250 கோடி சொத்துக்கு அதிபதி.. திடீரென 3-வது திருமணம் செய்தார் நடிகர் பாலா!
சென்னை: முதல் மனைவி கொடுத்த புகாரில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள நடிகர் பாலா, மூன்றாவதாக தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துள்ளார். தனக்கு குடும்பம், குழந்தைகள், மன அமைதி தேவை என்றும், தனது சொத்துக்கள் யாருக்கோ போய் விடக் கூடாது என்றும் பாலா தெரிவித்துள்ளார்.
பாலாவுக்கு இப்போது வயது 41. 2010 முதல் 2019 வரை முதல் மனைவி பாடகி அம்ருதா சுரேஷுடன் வாழ்ந்து வந்தார். தம்பதிக்கு மகள் உள்ளார். இதன்பிறகு டாக்டரான எலிசபெத் என்பவரை பாலா மணந்ததாக கூறப்பட்டது. ஆனால் திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்பதால் லிவ்விங் இன் உறவு என்றும் கூறப்பட்டது. எலிசபெத்துடனான உறவையும் கட் செய்தார் பாலா.

இந்த நிலையில்தான், சமீபத்தில் முதல் மனைவி அளித்த ஒரு புகாரில் பாலா சிறைக்குப் போய்விட்டு, அக்டோபர் 13ம் தேதிதான் ஜாமீனில் வெளியே வந்தார். ரொம்ப நாளாகவே, பாலா ஒரு நடிகையை திருமணம் செய்யப்போகிறார் என்ற வதந்திகள் பரவியது. ஆனால், இந்த செய்தியை பாலா உறுதிப்படுத்தவில்லை. தான் திருமணம் செய்யப்போகும் பெண் பெயர் கோகிலா என்று திடீரென அறிவித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
பாலா தனது மனைவியிடம் இருந்து பிரிந்த பிறகு, தனது ஊருக்குச் சென்றிருந்தார். அங்கிருந்தபடி, தனது மாமனின் மகள் கோகிலாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கோகிலா சமைத்துக் கொடுத்த உணவை சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு, மூன்று வயதிலிருந்து கோகிலாவை பார்த்து வருவதாக பாசமாக கூறினார் பாலா.
பின்னர், கோகிலாவை கட்டி அணைத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, தனது தியாகங்கள் பயனளித்துவிட்டதாகவும், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. அந்த கேள்விகளுக்கு பாலா பதில் அளிக்கவில்லை. சமீபத்தில், பாலாவின் முன்னாள் மனைவியின் நண்பர் ஒருவர், பாலா கோகிலாவுடன் லிவ்-இன் உறவில் இருப்பதாகவும் எனவேதான் முன்னாள் மனைவி பிரிந்ததாகவும், குற்றம் சாட்டினார்.
பாலாவிடம் 250 கோடி ரூபாய் சொத்து இருக்கிறதாம். இதை அவரே முன்னர் தெரிவித்திருந்தார். தனது சொத்துக்களுக்கு வாரிசுகள் வேண்டும் என்றும் பாலா கூறியிருந்தார். இப்போது, கோகிலாவும் பாலாவின் சொத்துக்களுக்கு உரிமையாளராகி விட்டார்.
திருமணத்திற்கு பிறகு பாலா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், "கோகிலா என்னுடைய சொந்தக்கார பெண். இருவரும் மனதளவில் மிகவும் ஒத்துப்போகிறோம். இது ஒரு புதிய தொடக்கம். எங்களுக்கு கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தனக்கு ஒரு துணை தேவை என்ற உணர்வு ஏற்பட்டதால் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறினார்.

யார் இந்த பாலா: நடிகர் பாலா பரம்பரை பணக்காரர்தான். மலையாள சினிமாவுடன் நீண்ட தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா அருணாச்சல ஸ்டுடியோஸின் உரிமையாளராக இருந்தார். மேலும் அவரது தந்தை ஜெயக்குமார், 350க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். பாலா 2002 ஆம் ஆண்டு தெலுங்கு படமான "2 மச்" மூலம் நடிப்பு துறையில் அறிமுகமானார். பின்னர் 2003 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் "அன்பு" படத்தின் மூலம் அறிமுகமானார். தளபதிராஜ் இயக்கத்தில், வடிவேலு, விஜயகுமார், சரத்பாபு, தீபு, ரேகா உள்ளிட்டோர் நடித்த அன்பு படத்தில் பாடல்கள் ரசிக்கப்பட்டன.


Click it and Unblock the Notifications
