Malar serial: ஒரே சாமி.. ஒரே கேஸ்.. புருஷன் பொண்டாட்டி வேண்டுதல் மட்டும் வேற!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் மாமியாரும், மருமகளும் சாய் பாபா படத்தின் முன் அமர்ந்து பூஜை செய்கிறார்கள். கண்களை மூடி மலர் அமர்ந்திருக்க, அம்மாவின் அருகில் அமர்ந்து மனைவியை பார்க்கிறான் கதிர்.
கண்களை திறந்த மலர் திடுக்கென்று விழிக்க, ஷாக்காகாத மலர் நான் சாமி கும்பிடக் கூடாதான்னு கேட்கறான். இல்லப்பா கதிர்.. இன்னிக்கு பூஜை மலர்தான் பண்ணினா.. நீயும் சாமி கும்பிடுன்னு சொல்றாங்க அம்மா.
ஏற்கனவே, கதிர் ஒரு பக்கம் போனால், இவள் எதிர் பக்கம் போக நினைப்பாள். அந்த அளவுக்கு மனதில் குற்ற உணர்ச்சி வாட்டி எடுக்குது. இந்த நிலையில், சாமி கும்பிடும்போது என்ன நடக்குது பாருங்க.

கதிர் மலர்
கதிருக்கும், மலருக்கும் கல்யாணமாகி சில நாட்களாகுது. கதிர் அசிஸ்டென்ட் கமிஷனர். இதை கேள்விப்பட்டதும் மலருக்குள் பயம் வந்துருது. காரணம் ஐந்து வருடங்களுக்கு முன்னால் தற்காப்புக்காக கவுசிக் என்பவனை கொலை செய்துவிட்டாள் மலர். இது அவளது தங்கை சுவாதிக்கு மட்டுமே தெரியும். சுவாதிதான் அக்காவுக்கு தைரியம் சொல்கிறாள்.

நிற்காதா கல்யாணம்
இந்த கல்யாணம் எப்படியாவது நின்றுவிடாதா என்று மலர் ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கும் வேளையில், இவளுடன் கல்யாணம் நடக்க வேண்டும் என்று,காதலில் கசிந்து உருகறான் கதிர். இதை மலர் புரிந்து கொண்டு இருந்தாலும், தான் ஒரு கொலை செய்து இருக்கோம், இவனுக்கு எப்படி ஐ லவ் யூ சொல்வது என்று அவன் கேட்கும் போதெல்லாம் சொல்லாமல் தவிக்கிறாள்.

நிம்மதி இல்லை
முதலிரவில் கொஞ்சம் நல்ல மூட் அமைப்பில் இருந்த மலர் ,கதிரைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லிவிடலாம் என்று நினைக்கும் போது, அவளிடம் ரொமான்ஸாக பேசிய கதிர், திடீரென நீ வந்த நேரம் கமிஷனர் எனக்கு ஒரு கேஸ் குடுத்து இருக்காரு மலர். கவுசிக்ன்னு ஒரு பையன் காணாமல் போயிட்டான்.அவன் கொலை செய்யப்பட்டான் என்று நாங்கள் சந்தேகப் படுகிறோம்.அந்த கேஸ் எனக்கு குடுத்து இருக்காருன்னு சொல்றான்.மலர் மயங்கி விழுந்துடறா.

பூஜை வேண்டுதல்
பூஜை அறையில்,கடவுளே கவுசிக் கேஸை மூணு வருஷம் இல்லை முப்பது வருஷமானாலும் கதிர் கண்டுபிடிக்க கூடாதுன்னு மலர் வேண்டிக்க, கடவுளே கவுசிக் கேஸை மூணு வருஷமா கண்டுபிடிக்க முடியாமல் இழுத்தடிச்சு இருக்காங்க. இந்த கேஸை நான் மூணே மாசத்துல முடிச்சு நல்ல பேர் வாங்கணும்னு வேண்டிக்கறான்.
இப்படி புருஷன் ஒரு வேண்டுதலும், பொண்டாட்டி ஒரு வேண்டுதலும் ஒரே விஷயத்தில் வைத்தால் யார் வேண்டுதலை பாபா நிறைவேற்றுவார்?












Click it and Unblock the Notifications