Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madharasi 4th day Box Office: மதராஸியின் 4வது நாள் வசூல் இவ்வளவு தானா? தடுமாறும் சிவகார்த்திகேயன் படம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: (MadharasiBox Office Collection) தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற அமரன் திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற திரைப்படத்தில் நடித்தார். பராசக்தி படத்திற்கு முன்பே முதலில் படப்பிடிப்பு முடிந்து மதராஸி திரைக்கு வந்தது. அனிருத் இசையமைத்த இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருந்தார். இவர்களுடன் பிஜு மேனன், வித்யூத் ஜமால், ஷபீர் கல்லரக்கல், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

MadhaRasi Review Sivakarthikeyan Blue Sattai Maaran

கலவையான விமர்சனங்கள் - வசூல் நிலவரம்

மதராஸி திரைப்படம் பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. கஜினி படத்தில் சூர்யாவுக்கு அமைந்தது போல, காதலித்த பெண்ணிற்காக எதையும் செய்யும் ஒரு உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் அசத்தியிருக்கிறார். குறிப்பாக, ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் அதகளம் செய்திருக்கிறார். அதேபோல், படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருந்தாலும், பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இருப்பினும், பின்னணி இசை ஓரளவுக்கு நன்றாகவே வந்திருக்கிறது.

படம் ரிலீஸாவதற்கு முன்பு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், இந்தப் படத்திற்கு முன்பதிவு மந்தமாகவே இருந்தது. மேலும், படத்தின் திரைக்கதை சிறப்பாக இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இதன் காரணமாக படம் வெளியாகி நான்காவது நாளிலேயே வசூல் குறைந்துவிட்டது.

பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் - முதல் 4 நாட்கள்

பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் சாக்னிக் இணையதளத்தின்படி, மதராஸி படத்தின் முதல் 4 நாட்களின் வசூல் நிலவரம் பின்வருமாறு:

முதல் நாள்: இந்தியாவில் ₹13.65 கோடி
இரண்டாம் நாள்: இந்தியாவில் ₹12.1 கோடி
மூன்றாம் நாள்: இந்தியாவில் ₹10.65 கோடி
நான்காம் நாள் (திங்கட்கிழமை): இந்தியாவில் ₹4.15 கோடி

முதல் மூன்று நாட்களுடன் ஒப்பிடும்போது, நான்காம் நாளான திங்கட்கிழமை, வசூல் 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிட்டது. இதனால், திங்கட்கிழமை வசூல் சுமார் 60 சதவீதம் டிராப் ஆனது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக, முதல் 4 நாட்களில் இந்தியாவில் ₹40.55 கோடி வசூல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அதே சமயம், வெளிநாடுகளில் ₹10 கோடி வசூல் செய்திருக்கலாம் என்பதால், மொத்தமாக உலகளவில் ₹50 கோடியைத் தாண்டி இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. எனினும், பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்களின் தகவலின்படி, முதல் 4 நாட்களில் உலகளவில் மதராஸி ₹63 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாகத் தெரிகிறது.

பிற படங்களுடன் ஒப்பிடுகையில்

மதராஸி திரைப்படத்தின் இந்த வசூல், பலரது கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது. ரெட்ரோ சாதனையை முறியடித்ததா? மதராஸி படம், சூர்யாவின் ரெட்ரோ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துவிட்டதாக சில பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரெட்ரோ திரைப்படம் முதல் 4 நாட்களில் ₹60.75 கோடி வசூலித்த நிலையில், மதராஸி திரைப்படம் ₹63 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குபேரா படத்துடன் போட்டி

தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம், தமிழ்நாட்டில் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்றாலும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் முதல் 4 நாட்களில் ₹76.75 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. குபேரா படத்தின் வசூலை மதராஸி எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதராஸி படத்தின் பட்ஜெட் ₹150 கோடி எனக் கூறப்படும் நிலையில், பிரேக் ஈவன் வசூலை எட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அமரன் திரைப்படம் ₹300 கோடி வசூல் செய்த நிலையில், மதராஸி குறைந்தபட்சம் ₹200 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் 4 நாட்களில் ₹100 கோடி கூட எட்ட முடியாமல் தடுமாறி வருகிறது.

தற்போதுள்ள நிலவரப்படி, இந்த வாரம் மதராஸி படத்திற்கு பெரிய வசூல் கிடைக்காது என கணிக்கப்படுகிறது. அதே நேரத்தில், பிரதீப் ரங்கநாதனின் டிராகன் பட வசூலை எட்ட வேண்டுமானால், மதராஸி தொடர்ந்து 3 வாரங்கள் ஓடினால் தான் வாய்ப்பு இருக்கு என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+