சர்ச்சைக்கு மத்தியில் மாதம்பட்டி ரங்கராஜ் பதிவு! ஜாய் கிறிஸ்டில்லா அப்படி சொன்னாரே? அப்போ நிலைமை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிஸில்டா தினமும் போஸ்ட் போட்டு கலாய்த்து கொண்டிருக்கிறார். என் புருஷனை காணவில்லை, அவரை கண்டால் வர சொல்லுங்க என்று இன்று காலையில் கூட ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜன் இப்போது ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது இணையதில் வைரலாகி வருகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் சோசியல் மீடியா பயன்படுத்தும் பலருக்கும் பரிட்சயமானவர்தான். சோசியல் மீடியாவில் இவர் சமையல் செய்யும் வீடியோக்கள் ட்ரெண்டானது. அதிலும் நாவல் பழ சட்னி, கொய்யாக்காய் சட்னி எல்லாம் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. வித்தியாசமான சமையல் செய்து பல பிரபலங்களின் வீட்டில் இவருடைய சமையலே ஜொலித்தது.

Madhampatty Rangaraj vijay tv cook with comali

திடீரென பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் இரண்டு சீசனாக அவர் நடுவராக தொடர்ந்து வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மகளிர் ஆணையத்தில புகார் அளித்திருந்தார். அதில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் தன்னிடம் இருந்து விலகி விட்டார் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார்.

அந்த புகாரின் பேரில் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை முடிவடைந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

மகளிர் ஆணையம் சொன்ன தகவலுக்கு மாதம்பட்டி ரங்கராஜன் மறுப்பு தெரிவித்து இருந்தார். மகளிர் ஆணையத்திடம் நான் ஜாய்யை விருப்பப்பட்டு திருமணம் செய்தேன் என்று சொல்லவே இல்லை, ஜாய் குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அந்த குழந்தை என்னுடையது என்று நிரூபணம் ஆனால் நான் அந்த குழந்தையை ஏற்றுக் கொள்கிறேன் என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் போஸ்ட் போட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுவரை அவர் டி என் ஏ டெஸ்ட் எடுக்க வரவில்லை என்று தொடர்ச்சியாக ஜாய் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இன்று தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் ஜாய் வெளியிட்ட பதிவில், ராகா ரங்கராஜ் அப்பா மாதம்பட்டி ரங்கராஜை கடந்த ஒரு மாதமாக காணவில்லை. டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க சொன்னவர் இப்போ தலைமறைவாக இருக்கிறார். அவரை ஈவண்டில் யாராவது பார்த்தால் உடனே எனக்கு டிஎம் செய்யவும்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம் அதான் ஒளிந்து ஓடுகிறார். ப்ரூப் பண்ணிவிட்டால் சார் மாட்டிப்பார் என பயப்படுகிறார் போல, நீங்கள் தான் எல்லாவற்றையும் லீகலா ஃபேஸ் பண்ற ஆளாச்சே இதை மட்டும் ஏன் உங்களால் லீகலா ஃபேஸ் பண்ண முடியல. அன்பு கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னை நீங்கள் ஏமாற்றலாம், ஊரை நீங்கள் ஏமாற்றலாம், சுற்றி இருக்கிறவங்களை ஏமாற்றலாம். ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் நீங்கள் ஏமாற்ற முடியாது.

கர்மா என்று ஒன்று இருக்கிறது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். செய்த செயலுக்கான பலனை நிச்சயம் நீங்கள் அனுபவித்து தான் ஆகவேண்டும் என்று ஜாய் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு காலையிலிருந்து இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் இப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் சிறப்பான நடுவருக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அதை அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ஆனால் கமெண்ட் செக்ஷனை ஆப் செய்து வைத்திருக்கிறார். ஆனாலும் இந்த வீடியோ ஷேர் ஆகி வருகிறது. யார் என்னை பற்றி என்ன சொன்னாலும் நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டே இருக்கிறேன், நான் ரொம்ப பிசி என்று மாதம்பட்டி ரங்கராஜ் சொல்கிறாரா? என்று சிலர் சீண்டி பார்த்து வருகிறார்கள். இந்த பதிவை வைத்து ஜாய் என்ன போஸ்ட் போடப் போகிறார் என்றும் சிலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+