Madarasi : " ஒரு நாள் நான் ஃபீல்ட் அவுட் ஆகும்போது! அனிருத் பேச பேச எமோஷனலான சிவகார்த்திகேயன்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது அப்போது அனிருத் பேசியதற்கு சிவகார்த்திகேயன் எமோஷனலாகி இருக்கிறார்.

அனிருத் - சிவகார்த்திகேயன் வெற்றி கூட்டணி
சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி, எப்போதும் வெற்றிக் கூட்டணியாகவே அமைந்திருக்கிறது. 'மதராஸி' இவர்களது கூட்டணியில் உருவாகும் எட்டாவது படம். இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்ததால், இவர்களது நட்பு மிகவும் ஆழமானது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத், "நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்னா, அதுக்கு காரணம் சிவகார்த்திகேயன் தான். என்னுடைய முதல் பிளாக்பஸ்டர் படம் 'எதிர்நீச்சல்'. அது சிவகார்த்திகேயன் நடித்த படம்.
இப்போது அவர் ₹50, ₹100, ₹300 கோடி என வசூல் அடித்துவிட்டார். 'மதராஸி' டிரெய்லரில், 'இது என் ஊருடா, நான் நிப்பேன்'னு சொல்வார். அதுமாதிரி, இது என் எஸ்.கே, நான் வந்து நிப்பேன்" என்று உருக்கமாகப் பேசினார்.
மனம் உருகிய சிவகார்த்திகேயன்
அனிருத் மேலும், "ஒரு நாள் நான் ஃபீல்ட் அவுட் ஆவேன், அப்போது என் மனம் சிவகார்த்திகேயன் ஜெயிக்கிறதை பார்த்து, நான் ஜெயித்ததாக நினைத்து சந்தோஷப்படும்" என்று கூறியதைக் கேட்ட சிவகார்த்திகேயன், மேடைக்குக் கீழே கண் கலங்கிப் போனார்.
சிவகார்த்திகேயன் பதிலுரை
அனிருத்தின் பேச்சுக்கு மேடையில் பதிலளித்த சிவகார்த்திகேயன், "அவர் ஃபீல்ட் அவுட் எல்லாம் ஆக மாட்டார். அதற்கு வாய்ப்பே கிடையாது. ஷாருக்கான் தொடங்கி எல்லாரையும் பார்த்துவிட்டார். ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கோடி என பல சாதனைகளை அவர் இன்னும் செய்ய வேண்டியிருக்கு" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், "அனிருத்துடன் நான் எந்த அளவுக்கு நெருக்கம் என்றால், நான் எந்த படம் கேட்டாலும் உடனே 'ஓகே' சொல்லிவிடுவார். ஆனால் அப்படி நான் போய் கேட்கவே மாட்டேன். அதுதான் அவருக்கு நான் கொடுக்கிற மரியாதை. ஒரு வேளை கேட்க போனால், அவருக்கு ஏற்றமாதிரி சரியான படத்துடன் தான் போய் கேட்பேன். வெற்றியை எப்படி கையாள்வது என்பதற்கு அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்" என்றும் தெரிவித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டு
அதே விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், "அனிருத் எனக்கு முதல் முறையாக 'துப்பாக்கி' போன்ற பெரிய படம் பண்ண வாய்ப்பு கொடுத்தார். அந்த நன்றிக்கடன் எனக்கு எப்போதுமே இருக்கு. இந்த படம் 'ஃபயரா' இருக்கும்" என்று உறுதியளித்தார். 'மதராஸி' திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு என மொத்தம் ஐந்து மொழிகளில் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன், அனிருத், ஏ.ஆர். முருகதாஸ் என இந்த நட்சத்திரங்களின் கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பக்கா ஆக்சன் ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications