சமுதாயத்தில் உயர்ந்த ஜாதி இவங்க தான்! அமரன்-ல இதை கவனிச்சீங்களா? மெட்டி ஒலி விஷ்வா நறுக்
சென்னை: மெட்டி ஒலி சீரியல் நடிகர் விஷ்வா தன்னுடைய youtube சேனலில் உலகத்திலேயே உயர்ந்த ஜாதி இவங்க தான் என்று சில விஷயங்களை பகிர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதோடு அமரன் திரைப்படத்தில் சில குறிப்பிட்ட விஷயங்களை கவனிச்சீங்களா? என்றும் ரசிகர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் ஒட்டுமொத்த தமிழர்களையும் பீல் பண்ண வைத்திருக்கிறது. தியேட்டரில் பல வாரங்களாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் இப்போது ஓடிடியில் வந்திருக்கிறது. ஓடிடியில் வந்த பிறகும் இந்த திரைப்படம் பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த்தின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் பற்றி மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் விஷ்வா தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். அதில் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு அருமையாக இருந்தது என்று பாராட்டி இருக்கிறார்.
அதோடு அமரன் திரைப்படம் வெளியான நேரத்தில் அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்தின் வரலாற்றை எடுத்தபோது அவர் என்ன ஜாதி என்று வெளியே காட்டாமல் மறைத்து விட்டார்கள் என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் விஷ்வா பேசியிருக்கிறார். மேஜர் முகுந்த் எவ்வளவு பெரிய தியாகம் செய்து இருக்கிறார்.
ஆனால் அதை எல்லாம் விடவும் இவர் எங்கள் ஜாதி என்று அடையாளப்படுத்துவது தான் பெருமை உள்ளது என்று கூறுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம்? அமரன் திரைப்படத்தில் நடித்தவர்கள் அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார்கள். மேஜர் முகுந்தின் வாழ்க்கை இயல்பு வாழ்க்கை மாறாமல் அந்த படத்தை எடுக்க வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து இருக்கிறார்கள்.

சிலர் சமூக வலைதளத்தில் அந்தப் படத்தில் மேஜர் முகுந்த் மனைவி இந்து வர்கீஸ் கிறிஸ்டின் என்று சிலுவையை காட்டுகிறீர்களே அது எதற்கு என்று கேட்கும் கூமுட்டைகளுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? அது உண்மையில் நடந்த கதை என்பது அவர்களுக்கு தெரியாமலேயே சமூக வலைதளத்தில் என்ன வேணாலும் கமெண்ட் போடலாம் என்று இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நடிகை ஹீரோ என்ன ஜாதி என்று சொல்வதற்கு திராணி இல்லை என்றால் எதற்காக அவர்கள் படம் எடுக்கிறார்கள் என்று கேட்கிறார். அதோடு அந்த நடிகை நான் முன்னணி நடிகையாக இருக்கும்போது இந்த கேள்வியை கேட்கிறேன் இதனால் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று சொல்கிறார். இதை அவ்வளவு பெரிய தியாகமாக அவர் சொல்கிறார்.

முகுந்த் வரதராஜன் இந்த நாட்டுக்காக உயிரை தியாகம் செய்ததை விட இவர் செய்வது பெரிய தியாகமாக இருக்கே? என்று நொந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து விஷ்வா பேசுகையில், அமரன் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு ஒரு விஷயத்தை நோட் பண்ணீங்களா? அதில் பிளாட் வாங்க வேண்டும் என்று முகுந்து தன்னுடைய அப்பாவிடம் சொல்வார்.
அதுவும் சென்னைக்கு மிக அருகில் இல்லாமல் தூரமாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு அப்பார்ட்மெண்ட் பாருங்க லோனுக்கு நான் அப்ளை பண்ணி இருக்கிறேன். அது சேங்சன் ஆனதும் நாம அப்பார்ட்மெண்ட் அட்வான்ஸ் கொடுத்துடலாம் என்று சொல்வார். அதுபோல இந்துவிடம் நேற்று வரைக்கும் என்னுடைய அக்கவுண்டில் 35 ஆயிரம் இருந்தது.
இனி லோன் கட்டி போக மீதம் 15,000 தான் இருக்கும். அதற்குள் தான் நம்முடைய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று சொல்லுவார். இப்படி நாட்டுக்காக பாடுபடும் ஒரு ராணுவ வீரரின் வருமானம் இவ்வளவு தான் இருக்கிறது. அந்த வீரருக்கு எந்த வசதிகளும் கிடையாது. ஆனால் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகருக்காக ஒரு ரசிகர் உயிரை கொடுக்க துணிகிறார்.
ஒரு கிரிக்கெட் வீரர் விளையாடுகிறார் என்றால் ஒரு சின்ன தப்பு செஞ்சால் கூட அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கும். அதில் அவர் சரி செய்து கொள்ளலாம். கிரிக்கெட் விளையாடுகிறார் அதில் அவருக்கு வருமானம் வருகிறது, அதை வைத்து விளம்பரத்தில் நடிக்கிறார் அதிலும் அவருக்கு வருமானம் வருகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்காக பலர் லட்சங்களை செலவழிக்கிறார்கள். ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரருக்கு ரீடேக் கிடையாது. அவர்கள் முடிவெடுக்க ஒரு முறை தான் வாய்ப்பு கிடைக்கும். அதில் அவர்கள் எடுக்கும் முடிவில் சின்ன தவறு நடந்தாலும் வாழ்க்கையே முடிந்து வடும். ராணுவ வீரர்கள் காஷ்மீரில் உயிரை பணயம் வைத்து காவல் காப்பதால் தான் நம்மால் நிம்மதியாக இருக்க முடிகிறது.
இந்த உலகத்தில் எத்தனையோ ஜாதி இருக்கலாம். ஆனால் இந்த சமுதாயத்தில் உயர்ந்த ஜாதி இந்திய ராணுவம். இந்திய ராணுவத்தை விட மிகப்பெரிய உயர்ந்த ஜாதி எதுவும் கிடையாது. இந்திய ராணுவ வீரனுக்கு ஜாதியே கிடையாது.. என்று தன்னுடைய ஆதங்கத்தை அந்த வீடியோவில் விஷ்வா பகிர்ந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications