மனோஜ்ஜூக்கு எதுவுமே பண்ணாமல் இது மட்டும்? "ராஜாக்கள்" தவறு.. புஷ்பவனம் குப்புசாமியை விரட்டி: பிரபலம்
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "பாரதிராஜா பலபேரை நடிகராக்கினார்.. ஆனால் தன்னுடைய மகன் மீது கவனம் செலுத்தவில்லை.. மனோஜ்ஜை கட்டுப்பாட்டில் வளர்க்கவில்லை.. மணிரத்னம், சங்கரிடம் அசிஸ்டென்ட்டாக அனுப்பினாரே தவிர, மகனுக்கு சொல்லித்தர வேண்டிய விஷயங்களை சொல்லிக் கொடுக்காமல் விட்டுவிட்டார்.. அதன்விளைவுதான், மனோஜின் வாழ்க்கை.. நீண்ட நாள் வாழ்ந்திருக்க வேண்டிய இளைஞர் மனோஜ்..
"என் இனிய தமிழ் மக்களே" என்று பாரதிராஜா சொல்வார், ஆனால், தன்னுடைய படங்களில் தமிழ் நடிகைகளுக்கே வாய்ப்பு தர மாட்டார்.. மலையாள குயில்களுக்குத்தான் இளையராஜாவும் வாய்ப்பு தருவார்..

தமிழர்கள் - இளையராஜா
தமிழச்சியை இளையராஜாவுக்கு பிடிக்காது.. தமிழர்களையே பிடிக்காது.. "தமிழன் என்று சொல்லாதே, இந்தியன் என்று சொல்" என்று ஏர்போர்ட்டிலேயே செய்தியாளர்களிடம் காரி துப்புகிறார். தமிழ் பாடகிகளை பாட வைப்பதில்லை.. ஆனால், தமிழக மக்கள்தான் இவரது பாட்டை ரசிக்கிறார்கள்.. கிராமத்திலுள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தான் இளையராஜாவை கொண்டாடுகிறாரகள். ஆனால், தமிழன் என்ற உணர்வே இளையராஜாவுக்கு இல்லை.
புஷ்பவனம் குப்புசாமி
படத்தை பார்த்துவிட்டு, வயக்காட்டில் வேலை செய்யும் விவசாயிகள், ஏழை பாளைகள் தரும் காசை கொண்டுபோய், கோடி ரூபாய் சங்கர மடத்துக்கு தருகிறார். ஸ்ரீரங்கத்துக்கு தருகிறார்.. கடைசியில் கும்பாபிஷேகம் செய்தபோது, "நீ தலித், உள்ளே வராதே" என்று சொல்லிவிட்டார்கள்..
புஷ்பவனம் குப்புசாமி தலித் என்பதால், "மூஞ்சியிலேயே முழிக்காதே" என்று இளையராஜாவால் அன்று பலமுறை விரட்டியடிக்கப்பட்டார்.. சித்ரா, சைலஜா, உன்னி கிருஷ்ணன், இவங்கெல்லாம் மூஞ்சியில் மட்டும் இவர் முழிக்கலாமா? புஷ்பவனம் குப்புசாமி முகத்தில் முழிக்கக்கூடாதா?
ஒரே ஒரு பாட்டு தந்துவிட்டு, கடைசிவரை புஷ்பவனம் குப்புசாமியை இளையராஜா அங்கீகரிக்கவேயில்லை.. இவர் தமிழரின் அடையாளமா? இளையராஜாவை தமிழகம் புறக்கணித்து தூக்கி வீச எவ்வளவு நாள் ஆகும்?
இதேதான் பாரதிராஜாவும்.. நடிகைகள் அத்தனை பேரும் தெலுங்கு, கேரளாதான்.. சினிமா உச்சத்துக்கு கொண்டு போனது.. தேனியிலிருந்து கிளம்பி வந்த இந்த ராஜாக்களால், இந்த சமூகத்துக்கு எந்த நன்மையும் இல்லை.. ஒரு கருத்தம்மா மட்டும் பாரதிராஜா தந்திருக்க கூடாது. பல கருத்தம்மா படங்களை தந்திருக்க வேண்டும்.. ஒரு கருத்தம்மா படத்தை வைத்தே பல வருடத்துக்கு பேசுகிறார்கள்.
சத்யஜித்ரே - அவன்தான் கலைஞன்
வடமாநிலத்தில் இன்றும் சத்யஜித்ரே விருது திரைத்துறையினருக்கு தரப்படுகிறது. அன்று எமர்ஜென்சி காலத்தில், சத்யஜித்ரேயை படம் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார் இந்திரா காந்தி.. "அப்படியானால் நான் இந்தியாவை விட்டு வெளியேறுகிறேன்" என்று அறிவித்தார் சத்யஜித்ரே..
அவர் இப்படி அறிவித்ததுமே, பல நாடுகளுக்கு செல்லக்கூடிய விமானங்கள், சத்யஜித்ரேவுக்காக ஏர்போர்ட்டில் காத்திருந்தன.. தங்கள் நாட்டுக்கு வந்துவிடுங்கள் என்று சத்யஜித்ரேக்கு அழைப்பு விடுத்தன.. அவன்தான் உண்மையான கலைஞன்.
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுகிறாரே இளையராஜா.. மனோஜ் உயிருடன் இருக்கும்போது, எந்த தயாரிப்பாளரிடமாவது அழைத்து சென்றாரா? எத்தனை பேரிடம் கதை சொல்ல வைத்தார்? இளையராஜா நினைத்திருந்தால் அதை செய்திருக்கலாமே? தீபம் ஏற்றி என்ன பயன்?" என்றெல்லாம் காட்டமாக கூறியிருக்கிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications