MadhaRasi: கதையே இல்லாத ‘மதராஸி’! திடீர் தளபதியை முருகதாஸ் பலி கொடுத்துட்டாரு! புளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த 'மதராஸி' திரைப்படம், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகிவிட்டது. அனிருத் இசை அமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் ஒரு பக்கம் நன்றாக இருக்க, மறுபக்கம் புளூ சட்டை மாறன் போன்ற விமர்சகர்களின் கருத்துக்கள் மிகவும் கடுமையாக உள்ளன.

விமர்சனம்
படம் வெளியானதுமே, இதன் முதல் நாள் வசூல் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 'மதராஸி' திரைப்படம், முதல் நாளில் உலக அளவில் சுமார் ₹13 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ₹10 கோடியும் வசூலித்துள்ளது. இந்த வசூல் ஒரு நல்ல ஆரம்பம்தான். ஆனால், வசூலைத் தாண்டி, படத்தின் உள்ளடக்கம் பற்றி விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்? குறிப்பாக, புளூ சட்டை மாறன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
கதை இதுதான்
புளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தில், படத்தின் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறார். "அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில், துப்பாக்கி கலாச்சாரத்தைக் கொண்டு வர ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. இதைக் கண்டுபிடிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரி அதைத் தடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் அதையும் மீறி, 5 லாரிகளில் ஆயுதங்கள் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுகிறது. இந்த நேரத்தில், காதலில் தோல்வியடைந்ததால் தற்கொலைதான் செய்வேன் என்று ஹீரோ சுற்றிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த என்.ஐ.ஏ. அதிகாரி, ஒரு முடிவுக்கு வருகிறார். நம்ம டீமில் உள்ள தளபதியை பலி கொடுப்பதற்கு பதிலாக, இந்தத் திடீர் தளபதியை நாம் பலி கொடுப்போம் என்று முடிவு செய்கிறார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை."
"இந்தக் கதையை, 'கஜினி'யில் ஒரு பாதியையும், 'துப்பாக்கி'யில் மீதி பாதியையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அடித்து முருகதாஸ் கொடுத்திருக்கிறார்" என்று விமர்சித்துள்ளார் புளூ சட்டை மாறன்.
இடைவேளை
இந்த மாதிரி படங்களில் வில்லன் கதாபாத்திரம் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்பது புளூ சட்டை மாறனின் கருத்து. ஆனால், 'மதராஸி'யில் இடைவேளையிலேயே படமே முடிந்துவிட்டதாக அவர் கூறுகிறார். "ஹீரோ எதனால் தற்கொலை செய்யப் போறாரோ, அதனாலேயே இந்த படம் முடிந்துவிட்டது. அந்த டைம்ல ஹீரோயினை அந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒருவேலை சொல்லுவாங்க. அதை மட்டும் ஒழுங்கா முடிச்சிருந்தா படம் முடிந்திருக்கும்" என்று அவர் சொல்கிறார். இடைவேளைக்கு அப்புறம் தேவையில்லாமல் கதையை இழுஇழுவென ஜவ்வாக இழுத்து, கதை இல்லாமல் இழுத்து வைத்ததால் படம் ரொம்பவே சுமாரான படமாகப் போச்சு என்றும் அவர் விமர்சித்துள்ளார். முதல் பாதி நன்றாக இருந்தாலும், ஹீரோவுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் சீன் இருக்கும், அதெல்லாம் சுத்தமா வேலைக்காகவில்லை என்றும் கூறுகிறார்.
பொம்மை துப்பாக்கி
புளூ சட்டை மாறன் படத்தில் ஒரு நல்ல விஷயம் இருப்பதாகவும் கூறுகிறார். "படத்தில் காமெடி பண்றேன், அது பண்றேன், இது பண்றேன் என்று சொல்லி யோகி பாபு மாதிரி ஒரு ஆளைக் கொண்டு வந்து மேற்கொண்டு சாகடிக்கவில்லை" என்று கிண்டலாகச் சொல்கிறார்.
அதே சமயம், "படத்துடைய ஆரம்பத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்து எல்லாரையும் அழிக்கப் போறாங்க அப்படின்னு பயமுறுத்தி படத்தை ஆரம்பிக்கிறாங்க. அப்புறம் அவங்க கொண்டு வந்த துப்பாக்கியை வச்சு சுட்டா, ஹீரோவைச் சுட்டாலும் சாக மாட்டேங்குறாங்க. வில்லனைச் சுட்டாலும் சாக மாட்டேங்குறாங்க, எல்லாம் அடுத்த சீன்லயே எந்திரிச்சு வந்துட்டாங்க. இதுக்கு எதுக்கு துப்பாக்கியைக் கொண்டு வந்து விக்க வராங்கன்னு தெரியல. பொம்மை துப்பாக்கி அப்படின்னு சொல்லி விற்க அனுமதி கொடுத்திருக்கலாம். இந்த படமும் எடுக்க தேவையில்லை" என்று வழக்கம்போல கலாய்த்துத் தள்ளிவிட்டார்.
மொத்தத்தில், 'மதராஸி' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல தொடக்கத்தைப் பெற்றிருந்தாலும், புளூ சட்டை மாறனின் விமர்சனம் படக்குழுவினருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications