Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாய் கிரிஸில்டா மிரட்டி கல்யாணம் பண்ணுனாங்க! மாதம்பட்டி ரங்கராஜன் போஸ்ட், முதல் மனைவியின் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் நடிகை ஜாய் கிரிஸில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம், முடிவடையாமல் மீண்டும் ஒரு புதிய போராட்ட களத்தை எட்டியுள்ளது. ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் திருமணத்தையும், குழந்தையையும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்த நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவித்து ரங்கராஜ் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்தச் சூழலில், முதல் மனைவி ஸ்ருதி, ரங்கராஜுக்கு ஆதரவாக அந்த அறிக்கையைப் பகிர்ந்துள்ளதால், மீண்டும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Madhampatty Rangaraj vijay tv cook with comali

ஜாய் கிரிஸில்டாவின் அறிவிப்பு

நேற்று முன்தினம், நடிகை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பரபரப்பானப் பதிவை வெளியிட்டிருந்தார். "மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில், எனது முன்னாள் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ், என்னை காதலித்துத் திருமணம் செய்ததையும், இந்த குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்" என்றுத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ரங்கராஜ், ஆணையத்தின் முன் "குழந்தையின் தந்தை நான் தான்" என்று ஒப்புக்கொண்டதால், "இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்; நீதி நிலைநாட்டப்படும்" என்ற நம்பிக்கையுடன் "#justice will prevail" என்ற ஹேஷ்டேக்கையும் ஜாய் கிரிஸில்டா இணைத்திருந்தார்.

ரங்கராஜின் மறுப்பு

ஜாய் கிரிஸில்டாவின் இந்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். "நான் என் சுய விருப்பமின்றி (under free will) திருமணம் செய்து கொண்டதாகச் சொல்வது உண்மை அல்ல. என்னை அவதூறு செய்வதாக மிரட்டி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாகப் பயமுறுத்தியதால், அந்தச் சூழ்நிலைக்கு நான் கட்டுப்பட வேண்டியதாயிற்று" என்று ரங்கராஜ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

குழந்தை குறித்த சந்தேகம்: "நான் ஒருபோதும் பிரசாதனம் மற்றும் வேறு எந்தக் கோரிக்கையையும் ஏற்கவில்லை. மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் (DNA test), அந்தக் குழந்தைக்கான வாழ்நாள் முழுச் செலவையும் ஏற்றுக்கொள்வேன்' என்றும் கூறியிருந்தேன்" என்று ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

ஆணையத்தில் மறுப்பு

மகளிர் ஆணையத்தின் பதிவு குறிப்பில் நான் எந்த ஒப்புதலையும் தரவில்லை. இந்த உரிமை மீறல் குறித்து ஆணையத்திற்குப் பதிலளித்துள்ளேன். சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Madhampatty Rangaraj vijay tv cook with comali

முதல் மனைவி ஸ்ருதியின் ஆதரவு

இந்தச் சிக்கலான சூழலில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ், தனது கணவருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார். ஸ்ருதி ரங்கராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள முழு அறிக்கையையும் பகிர்ந்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அவர் முதலில் கமெண்ட் செக்ஷனை ஆன் செய்து வைத்திருந்தபோது, அதிகப்படியான கமெண்ட்கள் குவிந்தன. சில ரசிகர்கள், "முதல் மனைவி இருக்கும்போது இதுபோன்று குடும்பத்தில் நுழையும் பெண்களுக்கு நீங்கள் சரியான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்" என்று ஸ்ருதியின் செயலைப் பாராட்டி இருந்தனர்.

எதிர்ப்பு கேள்விகள்

ஆனால், இன்னும் சிலர், "உங்கள் கணவர் இன்னொருப் பெண்ணின் வாழ்க்கையை ஏமாற்றியிருக்கிறார்? அவருக்கு நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "ரங்கராஜ் அந்தக் குழந்தை அறிவியல் பூர்வமாக என்னுடையது என்று சொன்னால், நீங்கள் அந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்வீர்களா?" என்றும் ரசிகர்கள் கேட்டிருந்தனர்.

கமெண்ட் மூடல்

விமர்சனங்களும், கேள்விகளும் அதிகமாக வந்ததால், உடனடியாக ஸ்ருதி ரங்கராஜ் தனதுப் பதிவின் கமெண்ட் செக்ஷனை ஆஃப் (Off) செய்து வைத்தார். தற்போது ரங்கராஜ் மீண்டும் தன் நிலையை மாற்றிக் கொண்டதால், இந்தப் பிரச்சனை மீண்டும் நீதிமன்றப் படியேற வாய்ப்பு உள்ளது. நீண்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த நிம்மதி, ஜாய் கிரிஸில்டாவுக்கு நிலைக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+