காசு, பணத்தை விட சுயமரியாதைதான் முக்கியம்! குக் வித் கோமாளியிலிருந்து விலகுகிறேன்! மணிமேகலை பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தொகுப்பாளினி மணிமேகலை அறிவித்துள்ளார். சுயமரியாதை குறித்து தனது பதிவில் அதிகம் தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஆங்கராக தர்ஷனுடன் வந்தவர் மணிமேகலை. இவர் ஏற்கெனவே குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் இருந்து கோமாளியாக இருந்தார். பிறகு சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து பாதியில் விலகிய அவர் ஆங்கராக சீசன் 5யில் அடியெடுத்து வைத்தார்.

cook with comali manimegalai

மணிமேகலையை பொருத்தமட்டில் அவர் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். இந்த நிலையில் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என ஒரு இன்ஸ்டா போஸ்ட்டை போட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இனி எப்போதும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர மாட்டேன். நான் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அர்ப்பணிப்பு, நேர்மை, கடும் உழைப்பு, 100 சதவீத முயற்சிகளை கொடுப்பேன்.

அது போல்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நான் கடந்த நவம்பர் 2019 ஆம் ஆண்டு முதல் என் பயணம் அந்த நிகழ்ச்சியில் தொடங்கிய நாள் முதல் நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறேன்.

ஆனால் சுயமரியாதையை விட வேறு எதுவுமே முக்கியமில்லை. என் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் என எதுவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. இவையெல்லாமே இரண்டாம் பட்சம்தான். சுயமரியாதைதான் பிரதானம். எனவே நான் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறேன்.

https://tamil.oneindia.com/news/coimbatore/we-would-like-put-to-rest-the-political-misunderstanding-annapoorna-statement-638495.html

இந்த நிகழ்ச்சியானது மற்றொரு பெண் தொகுப்பாளினியால் (குக்காக வந்திருக்கும் தொகுப்பாளினியா?) முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த நிகழ்ச்சியில் குக்காக இருக்க வந்த ஒருவர் தான் ஒரு குக் என்பதை மறந்துவிட்டு ஆங்கரிங் பணிகளில் தலையிட்டு என் பணியை செய்யவிடாமல் தடுக்கிறார்.

எங்களுக்கான உரிமைகளையும் பணியில் தலையீடு குறித்த கவலையையும் தெரிவித்தால் கூட இந்த சீசனில் அது ஒரு குற்றமாக கருதப்படுகிறது. ஆனாலும் எனக்கு எது சரி என படுகிறதோ அதற்கு நான் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன். யாரையும் பற்றியும் கவலைப்பட மாட்டேன்.

ஏகப்பட்ட எதிர்மறை எண்ணங்களும் அடக்குமுறைகளும் இந்த நிகழ்ச்சியின் அசல் தன்மையை இழந்துள்ளது. முன்பு நான் பார்த்து ரசித்த, வியந்த, மகிழ்ச்சியாக இருந்த குக் வித் கோமாளி ஷோ இதுவல்ல. எனவே இனி நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்.

நான் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 15 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறேன். என் அனுபவத்தில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை பார்த்துள்ளேன். ஆனால் இது போல் முதிர்ச்சியற்ற நடத்தைகளை நான் பார்த்ததே இல்லை. என் வேலையை கெடுத்த நபர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். அவருக்கு நிறைய நிகழ்ச்சிகள், வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன். அப்போதுதான் அவரால் அடுத்தவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

வாழு வாழ விடு. சீசன் 1 முதல் தற்போது வரை நிறைய பேருடன் பணியாற்றிய நினைவுகளை அசை போடுவேன். என் மீது அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி என தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார்.

cook with comali manimegalai
cook with comali manimegalai
cook with comali manimegalai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+