ஓய் பொண்டாட்டி.. மாதம்பட்டி ரங்கராஜூடன் ஜாலியாக வாழ்ந்துட்டு? பிளாக்மெயிலுக்கு சட்டம் துணை நிற்காது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று தெரிந்தும் ஏன் ஜாய் பழக வேண்டும்? மனைவிக்கு துரோகம் செய்யாதீர்கள் என்று ஜாய் சொல்ல வேண்டியதுதானே? மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்ததாக சொல்லும் ஜாய், நீதிமன்றத்தில் விவாகரத்து செய்ய வேண்டியதுதானே" என்றெல்லாம் மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் காட்டமாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

Kingwoods News என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "மாதம்பட்டி ரங்கராஜுன் மாலை மாற்றிகொண்ட போட்டோவை ஜாய் வெளியிட்டிருந்தார்.. அப்போதே இதுகுறித்து, மாதம்பட்டியின் முதல் மனைவி ஸ்ருதி புகார் தருவாரா? என்று பலரும் கேட்டார்கள்..

Television Madhampatti Rangaraj joy

அவர் ஏன் இதில் புகார் தர வேண்டும்? ஸ்ருதி ஒரு வழக்கறிஞராக உள்ள நிலையில், இந்த திருமணமே செல்லாது என்றபோது, கணவர் மீது புகார் தரவேண்டிய அவசியம் அவருக்கில்லை..

முறைப்படி திருமணம்

முறைப்படி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக ஜாய் சொன்னாலும், அது எடுபடாது.. நிச்சயதார்த்தம் என்ற டாக்குமென்ட்படி, பெரியோர்களால் நிச்சயித்து, ஊரை அழைத்து நடத்தப்படுவதுதான் முறைப்படி திருமணமாகும்.. பதிவுத்திருமணம் மட்டுமே முறைப்படி செய்ய முடியும்.. மற்றபடி கோயிலில், ஆலமரத்துக்குடி அடியில் தாலி கட்டும் திருமணங்கள் எதுவும் செல்லாது.

தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி என்று, போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார் ஜாய்.. தீர்ப்பு தரும் இடமா போலீஸ் ஸ்டேஷன்? தனக்கு நியாயம் வேண்டும் என்றால், கோர்ட்டுக்குதான் போக வேண்டும்.. டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து, நீதிமன்றத்தை நாடலாமே? ஏன் போலீஸ் ஸ்டேஷன் வரணும்?

செட்டில்மென்ட்

இவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, அப்பாவி உயிர் ஒன்று இந்த உலகுக்கு வருகிறதே ஏன்? இவர்கள் மகிழ்ச்சியாக இருந்ததற்கு, அந்த குழந்தை ஏன் அநாதையாக உருவாகணும்? மாதம்பட்டியிடம் செட்டில்மென்ட்தான் பேசிக் கொள்ளவேண்டும்.. செட்டில்மென்ட்டுக்கு பிறகு மாதம்பட்டி யார் என்றே தெரியாமல் போய்விடலாம் ஜாய்.

ஆனால், ஒருவரை பிளாக்மெயில் செய்வது மன்னிக்க முடியாதது.. அதிலும், ஒருவரிடம் நெருங்கி பழகிவிட்டு, கட்டிலில் குழந்தைகளாக இருந்துவிட்டு, அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, அந்த நபரை பொதுவெளியில் அசிங்கப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.. உண்மையான அன்புடன் பழகி, விலகுதல் என்று வந்தால், நாகரீகமாக பிரிந்துவிட வேண்டும்.

பிளாக்மெயில் சட்டம்

சட்டம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை நினைத்து விளையாடுகிறார்கள்.. பிளாக்மெயில் செய்வதற்கு எந்த சட்டமும் துணை நிற்காது.

மாதம்பட்டிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று தெரிந்தும் ஏன் ஜாய் பழக வேண்டும்? ஆண்கள் சபலப்பட்டே கேட்டாலும், பெண்கள் எதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்? மனைவிக்கு துரோகம் செய்யாதீர்கள் என்று ஜாய் சொல்ல வேண்டியதுதானே?

வறுமைக்காக தவறு செய்யவில்லை, மாறாக, வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தவறு செய்துவிட்டு, அதே ஆணை குற்றம் சொல்வது எந்தவிதத்தில் சரி? அப்படியானால் அந்த நபரை வைத்து சம்பாதித்த அத்தனை பணத்தையும், பெண்கள் திருப்பி தந்துடுங்க..

நயன்தாரா புகார் தந்தாரா

நயன்தாரா இப்படித்தான் தன்னை ஏமாற்றியவர்கள் மீது புகார் தந்து போலீஸ் ஸ்டேஷன் ஓடினாங்களா? சிம்பு முத்தம் தந்த வீடியோவை வெளியிட்டும்கூட, நயன்தாரா புகார் தரவில்லையே? காரணம், அவருக்கு இது வேலை கிடையாது.. வாழ்க்கையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதுதான் நயன்தாராவின் எண்ணமாக இருந்தது. அதுதான் அவரது சக்ஸஸ்.

ஆனால், காதலித்தவர்களை பழி வாங்கி கொண்டு, பொதுவெளியில் அசிங்கப்படுத்தி, பிளாக்மெயில் செய்பவர்கள் எல்லாம் என்ன சொல்வது? தங்களது துறைகளில் உச்சத்தை அடையும் வழிகளை நோக்கி போக வேண்டியதுதானே? மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்ததாக சொல்லும் ஜாய், நீதிமன்றத்தில் விவாகரத்து செய்ய வேண்டியதுதானே" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+