மிரட்டினாங்கன்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்கு? மாதம்பட்டி ரங்கராஜின் அறிக்கைக்கு மகளிர் ஆணைய தலைவர் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மற்றும் சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா விவகாரம், மகளிர் ஆணையத்தின் (Women's Commission) அறிக்கை மற்றும் ரங்கராஜின் மறுப்பு ஆகியவற்றால், ஒரு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. "ஜாய் என்னை மிரட்டியதால் தான் நான் திருமணம் செய்தேன் என்று ரங்கராஜ் பொதுவெளியில் மறுப்புத் தெரிவித்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் மகளிர் ஆணையத் தலைவர் பேசியிருப்பது, இந்த பிரச்சனை இப்போதைக்கு ஓயாது என்பதைக் காட்டுகிறது.

Madhampatty Rangaraj vijay tv cook with comali

ஜாய் கிரிஸில்டாவின் புகார்

'தன்னை திருமணம் செய்துவிட்டு தற்போது சேர்ந்து வாழ மறுக்கிறார்' என்று ஏற்கெனவே திருமணமான ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா போலீஸில் புகார் கொடுத்ததுடன், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக இருவரையும் இரண்டு முறை அழைத்து விசாரித்த மகளிர் ஆணையம், நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

ரங்கராஜின் ஒப்புதல்

அந்த அறிக்கையில், ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவைத் திருமணம் செய்ததை ஒப்பு கொண்டார் எனவும், அவருக்குப் பிறந்த‌ குழந்தைக்கு தந்தை தான் தான் என்றும் ஒப்புக் கொண்டார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

ரங்கராஜின் மறுப்பு

மகளிர் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களிலேயே, ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். "மகளிர் ஆணைய அறிக்கையில் குறிப்பிட்டது போல் தான் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், "ஆணையத்தின் பரிந்துரை உத்தரவுக்கு எதிராக‌ நீதிமன்றத்தில் முறையிட போகிறேன்" என்றும் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மகளிர் ஆணைய தலைவரின் பதிலடி

ஆணையத்தின் உள்ளே ஒன்றைப் பேசிவிட்டு, வெளியில் அதை மறுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி தனியார் சேனல் உரிச்சு இருக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். "ஆணையத்துல ஆஜரான அன்னைக்குத் தனக்கு அந்தப் பெண்ணுடன் திருமணம் நடந்ததை ஒத்துக்கிட்டவர், இப்ப ஏன் இப்படியொரு அறிக்கை தர்றார்னு தெரியலை" என்று தலைவர் குமாரி கூறியிருக்கிறார்.

"தான் மிரட்டப்பட்டு நடந்த கல்யாணம்னு இப்ப சொல்றார். அந்த பொண்ணு இவரை மிரட்டினாங்கன்னு சொன்னா நம்பற மாதிரியாங்க இருக்கு. நல்ல காமெடினு இதை எடுத்துக்கலாம்" என்று ரங்கராஜின் கருத்தை அவர் கேலி செய்திருக்கிறார். "சோஷியல் மீடியாவுலயே வாழ்ந்திட்டிருக்கிறவர்னு நினைக்கிறேன். அதனால அங்க எதையாச்சும் பேசிட்டுப் போகட்டும். அது பத்தி எங்களுக்குக் கவலையில்லை. நாங்க எங்க கடமையை சரியா செய்திருக்கோம்" என அவர் முடித்துக் கொண்டார்.

மகளிர் ஆணையம் சொல்வது பொய் என்கிற ரீதியில் ஒருவர் பொதுவெளியில் பேசுகிறார் என்றால், ஆணையத்தின் மீது பெண்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்றக் கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜன் வெளியிட்ட அறிக்கையை அவருடைய முதல் மனைவி ஸ்ருதி தன்னுடைய ஸ்பெஷல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து தன்னுடைய கணவருக்கு சப்போர்ட் கொடுத்து இருக்கிறார். ஆனால் ஜாய் கிறிஸ்ட்டிலா தற்போது இந்த செய்தி பப்ளிஷ் ஆகும் வரைக்கும் எந்த பதில் போஸ்ட்டும் போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+