பிரபல நடிகர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு தேவையா? இதான் ஏழரை சனின்றது.. ரேவதிகூட நடிக்கலாம்ல: பிரபலம் நச்
சென்னை: ரேவதிக்கு ஜோடியாக நடிக்க இருந்த படத்திலிருந்து, திடீரென மாதம்பட்டி ரங்கராஜ் மாற்றப்பட்டுவிட்டாராம்.. இதற்குரிய காரணம் என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் விரிவாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கே எஸ் அதியமான், தூரத்து சொந்தம் என்ற தமிழ் படத்தின் மூலம் 1992ம் ஆண்டு டைரக்டராக அறிமுகமானவர்.. கிட்டத்தட்ட 10 படங்களை இயக்கி இருந்தாலும், இவை அனைத்துமே உணர்வுப்பூர்வமான குடும்ப கதைகளாகவே அமைந்திருக்கும்.

தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி, தலைமுறை, தூண்டில் போன்ற படங்கள் அதியமானுக்கு வெற்றியை தேடித்தந்த படமாகும். இதில் தொட்டாசிணுங்கி படம், அதியமானின் வெற்றியை வேறொரு கட்டத்துக்கு நகர்த்தி சென்றது.
1995-ல் வெளியாகியிருந்த இந்த படத்தில், கார்த்திக், ரகுவரன், ரேவதி, தேவயானி ஆகியோர் இணைந்து நடித்திருந்தார்கள்.. இந்த படத்தில் ரகுவரன், கோபால் என்ற வில்லன் கேரக்டரால் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றார்.. கொடூரமான சேடிஸ்ட்டாக நடித்து மிரட்டி இருப்பார்.
அதியமான்: இந்நிலையில், 13 வருடங்கள் கழித்து மறுபடியும் தமிழ் படம் ஒன்றை இயக்க உள்ளார் கேஎஸ் அதியமான்.. இதுகுறித்து King 24X7 யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.
அதில் "பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்பதால், ரேவதி இதில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார்.. இதற்காக ரேவதியையும் அணுகியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கேரக்டர் என்பதால், அந்த கதையை கேட்டதுமே ரேவதிக்கு பிடித்துவிட்டது. அதனால், அந்த படத்தில் நடிப்பதாக கூறி, அதியமானிடம் கால்ஷீட்டும் தந்துவிட்டார் ரேவதி. அதேபோல, இந்த படத்தில் ஹீரோவாக பிரபல சமயல்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
மாதம்பட்டி ரங்கராஜ்: இந்நிலையில் யாரிந்த படத்தின் ஹீரோ என்று, அதியமானிடம் கேட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.. அதற்கு அதியமான், நம்முடைய பேச்சை கேட்கிற, நம்முடைய பட்ஜெட்டுக்குள் ஒத்துக்கொள்கிற ஹீரோவை போடலாம் என்று சொல்லி, மாதம்பட்டி ரங்கராஜ் பெயரையும் சொல்லியிருக்கிறார்.
பிறகு ரங்கராஜ் கேஎஸ் அதியமானிடம், "இந்த படத்தில் தற்போதுள்ள தயாரிப்பாளர் வேண்டாம், வேறு புது தயாரிப்பாளர் இதை தயாரித்தால் நன்றாக இருக்கும்" என்றாராம்.
வேறு தயாரிப்பாளர்: உடனே இந்த விஷயத்தை தற்போதுள்ள தயாரிப்பாளரிடம் அதியமான் சொல்லி உள்ளார்.. "உங்களுக்கு பதிலாக வேற புது தயாரிப்பாளரை போடலாம் என்று மாதம்பட்டி சொல்கிறார். அவரே யாரோ ஒரு தயாரிப்பாளரை கையில் வைத்திருக்கிறாராம்" என்றார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர், "அப்படியானால், முதல்ல இந்த கதாநாயகனை மாற்றுவோம், வேற ஹீரோவை போடுங்க" என்று சொல்லிவிட்டாராம். இதனால் வேறு புது ஹீரோவை அதியமான் தேடி கொண்டிருக்கிறாராம்.
படத்தில் கல்தா: ரேவதியுடன் நடிக்க வந்த வாய்ப்பை பேசாமல் ஒப்புக் கொள்ளாமல், மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலையால், இப்போது அந்த படத்திலிருந்தே அவருக்கு கல்தா கொடுத்துவிட்டார்கள். இதுதான் ஏழரை சனின்னு சொல்றது" என்று தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் என 2 படங்களில் நடித்துள்ளார். தற்போது ஓட்டல் பிசினஸில் புகழ்பெற்று வருகிறார்.. இதைத்தவிர, மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications