Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

OTT: ஹாட்ஸ்டார் ஓடிடியில் மிரள வைக்கும் தரமான ஹரார் படம்! வார இறுதிக்கு ஒரு அப்டேட் பார்ப்போமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வார இறுதி நாளை எட்டி இருக்கும் நேரத்தில், இந்த வாரம் முழுக்க வேலை பார்த்த அலுப்பு தீர இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு இந்த ஒரு அப்டேட் பயன்பெறும் என்று நினைக்கிறேன். ஹரார் நிறைந்த திரில்லர் படம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் ஜியோ டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் இருக்கும் மங்களவராம் படத்தை பார்க்கலாம் அந்த படத்தை பற்றி விரிவாக பார்ப்போமா?

பொதுவாக திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கதைகளைப் பார்க்கும் சலிப்பு இந்தப் படத்துக்கு வரவில்லை! பழிவாங்குதல் என்பது சினிமாவுக்குப் பழசான விஷயம் என்றாலும், அதை இயக்குநர் அஜய் பூபதி கையாண்ட விதம் தான் 'மங்களவராம்' திரைப்படத்தின் பெரிய பலம். வழக்கமான டெம்ப்ளேட்களை உடைத்து, முழுமையானத் திரை அனுபவமாகக் கொடுத்திருக்கும் இந்தப் படம், இப்போது வசூல் ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது.

OTT Hotstar Airtel Xstream

'மங்களவாரம்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகி உள்ளது. படத்தின் கதை 80ஸ், 90ஸ் காலகட்டங்களில் நடப்பதாக அமைந்திருப்பது, அதுதான் கதைக்குச் சாதகமாக உள்ளது. இதனால், இன்றைய மக்களின் கல்வியறிவு, சிந்தனை மற்றும் பல லாஜிக் விஷயங்களைத் துருவி ஆராயத் தேவையில்லை.

மகாலக்ஷ்மிபுரம் கிராமம்

கதை முழுவதும் மகாலக்ஷ்மிபுரம் கிராமத்தை மையமாக வைத்தே நகர்கிறது. செவ்வாய்க்கிழமைகளில் நடக்கும் மர்ம மரணங்களைச் சுற்றி கதை நகர்ந்தாலும், இயக்குநர் முதல் ஒரு மணி நேரத்திலேயே கிராமத்தின் மக்கள், அவர்களின் மனநிலை, ஊரின் தெய்வமான மாலச்சி அம்மன் போன்றவற்றைப் பார்வையாளர்களுக்கு முழுமையாக அறிமுகம் செய்துவிடுகிறார்.

OTT Hotstar Airtel Xstream

அதிவேக அறிமுகம்

ஊரில் நடக்கும் ஒரு சண்டையில் மொத்த ஊரும் அடித்துக் கொள்வதைக் காட்டும்போது, ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துவிடுகிறது. இந்தக் கிராம அடித்தளம் தான், இடைவேளைக்குப் பிறகு முற்றிலும் வேறு மாதிரியாகச் செல்லும் கதையைப் பார்வையாளர்களுடன் சுலபமாக இணைக்கிறது.

மர்மம் நிறைந்த மங்களவாரம்

ஊரில் இருக்கும் இருவர் கள்ளத்தொடர்பில் உள்ளனர் எனச் சுவற்றில் எழுதப்பட்டவர்கள் இறந்துபோவதால், அதை தற்கொலை என்று ஊர் மக்கள் நம்புகிறார்கள். ஆனால், ஊருக்கு வரும் காவல் உதவி ஆய்வாளரான நந்திதா, அது கொலை என்று சந்தேகிக்கும்போதுதான் கதை சூடுபிடிக்கிறது.

சந்தேக வளையம்

எஸ்.ஐயும் பார்வையாளர்களும் ஊரில் உள்ள அத்தனைப் பேர் மீதும் சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கின்றனர். கொலை ஏன் நடக்கிறது? யார் செய்வது? போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிவதற்குள், ஊருக்குள் புதிதாக வந்த எஸ்.ஐயால் தான் கொலைகள் நடக்கிறது என ஊரே அவர் மீதுச் சந்தேகப்பட, ஒட்டுமொத்தப் படமும் ஒரு விறுவிறுப்பான சந்தேக வளையத்திற்குள் சென்றுவிடுகிறது!

OTT Hotstar Airtel Xstream

திருப்புமுனை

கடைசி ஒரு மணி நேரத்திற்குள் ஒன்றுக்கு மேற்பட்டத் திருப்புமுனைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. பெரும்பாலனோர் கணிக்கக்கூடியதாக இருந்தாலும், கடைசித் திருப்பம் மட்டும் பெரும்பாலானோர் கணித்திருக்க வாய்ப்பில்லை. கொலைக்கானக் காரணம், கொலை செய்பவர் யார் போன்றக் கேள்விகளுக்கு, பொதுப்புத்தியைத் தவிர்த்து, உண்மையைத் தேடி விசாரிப்பதே தீர்வு என்றப் பாணியில் விடை கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்களின் உழைப்பும், படத்தின் வெற்றியும்

ஷைலஜாவாக நடித்திருக்கும் பாயல் ராஜ்பூத் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். காதலனால் ஏமாற்றப்பட்டு ஊர் தூற்றும் நிலையில் அவர் முகத்தில் தெரியும் பழுப்பு சாயல், மன அழுத்தத்தைச் சரியாகக் கடத்துகிறது. போலீசாக வரும் நந்திதாவும், அங்கங்கேச் சிரிக்க வைக்கும் அஜய் கோஷ் உட்பட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்துடன் பொருந்தியுள்ளனர்.

அட்டகாசமான இசைக்கோர்ப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவை படத்திற்கு வலு சேர்க்கின்றன. மாலச்சி அம்மன் திருவிழாவின் இரவுக் காட்சிகளும், வேடம் போட்டக் கலைஞர்களின் களியாட்டமும் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளன. முதல் செவ்வாய் மரணத்தின்போது கழுகுப் பார்வையில் காட்டப்படும் வாழைத் தோட்டம், அதன் வாசனையைக் கடத்தும் அளவிற்குப் படமாக்கப்பட்டுள்ளது.

வசூல் மற்றும் OTT நிலவரம்

சினிமா விமர்சனங்கள் முதல் காட்சியிலிருந்தே வறுக்கப்படும் இந்தச் சூழலில், 'மங்களவாரம்' ஒரு நல்ல திரைப்படம் பார்க்க எதிர்பார்ப்பவர்களுக்குத் திரையரங்க அனுபவத்தைக் கொடுத்ததில் வெற்றி பெற்றுள்ளது‌. படம் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை கொடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், படத்தின் பட்ஜெட்டை கடந்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்து, விமர்சகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த படம் ஜியோ டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் தளத்தில் இப்போது கிடைக்கிறது 2023ல் வந்த இந்த படம் இப்போதும் பார்க்கும் பலரையும் மிரள வைத்துக் கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+