மாரிமுத்து மனைவி எமோஷனல்..வாய் பேச முடியாத நபர்.. என் கணவர் நல்லடக்கத்திற்கு பிறகு வந்து செய்த செயல்
சென்னை: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மனைவி முதல் முறையாக அவருக்கு நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல தகவல்களை பேசி இருக்கிறார்.
அதில் தன்னுடைய கணவர் நடிகர் மாரிமுத்து இறப்பிற்கு பிறகு தங்களுடைய நிலைமை என்ன மாதிரி இருக்கிறது என்பது பற்றி பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

அத்தோடு நடிகர் மாரிமுத்துவின் மீது ரசிகர்கள் இந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை தாங்கள் புரிந்து கொண்டது பற்றியும் மகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மூலமாக குணசேகரன் கேரக்டரில் நடித்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த அதிர்ச்சியில் இருந்து சீரியல் ரசிகர்களும், அவரோடு ஒன்றாக நடித்த நடிகர்களும் பல பிரபலங்களும் நண்பர்களும் மீள முடியாமல் இப்போதும் அவர் பற்றி பல நினைவுகளை பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்காக சமீபத்தில் தனியார் செய்தி சேனல் ஒன்றின் மூலமாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடிகர் மாரிமுத்துவின் மனைவியும் அவருடைய மகனும் மகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் மாரிமுத்துவை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகர் மாரிமுத்துவின் மனைவி நான் அதோடு ரசிகர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
என்னுடைய கணவர் இறந்த பிறகு ரசிகர்கள் காட்டிய அன்பு அவர் சீரியலில் இல்லை என்பதால் பலர் தவிக்கும் தவிப்பை எங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது. என் கணவர் இறந்து இரண்டு நாள் கழித்து ஒருவர் இரவு 8 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்தாரு. அவர் வாய் பேச முடியாத ஒரு ரசிகர். அவர் எங்களை பார்க்க வந்திருந்தார். அவர் தேனியில் ஒரு மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அவர் அன்னைக்கு என்னுடைய கணவர் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியாகி அங்கு இருப்பவர்களிடம் வரசநாடு, பசுவந்தேரி என்று மட்டும் எழுதி வாங்கிட்டு வந்து இருக்காரு. அவர பாத்து நாங்க எல்லாருமே அதிர்ச்சி ஆகிட்டோம். ஏன்னா வாய் பேச முடிஞ்சவங்களாலே அப்படி அவ்வளவு தூரத்துக்கு வர முடியாது. ஆனால் இவர் வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காது. ஆனாலும் எங்க குடும்பத்தையாவது பார்த்து பேசிட்டு போகணும்னு வந்திருக்காரு. இதெல்லாம் தான் என்னுடைய புருஷன் சேர்த்த பெருமை என்று நான் நினைக்கிறேன்.
அப்புறம் அவருக்கு சாப்பாடெல்லாம் போட்டு பஸ்க்கு காசு கொடுத்து ஒருத்தவங்க கூட பஸ் ஏத்திவிட்ருங்கன்னு அனுப்பி வைத்தோம். அது எனக்கு என் புருசனே நம்மள எல்லாம் பார்க்க வேண்டும் என்று வந்த மாதிரி எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதுதான் அவர் சேர்த்து வச்ச பெருமை என்று கண்கலங்க, அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். தற்போது இதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications