி கொடுக்கிறார். அதுவும் மாறனின் அம்மாவும் கூடவே வருகிறார். இவர்களுடைய புது என்ட்ரி பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கும் போது மாறனின் கெட்டப்பை பார்த்து தான் நெட்டிசன்கள் கண்கள் விரிவடைந்திருக்கிறது.

அப்போ கண்ணம்மா இப்போ மாறன்
எந்த சீரியலாக இருந்தாலும் அதில் சில ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள் இருந்தால் அதை அப்படியே மீம்ஸ்களாக பறக்க விட்டு வருகிறார்கள். ஏற்கனவே பாரதிகண்ணம்மா சீரியல் எப்படி வைரலானது என்று அனைவருக்குமே தெரியும். அதில் கண்ணம்மாவை கையில் பேக்கோடு உலகம் முழுக்க சுத்த விட்ட நெட்டிசன்கள் தற்போது மாறனின் கெட்டப்பை பார்த்து பழைய திரைப்படங்களில் வரும் டபுள்ஆக்ட் போட்டோக்களை வைத்து கலாய்த்து வருகின்றனர். அதுவும் தில்லு முல்லு படத்தில் ரஜினி நடித்ததிலிருந்து சிவா இரட்டை கேரக்டரில் போட்ட தில்லுமுல்லுகள் வரைக்கும் பல டெம்பிளேட்களை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

மாறன் நல்லவரா கெட்டவரா
இந்த சீரியலில் இனி மாறனின் என்ட்ரி எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும். ஏற்கனவே முத்துராசுவின் கொலை விறுவிறுப்போடு ஒளிபரப்பாகி வந்தது போல, தற்போது மாறன் நல்லவரா? கெட்டவரா? மாயனுக்கு உதவி சொல்வாரா? அல்லது அவருக்கு இனி எதிரி இவர்தானா? என்று பல்வேறு கோணத்தில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் என்னதான் இருந்தாலும் சீரியலின் போக்கை யாராலும் கெஸ் பண்ணவே முடியவில்லை.

இது செம மாஸ் சீன்
உண்மையில் மாறன் என்ட்ரி சீன் ரொம்பவே மாஸாக, கெத்தாக, சூப்பராக வந்திருக்கிறது. ஒரு அதிரடி சினிமாவில் வரும் ஹீரோ என்ட்ரிக்கு சற்றும் குறையாத வகையில் படு ஸ்டைலிஷாக இதை வடிவமைத்துள்ளனர். அதை ரசிகர்களும் ஆரவாரமாகவே வரவேற்றுள்ளனர் என்றுதான் கூற வேண்டும். செந்திலின் கெட்டப் சேஞ்ச் காமெடியாக இருந்தாலும் கூட அவர் காட்டிய ஸ்டைல், மாடுலேஷன் உண்மையிலேயே மாஸ்தான். அதை மறுப்பதற்கில்லை. வந்த வேகத்தில் துவம்சம் செய்வது போலவும் சீன் வைத்துள்ளனர்.. இனி போகப் போக சீரியல் களை கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications