Maaman OTT: தாய்மாமன் உறவு ஏன் முக்கியம்? மாமனாக வாழ்ந்த சூரி! எப்போது ஓடிடியில் ரிலீஸ்?
சென்னை: சகோதரர்களை எண்ணி தாய்மார்களுக்கு கண்ணீரை வரவழைக்கும் மாமன் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. அது போல் எந்த ஓடிடி என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இன்று வரை இந்த படத்திற்கான மவுசு குறையவில்லை.
தமிழ் சினிமாவில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் ஒரு சீனில் நடித்து அதன் மூலம் இன்று அசைக்க முடியாத காமெடியனாக இருப்பவர் சூரி. இவர் ஆரம்பத்தில் சிறிய சிறிய வேலைகளை செய்து வந்தார். திருமதி செல்வம் சீரியலில் சஞ்சீவின் மெக்கானிக் ஷெட்டில் ஒரு மெக்கானிக் பாயாக நடித்திருந்தார்.

ரஜினி, கார்த்தி, சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்டோருடன் காமெடியனாக நடித்தார். மதுரை தமிழில் இவர் அடிக்கும் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது சந்தானத்தை போல் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த காட்டுமல்லி பாடல் மிகவும் பிரபலம். இதையடுத்து தற்போது மாமன் எனும் படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்த படம் மே 1 ஆம் தேதி ரிலீஸானது. கிட்டதட்ட 40 நாட்கள் ஆன நிலையில் இன்றும் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த படத்துடன் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் என்ற படம் வெளியானது. சந்தானத்தின் படம் என்றாலும் இது அந்த அளவுக்கு வசூலை குவிக்கவில்லை. விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கிய இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, அக்காவாக சுவாசிகாவும் நடித்துள்ளனர்.
அக்கா மகனுக்கும் தாய்மாமனுக்கும் இடையே இருக்கும் "அசுர" பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. அக்காவையும் அக்கா குழந்தையையும் இத்தனை விரும்பும் சூரி, அவருடைய மனைவியையும் குழந்தையையும் எப்படி விரும்புவார் என எண்ணி சூரி மீது ஐஸ்வர்யா லட்சுமிக்கு காதல் மலர்ந்தது. கடைசியில் திருமணமும் ஆனது.
ஆனால் அக்கா பையன்தான் முக்கியம் , மனைவி, அவர் வயிற்றில் இருக்கும் தன் குழந்தை எல்லாம் இரண்டாம்பட்சம்தான் என தனது நடிப்பில் சூரி அழகாக காட்டுவார். ஒரு கட்டத்தில் மனைவி பக்கம் போறதா, இல்லை உயிருக்கு போராடும் அக்கா மகனுடன் இருப்பதா என எக்ஸ்பிரஷனிலேயே பாச போராட்டம் நடத்துவார்.
இந்த குடும்ப பாங்கான படம் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் இது 35 கோடி ரூபாயை வசூல் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் சக்கை போடு போட்ட மாமன் படம் விரைவில் ஓடிடியிலும் ரிலீஸாகிறதாம்.
எனவே இந்த படத்தை ஓடிடியில் பார்க்கவும் மக்கள் ஆவலாக உள்ளனர். திரையரங்கும் பார்க்கும் படங்களில் தங்களுக்கு பிடித்திருந்தால் மீண்டும் ஓடிடியிலும் பார்ப்பதை மக்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
இந்த படம் வெற்றி பெற வேண்டும் என சூரி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டனர். இதற்கு சூரி கண்டித்திருந்தார். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து ஐஸ்வர்யா லட்சுமி வேண்டிக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் , "ஒவ்வொரு படம் ரிலீஸின் போதும் அம்மாவை (மீனாட்சி அம்மன்) வந்து பார்த்து ஆசி பெற்றுவிட்டு செல்வேன். அது போல்தான் இந்த முறையும் வந்திருக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications