இரண்டாவது திருமணம், குழந்தையை ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்! விசாரணையில் நடந்தது இது! ஜாய் கிரிஸில்டா பதிவு
சென்னை: தமிழ் திரையுலகில் சமீபகாலமாகப் பெரும் சர்ச்சையையும், பேசுபொருளையும் ஏற்படுத்தி வந்த, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா விவகாரத்தில், இறுதியாக ஒரு முக்கியத் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. மகளிர் ஆணையத்தின் (Women's Commission) விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ், "ஜாய் கிரிஸில்டாவைக் காதலித்துத் திருமணம் செய்ததாகவும், குழந்தை தனக்குத்தான் சொந்தம்" என்றும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று இந்த தகவலை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ், மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்டப் படங்களில் நடித்துப் பிரபலமானவர். ஜாய் கிரிஸில்டா நடிகர் விஜய் உட்பட பல பெரிய நடிகர்களுக்கு டிசைனராக பணியாற்றி இருக்கிறார், அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். இவர்களுக்கு இடையே இருந்த உறவு குறித்துக் கடந்த சில மாதங்களாகவேச் சமூக வலைதளங்களில் சலசலப்பு நீடித்து வந்தது.
இந்தச் சலசலப்புகளுக்கு நடுவே, சமீபத்தில் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அவர், குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதனுடன் மாதம்பட்டி ரங்கராஜின் படத்தையும் இணைத்து, "#carboncopyofhisfatherface" (அப்பாவின் முகத்தின் கார்பன் காப்பி) மற்றும் "#junior madhampattyrangaraj" (ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ்) என்றுப் பதிவிட்டு, ரங்கராஜ்தான் குழந்தையின் தந்தை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், குழந்தைக்கு "RaghaRangaraj" (ரகா ரங்கராஜ்)** என்று பெயரிட்டிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

மகளிர் ஆணையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தொடர்ந்து இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில், இதுகுறித்து மகளிர் ஆணையத்தில் (Women's Commission) விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது அந்த விசாரணையின் முடிவை ஜாய் கிரிஸில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளிப்படையாகப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில், எனது முன்னாள் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ், என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும், இந்தக் குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்" என்றுத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ரங்கராஜ், ஆணையத்தின் முன், "குழந்தையின் தந்தை நான் தான்" என்று ஒப்புக்கொண்டதால், "இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்; நீதி நிலைநாட்டப்படும்" என்ற நம்பிக்கையுடன் "#justice will prevail" என்ற ஹேஷ்டேக்கையும் ஜாய் கிரிஸில்டா இணைத்துள்ளார்.
நீண்ட நாட்களாகத் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடிய ஜாய் கிரிஸில்டாவுக்கு, இந்த ஒப்புதல் ஒரு பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இனிமேல், இந்தப் பிரச்சனையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன இருக்கும் என்றும், இது திரையுலகில் என்ன மாதிரியானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications