மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிறிஸில்டா அதிர்ச்சி குற்றச்சாட்டு! மகளிர் ஆணையத்தில் நடந்த சம்பவம்!
சென்னை: திரையுலகில் திருமண உறவுகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் சமையல் மூலம் பிரபலமானவரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிறிஸில்டா (Joy Crisilda) கொடுத்துள்ள புகார், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ், கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் முதலில் தன்னுடைய சமையல் தொழிலுக்காகப் பிரபலமடைந்தார். பாரம்பரிய முறைப்படித் திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குச் சமையல் செய்து, அதன் மூலம் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானார். சமையல் நிகழ்ச்சி நடுவராகவும், ஒரு கட்டத்தில் திரைப்படங்களிலும் நடிகராகக் களம் இறங்கினார். ஆடை வடிவமைப்பாளராகவும் மாடலாகவும் அறியப்பட்ட ஜாய்கிறிஸில்டாவை இவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
ஜாய் கொடுத்த அதிர்ச்சி புகார்
மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிறிஸில்டா, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்துக்கு சென்று, அதன் தலைவர் குமாரி அவர்களிடம் இந்தப் புகாரை அளித்துள்ளார்.திருமணம் செய்து கர்ப்பமாக்கி மோசடி செய்துவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஏற்கனவே ஜாய் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் திருமண மோசடி புகாரில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் வழக்கறிஞரும், மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார். பின்னர் வழக்கறிஞர் சுதா செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார் அளித்தார். அந்த புகார் கொடுத்து ஒன்றரை மாதமாகி உள்ளதாகவும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த புகார் எந்த காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது என்பதே தெரியவில்லை. அதன் பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில் துணை ஆணையர் அழைத்து விசாரணை நடத்தினார்.
ஆனால் மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடத்தியதாக கூட தெரியவில்லை. ஊடகங்கள் மூலம் விசாரணை நடத்தியதாக தெரிந்துகொண்டோம். துணை ஆணையர் அலுவலகத்தின் பின் வழியாக ரங்கராஜை போலீசாரே அனுப்பி வைத்ததாக தகவல் வந்தது.
புகார் மீது எந்த பலனும் இல்லாததால் மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம். காவல்துறையினர் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. திருமணம் செய்து ஏமாற்றி விட்டு ரங்கராஜ் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். குழந்தையை கொடுத்து விட்டு ஏமாற்றி விட்டார் ஆனால் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் என்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த குற்றத்திற்கான நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை.
குழந்தையை கொடுத்து விட்டு ரங்கராஜ் ஒன்றும் தெரியாதபோல இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி விட்டதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளது. எங்களை அணுகி உள்ளனர். அதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். ஏறாத படிகள் இல்லை தட்டாத கதவுகள் இல்லை. பெண்ணுக்கு எதிரான குற்றத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்று வழக்கறிஞர் சுதா தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிறிஸில்டாவுக்கு இடையே குடும்பப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தபோது, ஏற்கனவே குடும்ப நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில், ஜாய் கிறிஸில்டாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் சில முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஜாயுடன் உள்ள உறவு பற்றி மாதம்பட்டி மறுக்கவில்லை இதனால் ஜாய் மாதம்பட்டி ரங்கராஜன் பற்றி சோசியல் மீடியாவில் பேசுவதை தடுக்க முடியாது என்று நீதிபதி கூறியிருந்தார்.
அதுபோல புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த ஜாய் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது எனக்கும் என்னுடைய குழந்தைக்கு ரங்கராஜன் தான் பொறுப்பு, என்னுடைய குழந்தைக்கு என்ன நடந்தாலும் அதற்கு அவர் மட்டும்தான் பொறுப்பு என்று அழுத்தமாக சொல்லியிருந்தார். அதோடு உங்களை யாராவது மிரட்டுகிறார்களா என்று கேட்ட கேள்விக்கு அப்படி யாரும் என்னிடம் நேரடியாக பேசவில்லை என்று ஜாய் சொல்லி இருந்தார். அதுபோல மாதம்பட்டி ரங்கராஜன் உங்களைப் போல வேறு பெண்களையும் ஏமாற்றி இருக்கிறார் என்று சொல்கிறீர்களே அது உங்களுக்கு எப்படி தெரிய வந்தது என்று கேட்ட கேள்விக்கு, அந்த பெண்கள் தான் என்னிடம் மெசேஜ் மூலமாக சொன்னார்கள் என்றும் ஜாய் தெரிவித்திருக்கிறார்.
எனவே, ஏற்கனவே குடும்ப நீதிமன்றத்தின் ஆதரவு ஜாய் கிறிஸில்டாவுக்கு இருக்கும் நிலையில், அவர் இப்போது மகளிர் ஆணையத்தில் கொடுத்துள்ள புகார், ரங்கராஜுக்குச் சட்டரீதியான மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமையல் மூலம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்த ரங்கராஜ், தற்போது தன்னுடைய தனிப்பட்ட குடும்பப் பிரச்சனைகள் மற்றும் இந்தச் சர்ச்சைக்குரிய புகார்கள் காரணமாகப் பல விமர்சனங்களைச் சந்தித்து வருவது, அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதைத் திரையுலக வட்டாரம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: விஜயாவை கலங்க வைத்த ரோகிணி.. மீனாவிடம் போட்ட சபதம்.. அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications