"வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை!" மாதம் 6.50 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஜாய் கிறிஸ்டில்லா மனு!
சென்னை: தமிழ் திரையுலகிலும், சமையல் உலகிலும் பிரபலமான நபராக அறியப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது ஆடை வடிவமைப்பாளர் ஜெய் கிறிஸ்டில்லா எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளால் பெரும் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார். அவர் மீது ஜாய் கிறிஸ்டில்லா தொடர்ந்த வழக்கு, நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய கோரிக்கையுடன் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் பயோகிராபி
கோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், ஆரம்பத்தில் தனதுத் தனித்துவமான சமையல் மூலம் கவனம் ஈர்த்தார். அவரது சமையல் நிறுவனம் பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் முக்கிய இடம்பிடித்தது. அதுபோல தன்னுடைய பிரம்மாண்டம் மற்றும் தனித்துவமான சமையல் மூலம் சோசியல் மீடியாவிலும் பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்டதன் மூலம், இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆகி இருக்கிறார். ஒருசிலப் படங்களிலும் நடித்து வருகிறார்.
குடும்ப வாழ்க்கை
மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவி ஸ்ருதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், இரண்டாவது திருமணம் குறித்தப் புகாரால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி, சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தார்.
முந்தைய புகார்கள்
"தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் ரங்கராஜ்தான், ஆனால் அவர் தன்னிடம் இப்போது பேசவில்லை " என்றும், "தான் இரண்டு முறை கருக்கலைப்பு செய்ததாகவும், அதற்கு ரங்கராஜ்தான் காரணம்" என்றும் ஜாய் கிறிஸ்டில்லா குற்றம் சாட்டியிருந்தார்.
முதல் மனைவியின் நிலை
இந்தச் சர்ச்சையின் போது, ரங்கராஜின் முதல் மனைவி சுருதி, "வெளியே இருந்து வருபவர்கள் உங்கள் கணவரை அபகரிக்கப் பிளான் செய்யலாம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை விட்டுக் கொடுக்காதீர்கள். என்னைப் போலப் போராடுபவர்களுக்கு நான் துணையாக நிற்பேன்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் புதிய மனு
இந்த வழக்கு விசாரணைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஜாய் கிறிஸ்டில்லா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்றும், இப்போது தான் கர்ப்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை
எனவே, தனது மாதாந்திரச் செலவுகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு மாதம் 6.50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த மனு, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மேலும் ஒரு கடுமையானச் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இருவரையும் ஒரே அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆரம்பத்தில் அரசியல் பின்புலத்தால் நடவடிக்கை தாமதம் ஆவதாகக் கூறிய ஜாய் கிறிஸ்டினா, மகளிர் ஆணையத்தின் உதவியால் தனக்குச் சரியான விசாரணை நடைபெறுவதாகத் தெரிவித்தார்.
தற்போது, ஜாய் கிறிஸ்டில்லா தாக்கல் செய்துள்ள இந்த ஜீவனாம்ச மனு குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு என்ன பதில் அளிக்கப் போகிறது என்றப் பரபரப்பான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications