இரண்டாவது கல்யாணம் பண்ண காரணமே இதுதான்! வாழ்க்கை வலி பற்றி மனம் திறந்த மதுரை முத்து!
சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பட்டிமன்ற மேடைகள், நகைச்சுவை பேச்சுகள் என பல வழிகளில் ரசிகர்களிடம் பிரபலமானவர் மதுரை முத்து. தனது நகைச்சுவை பேச்சால் மக்கள் மனதில் இடம்பிடித்த அவர், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த துயரமான அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக தனது முதல் மனைவி மரணம், அதன்பிறகு நடந்த இரண்டாவது திருமணம் குறித்து பலர் கேட்கும் கேள்விகளுக்கும் அவர் நேரடியாக பதிலளித்துள்ளார்.

பட்டிமன்ற மேடையிலிருந்து தொலைக்காட்சி வரை
மதுரை முத்து முதலில் பட்டிமன்ற மேடைகளில் பேசிக் கொண்டு தான் ரசிகர்களிடம் அறிமுகமானவர். தனது தனித்துவமான பேச்சு நடை, உடனடி நகைச்சுவை, சமூக விஷயங்களை எளிதாக சொல்லும் திறன் ஆகியவற்றால் அவர் விரைவில் பிரபலமானார். பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேலும் கவனம் பெற்றார். குறிப்பாக கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அவர் வீட்டுக்கு வீடு பரிச்சயமான முகமாக மாறினார்.
திடீரென வந்த வாழ்க்கை துயரம்
மதுரை முத்துவின் முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உயிரிழந்தது அவரது வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அந்த நேரத்தில் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். மனைவி இழப்பை சமாளிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இரண்டு மகள்களை தனியாக வளர்ப்பது என்பது அவருக்கு மிகப்பெரிய பொறுப்பாக மாறியது.
ஆறு மாதத்திலே கல்யாணம்
மனைவி இறந்து ஆறு மாதத்தில் கல்யாணம் செய்ததால் பல விமர்சனங்கள் வந்ததாம். இதுகுறித்து பேசிய மதுரை முத்து, "என் மனைவி இறந்த ஆறு மாதத்துக்குள்ளே நான் கல்யாணம் பண்ணிட்டேன் என்று பலரும் கேட்கிறார்கள். 'என்ன மனைவி இறந்த உடனே கல்யாணம் பண்ணிட்டீங்களே?' என்று கேட்கிறார்கள். ஆனால் அந்த நிலைமையில் இருந்தவர்களுக்கு தான் அது எவ்வளவு கஷ்டம்னு புரியும்.
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. பெண் குழந்தைகளை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம்னு எல்லாருக்கும் தெரியாது. மனைவி இறந்த பிறகு எனக்கு ஒரு மனைவி தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் என் வீட்டுக்கு ஒரு மனைவியும், என் குழந்தைகளுக்கு ஒரு அம்மாவும் தேவை. அந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் அந்த வலி புரியும்.
காலை எட்டு மணிக்கு குழந்தைகள் பள்ளிக்கு போகும் நேரத்தில் நான் கடையில் வாங்கி சாப்பாடு கொடுத்து அனுப்பலாம். ஆனால் அவர்களுக்கு ஒரு அம்மா பாசம் யார் கொடுக்க முடியும்? நான் வெளியில் வேலைக்கு போகும் மனிதன். எல்லாவற்றையும் நான் மட்டும் பார்த்துக்கொள்ள முடியாது.
பலர் இதைப் புரிந்துகொள்ளாமல் கேள்வி கேட்பார்கள். நான் அதை கவனிக்கவே மாட்டேன். அடுத்தவர்களிடம் நல்லவனென்று சான்று வாங்கி எதுவும் கிடைக்கப்போவதில்லை. நம்ம வாழ்க்கையை நாம்தான் பார்த்துக்கணும்," என்று அவர் மனம் திறந்து கூறியுள்ளார்.
இரண்டாவது மனைவியும் குழந்தைகளும்
மதுரை முத்து தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசும்போது, ஆரம்பத்தில் தனது குழந்தைகளுக்கும் புதிய அம்மாவுக்கும் நல்ல உறவு இருந்ததாக கூறினார்.
"ஆரம்பத்தில் குழந்தைகளுக்கும் அம்மாவுக்கும் நல்ல பந்தம் இருந்தது. ஆனால் பிறகு அவங்க வேலைக்கு போவதாலோ என்னவோ கொஞ்சம் இடைவெளி வந்தது. நான் இதை எதிர்பார்த்துதான் கல்யாணம் பண்ணினேன். வாழ்க்கையில் எல்லாரிடமும் இருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்பது எனக்கு தெரியும். ஆனாலும் குடும்பம் போய்க்கொண்டே இருக்கிறது, அதுதான் முக்கியம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகள்களின் வளர்ச்சி
சமீபத்தில் மதுரை முத்து தனது இரண்டு மகள்களுக்கும் பாரம்பரிய முறையில் பூப்புனித நீராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். அந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். அதோடு திரைத்துறையில் இருந்தும் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தையும் பெற்றது.
நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைக்கும் மதுரை முத்துவின் வாழ்க்கையில் இவ்வளவு வலியும் இருந்திருக்கிறது என்பதை இந்த பேட்டி மூலம் பலரும் அறிந்துள்ளனர். அவரது நேர்மையான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications