கழுவுகிற மீனில் நழுவிய மகாபா.. மணிமேகலை, பிரியங்கா மேட்டரில் ஜகா வாங்கலாமா? கிளம்பிய விமர்சனம்
சென்னை: மணிமேகலை, பிரியங்கா இடையே மறைமுகமான மோதல் வெடித்துள்ள நிலையில், விஜய் டிவி பிரபலங்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்தவகையில், மகாகா சொன்ன கருத்துக்களும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.. இதற்கான சில காரணங்களையும் விளக்கியிருக்கிறார். தன்னுடைய சுயமரியாதை முக்கியம் என்பதை வலியுறுத்தியிருக்கும் மணிமேகலை, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரின் ஆதிக்கம் பற்றியும் விவரித்திருந்தார்.

மணிமேகலையின் இந்த குற்றச்சாட்டையடுத்து, அவர் குறிப்பிடுவது பிரியங்காவைதான் என்று இணையவாசிகள் பதிவிட்டும், கருத்து தெரிவித்தும் வருகிறார்கள். மணிமேகலைக்கு ஒருசாரார் ஆதரவையும், பிரியங்காவுக்கு மற்றொரு சாரார் ஆதரவையும் பதிவிட்டு வருகிறார்கள்.
வெளிப்படை ஆதரவு: இதில், மணிமேகலைக்கு விஜய் டிவியின் பிரபலங்களே வெளிப்படையான ஆதரவை தெரிவித்து, துணிச்சலான முடிவு என்று பாராட்டு தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற குரேஷி, அனிதா சம்பத், பின்னணி பாடகி சுசித்ரா என பலரும் திரண்டு வந்து மணிமேகலைக்கு வெளிப்படையாகவே ஆதரவு தந்துள்ளது பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா பற்றி நிரூப் அன்றே கணித்திருந்தார். அது அத்தனையும் உண்மை என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
பெரும்பாலான ஆதரவு, அதுவும் விஜய் டிவியிலிருந்தே மணிமேகலைக்கு கிடைத்து வருகிறது.. எனவே, இருவருக்கும் இடையே எழுந்த இந்த பிரச்சனைகள் குறித்து விஜய் டிபி பிரபலங்களிடம் கேள்விகளும் கேட்கப்பட்டு வருகின்றன. அவர்களும் தங்கள் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. அந்தவகையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, மா கா பா ஆனந்த்திடமும் இந்த கேள்வியை எழுப்பினார்கள்.
குக் வித் கோமாளி: அதற்கு மாகாபா, "நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை.. இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறாத போது, அங்கே என்ன நடக்கிறது என்பது எனக்கு எப்படி தெரியும்? அந்நிகழ்ச்சி பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை.
அங்கே இருந்திருந்தால் இவங்க சரி, அவங்க தப்புன்னு நான் கமெண்ட் பண்ணலாம்.. அவங்க ரெண்டு பேருக்குள்ள அடிச்சுக்கணும். நாம காட்டு வழியாக போறோம்னு வெச்சுக்குங்க, அப்ப 2 யானைகள் அடித்துக்கொண்டால், நாம சமாதானம் செய்ய போகக் கூடாது. அப்படி போனால் 2 யானைகளும் நம்மை நசுக்கி போட்டுவிட்டு போய்விடும். அதனால் இதையெல்லாம் தூரமாக நின்று வேடிக்கை பார்ப்பது நல்லது... அதுவும் இல்லாமல், இது ஒன்னும் நாட்டுக்கு அவ்வளவு முக்கியமான விஷயமும் கிடையாது.
கருத்து கூற முடியாது: பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்குமான பிரச்சனையை, அவர்கள் இருவரும்தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்... மணிமேகலை குக் நிகழ்ச்சியை விட்டு போனது அவருடைய விருப்பம்... அதில் நாம் கருத்து சொல்ல முடியாது" என்றார்.
மகாபா ஆனந்தின் இந்த கருத்தானது, மறுபடியும் இணையத்தில் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.. ஒருசாரார் பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்கிறார் என்கிறார்கள்.. பிரியங்கா மீது தவறிருந்தால், அதை உடனடியாக சொல்ல வேண்டியதுதானே? இப்படி ஜகா வாங்குவதால், பிரியங்காவை மறைமுகமாக சப்போர்ட் செய்கிறார் என்று கருத்து கூறிவருகிறார்கள்.
சரியான முடிவு: இன்னொரு தரப்பினரோ, மாகாபா சொல்வது தான் சரி.. சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே பேசி தீர்த்துக்கொள்ள விஷயம் என்பதால், மூன்றாவது நபர் கருத்து சொல்வதில் பயனில்லை.. இது நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை இல்லை என்று மகாபா சொல்வதும் சரியே.. இது மணிமேகலை எடுத்த தனிப்பட்ட முடிவு என்பதால், இதனால் வரக்கூடிய நன்மை, பாதிப்புகள் 2 பெண் தொகுப்பாளர்களையே சாரும்.. அதனால், அவரவர் ஒதுங்கி வேடிக்கை பார்ப்பதே சரி" என்று கமெண்ட் கூறிவருகிறார்கள்.
ஆனால், நடுநிலையாளர்களோ, சரி, தவறு மகாபா கருத்து சொல்லலாமே? ஒரு பிரச்சனையில் நாம் தீர்வு தரமுடியாதே தவிர, கருத்துக்களை பகிர்கலாம். மகாபாவைவிட ஜூனியர்கள் பலரும் வெளிப்படையாக கருத்து சொல்லும்போது, மகாபா ஒதுங்கி போவது ஏற்புடையதல்ல.
மணிமேகலையைவிட, மகாபாவுக்குத்தான், பிரியங்காவை பற்றி அதிகமாக தெரியும், இவர்கள் 2 பேரும்தான் ஏராளமான நிகழ்ச்சிகளில் ஒன்றிணைந்து பணிபுரிந்து வருபவர்கள்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா பங்கேற்றபோதுகூட, அவரை சந்திக்க மபாகா வந்திருந்து ஆதரவு தெரிவித்துவிட்டு போனார். இவை அனைத்துமே விஜய் டிவி நேயர்களுக்கும் தெரியும் என்பதால், மகாபாவின் கருத்து முக்கியமாக அதிகம் பேரால் எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் இருவரின் பிரச்சனையை மகாபா தலையிட்டு தீர்த்து வைக்கக்கூடும் என்றும்கூட சிலர் கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், இப்படி நழுவி பதிலளித்துள்ளது விமர்சனங்களை பெற்று வருகிறது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications