ஆண்மை இருந்தால் "அவர்களை” கேள்வி கேளுங்க! Kpy பாலா மீதான விமர்சனங்களுக்கு மதுரை முத்து பதிலடி!
சென்னை: சின்னத்திரை உலகில் இருந்து தனது கடின உழைப்பால் உயர்ந்து, இன்று ஒரு கதாநாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் கே.பி.ஒய். பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். நலிவடைந்த மக்களுக்கு உதவுவது, இலவச மருத்துவமனை கட்டுவது என அவர் செய்து வரும் சேவைகளை பலர் பாராட்டி வரும் நிலையில், "சர்வதேச கைகூலி, இவரால் நாட்டுக்கே ஆபத்து" என சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு, நடிகர் மதுரை முத்து தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள கருத்துகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டிற்கு சாபக்கேடு
சிட்டி ஃபாக்ஸ் மீடியா என்ற யூடியூப் சேனலுக்கு மதுரை முத்து அளித்த பேட்டியில், "ஒருவர் மக்களுக்கு உதவி செய்தால், யாரும் பாராட்ட வர மாட்டார்கள். கேப்டன் விஜயகாந்த் இருக்கும்போது அவரைக் குறித்து நிறைய வன்மமாகப் பேசினார்கள். ஆனால் இப்போது அவர் இல்லை; அவர் இறந்த பிறகு அவருக்குக் கோவில் கட்டுகிறார்கள். இறந்த பின்பு அவரைப் புகழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு இது ஒரு சாபக்கேடு மாதிரி ஆகிவிட்டது. அதுபோலத்தான் இப்போது பாலா" என்று வேதனையுடன் கூறினார்.
மேலும், "கடந்த 10 வருடமாக நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அதிகாலை 3 மணி வரை ஸ்கிரிப்ட் எழுதிவிட்டு அப்படியே படுத்துவிடுவான். விட்டுக் கொடுக்கும் மனிதன் அவன். அவனை நான் கூட இருந்து பார்த்தவன். இப்போது அவர் செய்யும் உதவிகளை ஏன் வீடியோ எடுத்துப் போடுகிறார் என்று கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர் உதவி செய்யும்போதும், பப்ளிசிட்டிக்காகச் செய்கிறார் என்று சொன்னார்கள். அப்போது பப்ளிசிட்டிக்காகவாவது ஒருவர் செய்கிறாரே, அதை நினைத்து சந்தோஷப்படுங்கள் என்று சொன்னார்கள். ஒரு பிஸ்கட் பாக்கெட்டைக் கொடுத்துவிட்டு 10 போட்டோ எடுத்துப் போடுபவர்கள் இருக்கும்போது, பாலா ரொம்ப எளிமையான பையன்" என்று பாலாவைப் பாராட்டினார்.
"அவர் பின்னால் பெரிய ஆட்கள் இருந்தால் அவர் ஏன் ஈவென்ட்களுக்குப் போக வேண்டும்? அவர் ஷோக்களுக்குச் சென்று சம்பாதித்த பணத்தை வைத்துத்தான் உதவி செய்து வருகிறார். கோடி கோடியாக அடிக்கும் அமைச்சர்கள் பற்றிப் பேச முடியுமா? ஏனென்றால் அவர்கள் பதிலடி கொடுப்பார்கள். பாலாவால் பதிலடி கொடுக்க முடியாது என்பதால் இப்படிச் செய்கிறார்கள். ஆண்மை இருக்கும் ஆட்களாக இருந்தால் அமைச்சர்கள் பற்றிப் பேசுங்கள்" என்று காட்டமாகப் பேசினார் மதுரை முத்து.
அமுதவாணன் சப்போர்ட்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு உயர்ந்த மற்றொரு கலைஞரான அமுதவாணன் முன்னதாக, பாலாவிற்கு ஆதரவாகப் பேசியிருந்தார். "பாலா என்னிடம் முதல் நாள் எப்படி மரியாதையாக, பணிவோடு வந்தானோ, அதே பாலாவாகத்தான் இன்னும் இருக்கிறான். இன்று அவன் பெரிய பிரபலமாக இருந்தாலும், அன்று என்னிடம் எப்படி நடந்து கொண்டானோ, அதே பாலாவைத்தான் இன்றும் பார்க்கிறேன்" என்று அமுதவாணன் பெருமையுடன் குறிப்பிட்டார்.
"பாலா மற்றவர்களுக்கு உதவி செய்ய முக்கிய காரணம் அவனுடைய தாய் தந்தையர் தான். அவர்கள் பாலாவிற்கு ரொம்ப ஆதரவாக இருந்து வருகிறார்கள். இன்று அவன் சம்பாதிக்கும் காசு அனைத்தையும் மக்களுக்காக செலவழிக்கிறான் என்றால் சிறுவயதில் அவன் பட்ட கஷ்டங்கள் பல. இது விளம்பரமோ அல்லது யாருடைய பணமோ கிடையாது. அவனுடைய சொந்த உழைப்பு மற்றும் அவன் முழு மனதாக அனைவருக்கும் உதவி செய்து வருகிறான்" என்று அமுதவாணன் பாலாவின் தன்னலமற்ற சேவையை விளக்கினார்.
பாலா மீதான விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்களாகவே தோன்றுகின்றன. உதவி செய்பவர்களைத் தவறாக சித்தரிப்பது ஒரு சமூகப் பிரச்சனையாகவே மாறியுள்ளது. இதற்கு எதிராக, மதுரை முத்து மற்றும் அமுதவாணன் போன்ற கலைஞர்கள் பாலாவிற்கு ஆதரவாகப் பேசியது பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications