சொல்லவும் மெல்லவும் முடியாமல்.. மனோஜ்ஜின் மனசை அரித்த விஷயம் இதுதானா? ஆசை ஆசையா இருந்தாரே: பிரபலம் 

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் ஒரே நேரத்தில் ஐந்தாறு படங்களில் நடித்து உடல்நலக்குறைபாடு வருவதுபோல, பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்து, மதுவுக்கு அடிமையாகும் பழக்கங்களாலும் உடல்நலக்குறைபாடு ஏற்படுகின்றன. சிலர் வெளியில் பிரபலமாக இருந்தாலும், உண்மையில் அவர்களுக்கு வீட்டில் பேச்சு துணைக்குகூட ஆள் இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு ஒரே துணை மதுவாகத்தான் இருக்கும். இதெல்லாம் சேர்ந்துதான் சினிமாவில் பலரது இறப்புகள் அதிகமாகின்றன" என்று சினிமா விமர்சககர் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி, "சில மாதங்களுக்கு முன்பு, மருத்துவமனை ஒன்றிற்கு குடும்பத்துடன் நான் சென்றிருந்தபோது, மனோஜூம் குடும்பத்துடன் அங்கு வந்திருந்தார்.. இருவரும் நீண்ட நேரம் பேசிட்டு இருந்தோம்.. அப்போது ஏராளமான எதிர்கால பிளான்கள், ஆசைகளை வைத்திருப்பதாக என்னிடம் மனோஜ் கூறினார். இப்போது அகால மரணம் அடைந்துள்ளார்..

அவரது மரணம் 2விதமான தகவல்கள் கூறப்படுகின்றன.. சமீபத்தில் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ததாக சொல்கிறார்கள்.. அதாவது ஸ்டென்ட் வைத்திருக்கலாம் என்கிறார்கள்.. இன்னும் சிலர் ஓபன் ஹார்ட் சர்ஜரி நடந்ததாக சொல்கிறார்கள்.. இதில் எது உறுதியான தகவல் என்று தெரியவில்லை. ஆனால் இதய நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்..

கட்டுக்கடங்காத ருசியான உணவு

சினிமா துறையை பொறுத்தவரை, உடல்நிலை பாதிக்கப்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.. கடினமாக உழைப்பது, ரெஸ்ட் இல்லாமல் பணிபுரிவது போன்ற காரணங்களினால், தனிப்பட்ட முறையில் உடலை பேணுகிற சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.. மற்றொருபுறம் உணவு, உபசரிப்பெல்லாம் சினிமாக்காரர்கள் வீட்டில் அதிகமாகவே இருக்கும் என்பதால் கட்டுக்கடங்காமல் உணவை சாப்பிடக்கூடும்.

அதாவது, ஒருபக்கம் உழைத்து களைத்தும், மறுபுறம் நாக்குக்கு ருசியாக இருப்பதால், அதிகமாக சாப்பிடுவதும் என எல்லாமே சேர்ந்து உடல்நிலை பாதிக்கப்படுகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதால், உடல் ஆரோக்கியத்தில் சினிமாக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல, சினிமாக்காரர்கள் என்றாலே பகட்டாக வாழ்கிறார்கள், பணத்திலேயே புரள்கிறார்கள் என்று வெளியிலிருந்து பார்ப்போருக்கு தோன்றும்... ஆனால், உண்மையிலேயே பலருக்கு சோகமான பக்கங்கள் உள்ளன..

குடிபோதையால் பெருகும் மரணம்

ஆரம்பத்தில் சினிமாவில் வசதி, புகழ், வசதி, மகிழ்ச்சி என கொண்டாட்ட மனநிலைமையில் தினமும் குடித்து, குடிநோயாளிகளாக மாறுவோர் பலர் உண்டு.. ஒரே நேரத்தில் 5 படங்களில் நடித்து உடல்நலக்குறைபாடு வருவதுபோல, ஒரு படம் வாய்ப்புகூட இல்லாமல் வீட்டிலேயே முடங்கி உட்கார்ந்திருப்போருக்கு வாழ்க்கையை நகர்த்துவே சிரமமாக இருக்கும். இதனால்தான், மதுவுக்கு அடிமையாகும் பழக்கங்கள் வந்துவிடுகின்றன.

அதேபோல, சிலர் வெளியில் பிரபலமாக இருந்தாலும், உண்மையில் அவர்களுக்கு வீட்டில் பேச்சு துணைக்குகூட ஆள் இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு ஒரே துணை மதுவாகத்தான் இருக்கும். இதெல்லாம் சேர்ந்துதான் சினிமாவில் பலரது இறப்புகள் அதிகரிக்கின்றன.

பாரதிராஜா - மனோஜ் வலி

மனோஜ்ஜை பொறுத்தவரை, நடிகர் மட்டுமல்ல, பாரதிராஜாவின் மகனும்கூட.. எனவே மனோஜ்ஜூக்கு தோல்வி கிடைத்தால், அது டபுள் மடங்கு மனோஜ்ஜை பாதிக்கும்.. மனோஜை மட்டுமல்லாமல், பாரதிராஜாவின் பெயரையும் சேர்த்து அது பாதிக்கும். காரணம் இவர்கள் இருவரையும் வைத்து ஒப்பீடுகளை சிலர் செய்து பார்ப்பார்கள். இதுவும் மனோஜுக்கு வலியை தந்திருக்கும். இந்த வலியை வேறு யாரிடமும் அவரால் ஷேர் செய்யவும் முடியாது. இப்படியான அழுத்தங்களை மனதுக்குள்ளே வைத்திருந்ததுகூட, மனோஜ் இறப்புக்கு காரணமாக இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+