மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!
சென்னை: கடந்த சில மாதங்களாக பரபரப்பை கிளப்பி வந்த மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. இதுவரை குற்றச்சாட்டு, மறுப்பு, எதிர்ப்பு என்று நீண்ட இந்த பிரச்சனையில், டிஎன்ஏ பரிசோதனை முடிவு வெளியாகியிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த விவகாரத்தின் மையப்புள்ளியாக இருந்தது ஜாய் கிரிஸில்டா கூறிய ஒரு குற்றச்சாட்டு. தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும், தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் முன்வைத்த கோரிக்கையே இந்த விவகாரத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்றது. அதற்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் பலமுறை தனது நிலையை விளக்கி, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜன் அறிக்கை
இந்நிலையில், "குழந்தை எனது என்றால் அறிவியல் முறையில் நிரூபிக்கட்டும்" என்று டிஎன்ஏ பரிசோதனைக்கு தயார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருந்தார். அதே நேரத்தில், "நான் முதலில் டிஎன்ஏ சோதனைக்கு தயார்" என்று ஜாயும் ஓபனாக சவால் விடுத்திருந்தார். இதனால் இந்த பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது.
டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட்
இப்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவில், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் வெளிவந்ததுமே சமூக வலைதளங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இதுவரை "உண்மை என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தவர்கள், தற்போது இந்த பரிசோதனை முடிவை மையமாக வைத்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர். சிலர் ஜாய்க்கு ஆதரவு தெரிவித்து வர, மற்றவர்கள் முழு அறிக்கை வெளிவர வேண்டும் என காத்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த டிஎன்ஏ முடிவு குறித்து இரு தரப்பினரிடமிருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த தகவல் எவ்வளவு உண்மை, நீதிமன்றத்தில் அது எப்படி முன்வைக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவு வரவில்லை.
இதே நேரத்தில், ஜாய் தன்னுடைய மகன் மாதம்பட்டி ரங்கராஜன் போலவே முக அழகிலும், கை விரல்களை மடக்குவதும் செய்கிறார் என்று பல போஸ்ட்டுகள் போட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய மகனின் புகைப்படங்களை முதல் முறையாக வெளியிட்டிருந்தார். அப்போது கூட பலரும் ஆமாம் இந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜன் போலத்தான் இருக்கிறது என்று சொல்லி வந்தனர்.
மொத்தத்தில், டிஎன்ஏ பரிசோதனை முடிவு வெளியானதாக கூறப்படும் இந்த புதிய தகவல், மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரத்தை மேலும் பரபரப்பான கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
-
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications