மஞ்சள் ஜெர்சியில்! கையில் சிஎஸ்கே கொடியுடன்! சேப்பாக்கத்தில் வைப் செய்யும் பெண் பிரபலம்! யார் இவர்?
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு சில் செய்யும் அந்த பெண் பிரபலத்தை பார்த்தீர்களா? கையில் சிஎஸ்கே கொடியுடன் இருக்கிறாரே!
மார்ச் 23 ஆம் தேதி சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ், 28ஆம் தேதி சிஎஸ்கே- பெங்களூர், ஏப்ரல் 5ஆம் தேதி சிஎஸ்கே- டெல்லி, ஏப்ரல் 11-ஆம் தேதி சிஎஸ்கே- கொல்கத்தா, ஏப்ரல் 25 ஆம் தேதி சிஎஸ்கே- ஹைதராபாத், ஏப்ரல் 30ஆம் தேதி சிஎஸ்கே- பஞ்சாப், மே 12 ஆம் தேதி சிஎஸ்கே- ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.

18ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன. கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு பிரம்மாண்ட விழா நடந்தது. இசையமைப்பாளர் அனிருத் 20 நிமிடங்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்தியிருந்தார்.
ஐபிஎஸ் மேட்ச்
இந்த ஐபிஎல் மேட்ச்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்த மேட்ச்சை பல பிரபலங்கள் நேரில் சென்று பார்வையிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று சென்னை மும்பை இந்தியன்ஸ் இடையே போட்டி தொடங்கியது.
முதல் டாஸ்
இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் டீம் பேட்டிங் செய்து வருகிறார்கள். சிஎஸ்கே அணியினர் பக்காவாக ஃபீல்ட்டிங் செய்து வரும் நிலையில் மேட்ச் விறுவிறுப்பாக உள்ளது.

ஆங்கர் மணிமேகலை
இந்த ஆட்டத்தை காண ஆங்கர் மணிமேகலை சென்றுள்ளார். அவர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சென்றார். இந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அங்கிருக்கும் டிவியில் தோனி ஃபீல்டிங் செய்யும் காட்சிகளையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டிருந்தார்.
சிஎஸ்கே கொடி
மேலும் கையில் சிஎஸ்கே கொடியை அசைத்தபடியே சில் செய்யும் புகைப்படத்தையும் மணி வெளியிட்டுள்ளார். சிஎஸ்கே ஃபீல்டிங்கிற்கே ஆட்டம் களைகட்டுகிறது என்றால், 20 ஓவர் முடிந்தவுடன் சிஎஸ்கே பேட்டிங் செய்யும் போது வேறு லெவலில் வைப் இருக்கும்.
யார் இந்த மணி
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவர் எஸ்ஆர்எம் கல்லூரியில் எம்பிஏ படித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளராவதில் அதிக ஆர்வம் கொண்டு சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவருக்கு நடன இயக்குநரான ஹுசைன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து மணிமேகலை சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு வந்தார். அங்கு குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கோமாளியாக பணியாற்றினார்.

குக் வித் கோமாளி
அப்போது அவர் புகழ், சிவாங்கி, பாலாவுடன் அடிக்கும் லூட்டிகள் சிரிப்பை வரவழைக்கும். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வந்தார் மணிமேகலை. அப்போது ஒரு போட்டியாளருடன் ஏற்பட்ட மனகசப்பால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகினார்.
யூடியூப் சேனல்
இவர் தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இவர்கள் அண்மையில் இவர்களது புது வீட்டிற்கு கிரகபிரவேசம் நடத்தினர். இந்த நிலையில் தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் எனும் நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய்யுடன் தொகுத்து வழங்கி வருகிறார். குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மணிமேகலை. இவருக்கு யூடியூபில் 2 மில்லியன் பேர் பாலோயர்களாக உள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications