மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய சர்ச்சைக்கு விளக்கம்! ஜோய் கிரிசில்டா வெளியிட்ட திடீர் பதிவு! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல உணவுத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜன் குறித்த விவாதம் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளது. காரணம், ஆடை வடிவமைப்பாளர் ஜோய்கிரிசில்டா, ரங்கராஜனுடன் தனக்குத் திருமணம் ஆகிவிட்டதாகவும், விரைவில் குழந்தை பிறக்கப் போவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருப்பதுதான். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ரங்கராஜனின் முதல் மனைவி ஸ்ருதி மற்றும் கடந்த ஒரு வருடமாக நீடித்த மர்மம் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜோய்கிரிசில்டாவின் மகிழ்ச்சி அறிவிப்பு
மாதம்பட்டி ரங்கராஜனுக்கு இரண்டாவது திருமணம் பற்றிய செய்திகள் வைரலாகி வரும் நிலையில் மீண்டும் ஜோய்கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "சில பயணங்கள் அமைதியாகத் தொடங்கினாலும், நம்பிக்கையுடன் வளர்கின்றன. நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு (திரு & திருமதி ரங்கராஜ்) அன்பு, கண்ணியம், முழு மனதுடனும், மரியாதையுடனும் கணவன் மனைவியாக எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இந்த ஆண்டு, ஆழ்ந்த நன்றியுடனும், அமைதி மற்றும் அன்புடன் எங்கள் குட்டி குழந்தையை வரவேற்க நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்புடன், #madhampattyrangaraj, #GratefulJourney, #ParenthoodWithGrace, #LoveOverTime, #babyraharangaraj போன்ற ஹாஷ்டாகளையும் பயன்படுத்தியிருந்தார்.
மர்மமான முதல் திருமணம்
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே ஜோய்கிரிசில்டா ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தாலி அணிந்திருந்தார். இந்தப் புகைப்படத்தில் அவரது நெற்றியில் குங்குமமும் இருந்தது. அதே தாலியைத்தான் மாதம்பட்டி ரங்கராஜனுடன் திருமணம் நடந்தபோது எடுத்த புகைப்படத்திலும் ஜோய்கிரிசில்டா அணிந்திருக்கிறார். இதனால், அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்து விட்டதா என்ற கேள்விகள் இணையத்தில் எழுந்துள்ளன.
மாதம்பட்டி ரங்கராஜனின் மௌனம்
மாதம்பட்டி ரங்கராஜன், தனது சமையல் திறமை மற்றும் உணவுத் தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபலமானவர். மேலும், அவர் சில தமிழ்ப் படங்களில் நடித்தும் இருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வளவாக வெளியில் பேசாத ரங்கராஜன், ஜோய்கிரிசில்டாவின் இந்த அறிவிப்பு குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ரங்கராஜனின் மௌனம், இந்த விவகாரத்திற்கு மேலும் மர்மத்தைச் சேர்த்துள்ளது.
ஸ்ருதி ரங்கராஜன் - முதல் மனைவி
மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவி ஸ்ருதி ஆவார். இவர்களுக்குக் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ரங்கராஜன் மற்றும் ஜோய்கிரிசில்டாவின் இந்த அறிவிப்பு வெளியான பிறகும்கூட, ஸ்ருதி இது குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

ஜோய்கிரிசில்டாவின் தொடர் பதிவுகள்
ஒருபுறம் ரங்கராஜனும், ஸ்ருதியும் மௌனம் காக்க, ஜோய்கிரிசில்டா மட்டும் தொடர்ந்து புகைப்படங்களையும், மகிழ்ச்சிப் பதிவுகளையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்த தெளிவான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் மாதம்பட்டி ரங்கராஜனின் இந்தத் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications