Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை முத்துவின் நல்ல மனசு.. இப்படியும் ஒரு மனிதரா? பாராட்டும் ரசிகர்கள்.. காரணம் அந்த வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி டயலாக் மூலம் பிரபலம் அடைந்த மதுரை முத்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. அவர் தன்னுடைய மறைந்த அம்மா, அப்பா, மனைவிக்காக கோவில் கட்டும் விஷயம் பலருக்கும் தெரிந்திருந்தாலும் இப்போது ஆதரவற்றவர்களுக்காக முக்கிய விஷயம் ஒன்று செய்ய இருக்கிறார்.

டிவி சேனல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பட்டிமன்றங்களில் கலந்துகொள்ளும் மதுரை முத்து திருமண நிகழ்வுகள், கோவில் விசேஷங்கள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் கலந்து பேசிக்கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளிலும் ,பொது நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராகவும் மதுரை முத்து கலந்து கொள்ளும் நிலையில் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார்.

Vijay TV Madurai Muthu

நல்ல முயற்சி

சமூக ஆர்வலராக தன்னால் முடிந்த அளவிற்கு பல ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அதுபோல தான் செய்யும் செயல்களை அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் மதுரை முத்து இப்போது அவருடைய சொந்த கிராமத்தில் தன்னுடைய மறைந்த அம்மா, அப்பா, மற்றும் முதல் மனைவிக்கு ஒரு கோவில் ஒன்று கட்டி இருக்கிறார். அது குறித்து அவர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தாலும் இப்போது கட்டுமான பணிகள் எல்லாம் முடிவடைந்து இருக்கிறது என்று அந்த கோவில் வீடியோவை மதுரை முத்து வெளியிட்டு இருக்கிறார்.

மதுரை முத்து அதில் பேசுகையில், எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கிறது. இந்த இடத்தில் ஒரு ஏழு எட்டு அறைகள் கட்டி தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளை இங்கே தங்க வைத்து படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதே மாதிரி நம்ம தகுதிக்கும், சக்திக்கும் தகுந்த மாதிரி முதியோர்களையும் தங்க வைக்கனும் என்ற ஆசையும் இருக்கு.

நலிந்தோருக்கு உதவி

இங்கே ஒரு நூலகம் உருவாக்கி 7,000- 8,000 புத்தகங்கள் வைத்திருக்கிறேன். அந்த புத்தகங்களை இங்கே வைத்து அந்த பசங்களை படிக்க வைப்பதற்கு முயற்சி செய்யலாம் என்று ஆசைப்படுகிறேன். என்னுடைய ஆசை விரைவில் நிறைவேறும். நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்டங்களுடன் கோவில் திறப்பு விழா நடைபெறும் என்று அந்த வீடியோவில் மதுரை முத்து கூறி இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Vijay TV Madurai Muthu

மதுரை முத்துவின் ஆசை

அதிகமாக சம்பளம் வாங்கும் பலர் இதுபோல யாருக்கும் எந்த உதவிகளையும் செய்ய மனம் வராமல் இருக்கும் நிலையில் குறைவான சம்பளம் வாங்கினாலும் அதில் தன்னால் முடிந்த அளவிற்கு மதுரை முத்து உதவி செய்து வருவதை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதேபோல மதுரை முத்துவின் மகள் பூப்புனித நீராட்டு பங்க்ஷனையும் சமீபத்தில் அவர் வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்தி இருக்கிறார்.

மதுரை முத்து வீட்டு பங்க்ஷன்

அந்த நிகழ்வில் டிவி பிரபலங்கள் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. அவருடைய உறவினர்கள் மட்டும்தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோவை மதுரை முத்து தன்னுடைய youtube சேனலில் பகிர்ந்து இருக்கிறார். அதுபோல மதுரை முத்து அவருடைய இரண்டாவது மனைவியை பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வந்தது. மதுரை முத்துவின் இரண்டாவது மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி சோகமான போஸ்ட்களை போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது மதுரை முத்துவின் இரண்டாவது மனைவி மற்றும் அவருடைய மகனும் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

மொக்கை காமெடி

அதுபோல யாராவது மொக்கை காமெடி செய்சால் இது என்ன மதுரை முத்து காமெடியா என்று எல்லோரும் கலாய்ப்பார்கள். பொதுவாக மதுரை முத்து ஒரு மணி நேரம் பேசினார் என்றால் அதில் எப்படியும் 25 முதல் 30 முறையாவது பார்வையாளர்களை தங்களுடைய காமெடிகளால் சிரிக்க வைத்து விடுவார். பலர் பேசும் மொக்கை காமெடிகளுக்கு இவர் தான் அடையாளமாக இருக்கிறார். அதனாலயே மதுரை முத்துவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர்.

முதல் மனைவியின் மரணம்

அதுபோல மதுரை முத்து தன்னுடைய முதல் மனைவி குறித்து பேசிய வீடியோக்களும் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் மதுரை முத்து பேசுகையில் என்னுடைய முதல் மனைவி இறந்து போனதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் நான் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறேன். அப்போது என்னுடைய மனைவி ஊருக்கு போய்க்கொண்டிருக்கும் போது கார் விபத்தில் மரணமடைந்து விட்டார். இந்த தகவல் எனக்கு தெரிய வந்ததும் என்னால் உடனடியாக அங்கிருந்து வர முடியாமல் இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு வெளிநாட்டில் அம்மை போட்டு இருந்தது. அம்மை போட்டு இருந்தால் பிளைட்டில் விடமாட்டாங்க.

யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது

அதனால் அதை சொல்லாமலேயே மறைத்து டிக்கெட் எடுத்து வந்து சேர்ந்தேன். அந்த நேரத்தில் எங்க வீட்டில் என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்கு எதுவும் தெரியாமல் நான் விமானத்தில் தவித்துக் கொண்டிருந்தேன். அந்த மாதிரியான நிமிடங்கள் யாருக்கும் வரவே கூடாது. என் மனைவியின் உடலை பார்த்து நான் வேதனையில் இருக்கும் போது என் குழந்தைகளின் நிலை தான் எனக்கு பயமாக இருந்தது.

வருத்தமான சம்பவம்

என்னுடைய மனைவியின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு போகும்போது அங்கு ஒரு விபத்து நடந்தது அதில் அம்மாவும் அப்பாவும் இறந்து போயிட்டாங்க. குழந்தைகள் மட்டும்தான் உயிர் பிழைத்திருந்தாங்க. அதை பார்க்கும்போது என்னுடைய குழந்தைகளுக்கு நானாவது இருக்கிறேனே என்று மனதை தேற்றிக் கொண்டேன் என்று அந்த பேட்டியில் எமோஷனலாக மதுரை முத்து பேசியிருக்கிறார்.

குறையாத காதல்

அதுபோல மதுரை முத்து அவருடைய மனைவியின் தோழியை தான் இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார். முதல் மனைவியின் இறந்த நாளில் ஒவ்வொரு வருடமும் அவருக்காக பீலிங்காக ஸ்டேட்டஸ் போட்டு கொண்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+