சொம்பு தூக்கி அடித்த மணிமேகலை.. அது மக்கள் ஆதரவு.. யோகிபாபு மீது பாவனாவுக்கு என்ன வன்மம்?: பிரபலம்
சென்னை: நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் துவக்க விழாவை சென்னையில் நடத்தியிருந்தார்.. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பாவனா மற்றும் நடிகர் யோகிபாபு இருவருக்கும் வார்த்தை போர்கள் வெடித்ததாக கூறப்பட்டது. அதாவது யோகிபாபுவை பாவனா கிண்டலடித்து மட்டம் தட்டியதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதாக சோசியல் மீடியாவில் சலசலப்புகள் எழுந்தன.. இதுகுறித்து, தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "பாவனா மற்றும் யோகிபாபு இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கலாம்.. நல்ல உறவுமுறை இருக்கலாம்.. ஒருவருக்கொருவர் வாடா, போடா, வாடி, போடி என்றுகூட கூப்பிட்டுக் கொள்ளலாம்.. ஆனால், அதையெல்லாம் பிரைவேட் கெட்டூகெதரில் கூப்பிட்டுக் கொள்ள வேண்டும்..

பொதுவெளியில், அதுவும் தொழில் செய்யும் இடத்தில், காம்பியர் செய்வதற்காக 8 லட்சம் வாங்கி கொண்டு வருகிறார் பாவனா.. இப்படி பணம் வாங்கி கொண்டு ஷோ நடத்த துவங்கும்போதே, அது அவரது புரொபஷனலாகிவிடுகிறது..
கலாய்த்து காம்பியரிங்
அதாவது தொழில்முறையான வேலையை மட்டுமே சரியாக செய்ய வேண்டும். ஒரு நெறியாளராக மட்டுமே, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவேண்டும். கலாய்த்து காம்பியரிங் செய்வதாக இருந்தாலும்கூட, அது ஒரு எல்லைக்கோட்டில்தான் செய்ய வேண்டும்..
அந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை, விஜே பாவனா, யோகிபாபுவிடம் பொதுவெளியில் அப்படி பேசியது தவறானது.. அந்தவகையில் யோகிபாபுதான் பாதிக்கப்பட்டவர்..
4 கோடி நிகழ்ச்சி - யோகிபாபு
கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் யோகிபாபு.. ஆனால், 20 வருடங்களுக்கு முன்பே பாவனா, பிரபலமாகிட்டாங்க. அதனால்தான், 4 கோடி ரூபாய்க்கு நடத்தப்பட்ட ஜெயம் ரவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்புணர்வை உணர்ந்து பாவனா நடந்து நெறியோடு கொண்டிருக்க வேண்டும். அதுக்காக விழாவுக்கு வந்தவர்களை எல்லாம் வாடா, போடா என்று அழைப்பதா?
நெல்சன் ஒரு படம் இயக்குகிறார் என்றால், நெல்சனுக்கு அனைவரும் மரியாதை தந்தால்தான், அது ஒரு இயக்குனருக்காக மரியாதையாக கருதப்படும்.. ஆனால், இன்று டைரக்டர்களுக்கு பலரும் அப்படி மரியாதை தருவதில்லை..
சிவகார்த்திகேயன் பாப்புலர்
சிவகார்த்திகேயன், யோகிபாபு, சந்தானம் இவர்கள் எல்லாம் அன்றைய காலகட்டத்தில், ஓரிரு சீனுக்காக விஜய் டிவியில் கஷ்டப்பட்டவர்கள்.. அந்த நேரத்தில் விஜே பாவனா, மிகப்பெரிய அளவில் பாப்புலராகி இருந்தார்..
இப்போது, சிவகார்த்திகேயன், யோகிபாபு, சந்தானம் இவர்கள் அனைவருமே வேற லெவலில் வளர்ந்துவிட்டார்கள்.. இவர்களை சமூகம் பார்க்கும் பார்வையே இன்று வேறாக உள்ளது. இந்த மரியாதையை இவர்களுக்கு பொதுவெளியிலும் தரவேண்டியிருக்கிறது. பிறருக்கு மரியாதை தந்து, சபை நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, பழைய வன்மத்தை யோகிபாபுவிடம் இப்போது காட்டுவதில் என்ன பிரயோஜனம்?
மணிமேகலை, பிரியங்கா
விழாவில் நடந்த விஷயத்தை பாவனாவும், யோகிபாபுவும் கடந்து சென்றாலும்கூட, பொதுமக்கள் விடுவதாக இல்லை.. சோஷியல் மீடியாவில் இதை வைத்து விவாதத்தை கிளப்பி வருகிறார்கள்..
மக்கள் புத்திசாலிகளாகிவிட்டார்கள்.. விஜய் டிவியில் பிரியங்காவின் புகழ் ஓங்கியிருந்தது.. அப்போது பிரியங்காவை உச்சிமோந்து பாராட்டினார்கள்.. இதே விஜய் டிவிக்குள் மணிமேகலை உள்ளே வந்ததுமே, ஈகோ வெடித்தது.. அப்போது, அதுவரை பிரியங்காவை பாராட்டி கொண்டிருந்த பொதுமக்கள் அனைவருமே சேர்ந்து பிரியங்கா மீதுதான் தவறு என்று சுட்டிக்காட்டினார்கள்.
எனவே பொதுவெளியில் நடந்து கொள்ள சில வரைமுறைகள் உள்ளன.. ஒருமுறை நடிகர் கூல் சுரேஷ் ஒரு ஆடியோ விழாவில், ஐஸ்வர்யா என்ற ஆங்கரின் கழுத்தில் மாலை போட்டுவிட்டார்.. கொஞ்சமாவது காமன் சென்ஸ் இருப்பவர்கள் இப்படி செய்வார்களா? எல்லா விளையாட்டுகளையும், எல்லா இடத்திலுமே செய்ய கூடாது.. எங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அங்கே அப்படி நடந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications