Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனோஜ் இறப்பு எங்களுக்கு சந்தேகமா இருக்கு.. கடைசி நிமிடம் நடந்தது இதுதான்.. பாரதிராஜா தம்பி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த வாரத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு செய்தி ரசிகர்களை பெரிய அளவில் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது குறித்து பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் பேசுகையில் மனோஜ்க்கு கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்று எங்களுக்கு மர்மமாக இருக்கிறது. அவருடைய மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

கடந்த வாரத்தில் இரண்டு பிரபலங்களின் திடீர் இழப்பு ரசிகர்களை பெரிய அளவில் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதிலும் நடிகரும் கராத்தே பிரபலமான ஹுசைனி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தனக்கு ரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பதாக பரபரப்பான வீடியோ வெளியிட்டு இருந்தார். மருத்துவமனையில் தான் 20 நாட்கள் தான் உயிரோடு இருப்பேன் என்று அவர் பேசியது ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருந்தது.

Manoj Bharathiraja

அடுத்தடுத்து இறப்பு செய்தி

ஹுசைனி காலையில் இறந்த நிலையில் மாலையில் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி வந்தது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்த செய்தி உண்மையாக இருக்கக் கூடாது இது வதந்தியாக இருந்து விடாதா என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசியில் எல்லோரையும் வருத்தமடைய வைக்கும் செய்திதான் வந்து சேர்ந்தது.

மனோஜ் இறப்பு

மனோஜ் பாரதிராஜாக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதில் அபாய கட்டத்தை தாண்டி மீண்டும் பழைய நிலைக்கு மாறி இருந்தார். இனி இவருக்கு எதுவும் ஆகாது என்று நம்பிக்கையோடு அவருடைய குடும்பத்தினர் இருந்தனர். ஆப்ரேஷன் முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்து சில நாட்கள் கழித்து செக்கப்புக்கு மீண்டும் ஹாஸ்பிடலுக்கு போயிருந்தனர். அப்போது கூட எல்லாமே நார்மலாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று மாலையில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு வர மருத்துவர்கள் வந்து செக் பண்ணும் போது அவருடைய உயிர் பிரிந்து விட்டது என்று கூறியிருக்கிறார்கள்.

சித்தப்பா பேட்டி

87 வயதான பாரதிராஜாவின் ஒரே மகன் 48 வயதில் காலமான செய்தி அவருடைய குடும்பத்தினரையும் உடைந்து போக வைத்தது. பாரதிராஜா கதறி அழுதது பார்ப்போரையும் கண்கலங்க வைத்திருந்தது. இந்த நிலையில் பாரதிராஜாவின் சகோதரர் நடிகர் ஜெயராஜ் சமீபத்தில் வாவ் தமிழ் என்ற youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் மனோஜின் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்று பேசி இருக்கிறார்.

கடைசி நொடி நடந்தது

அதில் காலையிலிருந்து மாலை வரைக்கும் மனோஜ் அன்றைக்கு நல்லா தான் இருந்தான். சாயங்காலம் கொஞ்சம் பப்பாளி பழம் சாப்பிட்டு இருக்கிறார். பிறகு டீ போட சொல்லி இருக்கிறான். என்னுடைய மருமகள் டீ போட்டுக் கொண்டு இருந்திருக்கிறார். அடுப்பில் டீ வைத்திருக்கும் போதே மனோஜ் எனக்கு நெஞ்சுக்குள் ஏதோ பண்ணுது என்று சொல்லி இருக்கிறார். பிறகு குடும்பத்தினர் எல்லோரும் பதறி போய் என்ன ஆச்சு என்று பார்க்கும் போதே அவருடைய உயிர் பிரிந்து எல்லாம் முடிந்து விட்டது.

Manoj Bharathiraja

அப்பாவிடம் பேசிய கடைசி வார்த்தை

அதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் அவனுடைய அப்பா பாரதிராஜாவிடம் பேசி இருக்கிறார். எங்க குடும்பத்தில் ஒரு சின்ன பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது அதற்காக அண்ணன் பாரதிராஜா ஊருக்கு போறேன் என்று சொல்லி இருக்கிறார். அப்போ கூட நீங்க இப்போ போயிட்டு வாங்க எனக்கு கொஞ்சம் உடம்பு சரியானதும் மூணு நாள் கழிச்சு நானும் வரேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் இப்படியாகும் என்று நினைக்கவே இல்லை.

மனோஜ் மரணம் பற்றிய சந்தேகம்

மனோஜுடைய சாவு எங்களுக்கு மர்மமாய் இருக்கு. கடைசி நேரத்தில் அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்று சந்தேகமோக இருக்கு. ஒருவேளை அவனுக்குள் ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்குமோ அதை எங்களிடம் அவன் சொல்லாமலே மறைத்து வைத்திருப்பானோ என்று எங்களுக்கு தோணுது. ஏனென்றால் அவன் எப்போதுமே சந்தோஷமா இருக்கக் கூடிய ஆளு.

சோகம் பிடிக்காது

எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை அப்படியே மனசுக்குள் வைத்து இருக்க கூடிய ஆளு கிடையாது. அடுத்தவங்க கஷ்டமா இருக்காங்கன்னா அவங்களை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று யோசிப்பார். அடுத்தவங்களுக்காக நிறைய செஞ்சு இருக்கான். யாரும் சோகத்தில் இருந்தாலே அவனுக்கு பிடிக்காது. அவங்களை எப்படியாவது சிரிக்க வைத்து விடுவான். எப்போதும் கலகலன்னு இருப்பான். அவனுக்குள் சோகம் இவ்வளவு இருந்து அதனால இப்படி பிரச்சனை வந்துச்சுன்னு சொன்னா நம்ப முடியவில்லை என அழுத படியே மனோஜ் பாரதிராஜாவின் சித்தப்பா ஜெயராஜ் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+