மேல்மருவத்தூர் கோயிலுக்கு ஓடிய நடிகை.. புல்லரிக்க வைத்த காட்சி.. மாதவிடாயிலும் கருவறைக்குள்.. சபாஷ்
சென்னை: அங்காடித் தெரு படத்தில் நடித்தபோது, பிரபல நடிகை அஞ்சலியை பாதித்த காட்சி குறித்தும், தன்னுடைய சித்தியின் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருந்ததாக வெளியான தகவல்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஆவார்.. இவர் 1977-ல் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியதுடன், பல்வேறு தொண்டுகளையும் செய்ய துவங்கினார்.

செவ்வாடை அடிகளார்
சிவப்பு ஆடை அணிந்து, சன்னியாசியாக, எளிமையான தோற்றத்துடன் பலரின் குறைகளையும், கஷ்டங்களையும், நோய்களையும் தீர்த்து வைக்க துவங்கியதால் நாடு முழுவதுமே பிரபலமானார் பங்காரு அடிகளார். மேல் மருவத்தூர் கோயிலுக்கு பெண்களின் வருகை இன்றுவரை அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்து வருகிறது..
முக்கியமாக, கோயில் கருவறைக்கே சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறையையும் ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார். மாதவிலக்கு நாட்களிலும் தடையின்றி வழிபடலாம் என்று பங்காரு அடிகளார் அறிவித்திருந்தது, பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை அன்று பெற்றிருந்தது.. அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூஜை செய்து வழிபட செய்த பங்காரு அடிகளாரின் இந்த ஆன்மீகப் புரட்சியானது, பல தரப்பினராலும் இன்றுவரை மிகவும் மதித்து போற்றப்பட்டு வருகிறது.
பெண்கள் கருவறையில்
அதனால்தான், அங்காடித் தெரு படத்திலும், இதுசம்பந்தமான காட்சி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.. Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த செய்யாறு பாலு இதுகுறித்து கூறும்போது, "அங்காடித் தெரு படத்தில் அஞ்சலியை பாதித்த ஒரு காட்சி உண்டு.. அந்த படத்தில் பிளாட்பாரத்தில்தான், தன்னுடைய தங்கையுடன் அஞ்சலி தங்கியிருப்பார்.. தங்கை வயதுக்கு வந்ததுமே, அதற்கான சடங்குகளை செய்ய பெரியவர்கள், சொந்தபந்தங்கள் யாருமில்லையே? என்று அஞ்சலி கண்ணீர் சிந்துவார்.
அப்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்ற நபர்கள், "பயப்படாதேய்யா, இந்த கோயிலுக்கு தீட்டே கிடையாது, நாங்கள் செய்கிறோம்" என்று சொல்லி சடங்குகளை செய்வார்கள். படம் வெளியானபோது, இந்த காட்சி, பலரால் விமர்சிக்கப்பட்டது..
பக்தர்கள் என்று பொதுவாக இல்லாமல், மேல்மருவத்தூர் பக்தர்கள் என்று ஏன் குறிப்பிட்டு அவர்களை படத்தில் காண்பிக்க வேண்டும் என்று வசந்தபாலனிடம் அஞ்சலி கேட்டாராம்.
மேல்மருவத்தூருக்கு ஓடிய நடிகை
அதற்கு வசந்தபாலன், "நான் நாத்திகம் பேசினாலும், ஆத்திகம் உள்ள நபர்தான்.. பெண்களை கருவறைக்குள் அனுமதித்தது, மேலமருவத்தூர் கோயில்தான். எத்தனையோ பெண் தெய்வ கோயில்களில், பெண்களையே அனுமதிக்காதபோது, கருவறைக்குள் முதன்முதலில் பெண்களை அனுமதித்தது மேல்மருவத்தூர் கோயில்தான். இது என்னை மிகவும் பாதித்த விஷயம்.. அதனால்தான் அந்த காட்சியை வைத்தேன்" என்று வசந்தபாலன் விளக்கமும் தந்திருந்தார்.
அந்தவகையில், இந்த காட்சியில் நடித்தது அஞ்சலிக்கு மிகப்பெரிய பாதிப்பை தந்திருந்ததுடன், இதற்கெனவே மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று அஞ்சலி, சாமி கும்பிட்டு வந்தாராம்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications