மகாநதி சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை.. இனி இவருக்கு பதில் இவரா? மாற்றப்படும் கதை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை திடீரென அந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக இனி யார் நடிக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் அடுத்து ஒரு ரீபிளேஸ்மென்ட் வரப்போகிறது என்று இயக்குனர் நேற்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். அதை தொடர்ந்து இன்று புதிய நடிகை யார் என்று விவரமும் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி என பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கிய பிரவீன் பென்னட் மகாநதி சீரியலை இயக்கி இருக்கிறார். அதுவும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த சீரியல் தொடங்கப்பட்டிருக்கிறது. அப்பாவை இழந்த நான்கு சகோதரிகள் எப்படி இந்த உலகத்தில் முன்னுக்கு வருகிறார்கள்? அவர்களுடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள்? தன்னுடைய தந்தை இறப்பிற்கு காரணமானவர்க்கு கொடுக்கும் தண்டனை என்று பல்வேறு கதைகளோடு இந்த சீரியல் தொடங்கப்பட்டது.

விஜய் காவேரி காதல் காட்சி
ஆனால் இப்போது ஒரு சில சம்பவங்களையும் சுற்றியே கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த சீரியலின் ரசிகர்கள் விஜய் மற்றும் காவிரியின் காதல் காட்சிகளை அதிகமாக விரும்புவதால் இதில் ரொமான்ஸ் சீன்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை குடும்பத்திடம் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கும் நிலையில் விஜய் காவேரிக்காக பல போராட்டங்களையும், சோதனைகளையும் தாண்டி அவரை பாதுகாத்து அவருடைய ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்.
மகாநதி சீரியல் நடிகர்கள்
இதனால் ஒவ்வொரு வாரமும் இவர்களை சுற்றியே கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்து வருகிறார். அவர் தந்தையாக கங்கா கேரக்டரில் பிரதீபாவும், யமுனா ரோலில் ஆதிரையும், நர்மதாவாக காவியாவும் நடித்து வந்தனர். இந்த சீரியல் டிஆர்பியில் அடிக்கடி டாப் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சீரியலில் சில கேரக்டர் அடுத்தடுத்து மாறிக்கொண்டே வருகிறது.

அடுத்த விலகல்
ஏற்கனவே கண்மணி கேரக்டர் சிலமுறை மாற்றப்பட்டிருக்கிறது. அதுபோல கங்கா கேரக்டரிலும் இரண்டு நடிகைகள் மாறி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கங்கா கேரக்டரில் நடித்து வந்த பிரதீபாவிற்க்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை திவ்யா கணேஷ் அந்த கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு பதிலாக தாரணி என்பவர் நடித்து வருகிறார். இப்போது இந்த சீரியலில் யமுனா கேரக்டரில் நடித்து வரும் ஆதிரை இந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஸ்வேதா என்பவர் இந்த சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications