மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் எமோஷனல்.. நாங்க அடி மட்டத்திலிருந்து அவ்வளவு கஷ்டப்பட்டு! ஆனால் ஜிபி முத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாளத்தில் வெளியாகி இருக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் நடிகர் விஜயமுது அளித்திருக்கும் பேட்டி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சினிமா துறையில் நடக்கும் அவலங்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதோடு தாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு வாய்ப்புக்காக போராடினாலும் பலர் எங்களிடம் கேட்கும் சில கேள்விகள் இப்போது வரும் ஜி பி முத்து போன்றோரிடம் கேட்பதில்லை என்று தன்னுடைய ஆதங்கத்தையும் அதில் வெளிப்படுத்தி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

manjummel Boys Movie Actor Vijayamudhu Interview

அந்த வகையில் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளம் முழுவதும் ஹார்ட் டாபிக்காக மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தான் பேசப்பட்டு வருகிறது. மலையாள மொழியில் வெளியே சூப்பர் ஹிட் வெற்றி பெற்று கடந்த 22ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சௌபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாஸி, மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

அதோடு இந்த திரைப்படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் கேரளாவில் மஞ்சுமெல் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றார்கள். அங்கு குணா குகையில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களோடு வந்த நண்பர்கள் எப்படி அவரை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதி கதை.

அதுபோல திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. அதுபோல அதிகமான பிரபலங்களின் பாராட்டுகளையும் இந்த திரைப்படம் பெற்று வருகிறது. இந்த திரைப்படமானது குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்து பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற குணா திரைப்படம் எடுக்கப்பட்ட அதே இடத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது இப்போது அதிகமான பாராட்டு பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகர் விஜயமுது கேரக்டர் ரசிகர்களின் மத்தியில் நல்ல பாராட்டை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜயமுது சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய வாழ்க்கையில் படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் வாங்க கூட முடியாத அளவில் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்தேன்.

சினிமாவில் நடித்த கலைஞரான நான் வறுமையில் அந்த அளவுக்கு வாடி இருந்தேன். ஆனால் இப்ப வந்திருக்கும் ஜி பி முத்து போன்ற பலருக்கும் வாய்ப்பு தந்து அவர்கள் கேட்கும் அளவிற்கு சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் எங்களைப் போன்றோர் அடி மட்டத்திலிருந்து வந்தவர்களே மதிக்க மாட்டார்கள். வாய்ப்பு கேட்டு போனால் கூட நீங்கள் அதே துறையில் நீடித்திருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஏன் இந்த நிலைமை என்று புரியவில்லை. தயவு செய்து இந்த நிலைமையை மாற்றுங்கள். புதியதாக வந்தவர்களுக்கு கொடுக்கும் வாய்ப்பில் கொஞ்சமாவது எங்களைப் போன்ற நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். இதற்கு பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ் நடிகர்களை விட பிற மொழி நடிகர்களுக்கு தான் அதிகமாக வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்பது பலருடைய வருத்தமாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜயமுது வெளிப்படையாக பேசி பலருடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+