Rangaraj: ஜாய் நோக்கம் இதுதான்! அவர் கைப்பட எழுதிய கடிதம் இருக்கு! மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதி அறிக்கை
சென்னை: பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இடையே நீடித்து வரும் குடும்பப் பிரச்சனை, ஒரு கட்டத்துக்கு வரவில்லை. இருவரும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டுவரும் நிலையில், ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி பிரியா ரங்கராஜ் இப்போது பிரச்சனைக்குள் வந்து, ஜாய் கிறிஸ்டில்லாவின் நோக்கம் பணம் பறிப்பதும், குடும்பத்தை நாசமாக்குவதும் தான் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

பிரச்சனையின் சுருக்கம்
'தன்னை திருமணம் செய்துவிட்டு தற்போது சேர்ந்து வாழ மறுக்கிறார்' என்று ஏற்கெனவே திருமணமான ரங்கராஜ் மீது ஜாய் காவல் நிலையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தார். ரங்கராஜ் தனது அறிக்கையில், தான் ஜாய்யை தன்னிச்சையாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரிலேயே கட்டாயப்படுத்தப்பட்டது என்றும், இதன் நோக்கம் பணம் பறிப்பதுதான் என்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், தான் டி.என்.ஏ பரிசோதனையை ஒருபோதும் மறுக்கவில்லை என்றும், குழந்தை அறிவியல் பூர்வமாகத் தன்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.
ஜாய்யின் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்த ஜாய், ரங்கராஜ் தனக்கு அனுப்பிய ஒரு ரொமான்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த வீடியோவில் ரங்கராஜ், "என் பொண்டாட்டி! நீ அவ்வளவு அழகு சொல்ல வார்த்தையே இல்லை. நான் உன்னை மிஸ் பண்றேன். சீக்கிரமா வந்துரு" என்று பேசியிருந்தார். இந்த வீடியோவைப் பகிர்ந்து, "இந்த வீடியோ என்னை மிரட்டலின் பெயரில் அனுப்பியதா? கேட்கிறவன் கேனையனா இருந்தா, கேப்பையில் நெய் வடிகிறதுனு சொல்ற மாதிரி இருக்கு" என்று ஜாய் கேள்வி எழுப்பினார்.
முதல் மனைவி ஸ்ருதியின் களமிறக்கம்
இந்த மோதல்களுக்கு மத்தியில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி பிரியா ரங்கராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தனது கணவருக்கு ஆதரவாகக் களமிறங்கி உள்ளார்.
ஸ்ருதி தனது பதிவில், "மார்ச் 2025இல் நான் என் குடும்பப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டபோது, ஏப்ரல் 2025லேயே ஜாய்யிடமிருந்து ஒழுக்கம் அற்ற மற்றும் அவமதிப்பான செய்திகளை பெற்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார். "நீதிமன்ற ரீதியாக பிரிந்ததாகப் பொய்யாக சொல்லி, கூறும் ஒருவர் இப்படிப்பட்ட செய்திகளை அனுப்புவது ஏன்? இதுவே அவருடைய இரட்டை முகத்தனத்தை வெளிக்கொணறுகிறது".
மேலும், "அவர் ஊடகங்களைத் தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்திற்காகத் தவறாக பயன்படுத்தி, எங்கள் குடும்ப அமைதியைக் குறைக்க முயற்சி செய்வது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது" என்றும் கூறியுள்ளார்.
"ஜாய் தனது சொந்தக் கையெழுத்தில் எழுதிய கடிதத்தில் எனது கணவர் திரு. ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களை பிரிப்பது தான் தனது நோக்கம் என்று வெளிப்படையாகக் கூறியிருப்பது பதிவாக உள்ளது" என்றுச் சுருதி தெரிவித்துள்ளார்.
ஜாய் கடிதத்தில் உள்ளதாக ஸ்ருதி மேற்கோள் காட்டியுள்ளப் பகுதிகள்:
பிரிவு 4: "பொருளாதார தேவைகளை ரங்கராஜ் கவனிக்க வேண்டும்."
பிரிவு 6: "ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகம் முன் அறிமுகப்படுத்த வேண்டும்."
பிரிவு 8: "ரங்கராஜ் எனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும். மற்றும் ரங்கராஜ் எனக்கு மாதம் 8,00,000 ரூபாய் வழங்க வேண்டும்."
பிரிவு 9: இப்போது எனக்கு 10,00,000 வேண்டும்.
பிரிவு 12: "ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும்."
ஸ்ருதி தனது முடிவை, "இந்த வரிகளை ஜாய் உண்மையான நோக்கம் - பணம் பறிப்பு மற்றும் சட்டபூர்வமான மனைவியான எனக்கான குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது- என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. நான் என் கணவர் திரு. ரங்கராஜ் அவர்களுடன் உறுதி ஆக நிற்கிறேன். அவரை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்று முடிக்கிறார். இந்த அறிக்கையுடன், ஜாய் ஸ்ருதி பிரியாவுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீன் ஷாட்களையும் ஸ்ருதி பகிர்ந்துள்ளார்.
தற்போது, இந்த பிரச்சனை கணவர், முதல் மனைவி மற்றும் இரண்டாவது பெண் என்று முக்கோண போராட்டமாக உருவெடுத்துள்ளது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications