அம்பிகா, ராதாவுக்கு 5 ஏக்கர் அரசு நிலம்? மீனா சொத்துக்கு பாதுகாப்பு? துயரமாய் போன சாவித்ரி: பிரபலம்
சென்னை: பொருளாதாரத்தை கட்டமைக்கக்கூடிய வழிகள் சில நடிகைகளுக்கு தெரிவதில்லை.. இதனால் சிலர் வறுமையில் சிக்குகிறார்கள், மேலும் சிலர் பொருளாதார பாதுகாப்புக்காக அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது நடிகை மீனா அரசியலுக்கு வருவது குறித்தும் கருத்து கூறியிருக்கிறார். இது சம்பந்தமான பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fine Time Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாண்டியன், "மீனாவுக்கு மத்திய அமைச்சர் பதவி என்று பரப்பி விடுகிறார்கள்.. வேலை வெட்டி இல்லாதவர்கள், கண்டண்ட் இல்லாதவர்கள், பரபரப்புக்காக செய்திகளை வெளியிடுவோர், வேறு சிந்தனையே இல்லாதவர்கள்தான் இந்த மீனா செய்தியை பெரிதாக்கி கொண்டிருக்கிறார்கள்.. பாஜக என்றில்லை, எந்த கட்சியிலுமே ஒரு நடிகை மத்திய அமைச்சராக முடியாது.

அம்பிகா, ராதா
நடிகைகள் அம்பிகா, ராதா இருவரும் 80களில் கோலோச்சினார்கள்.. ராதாவின் மகள்களும் நடிக்க வந்துவிட்டார்கள்.. இது இயற்கையான விஷயம்.. இன்று அம்பிகா, ராதா இருவருக்குமே பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள் உண்டு.. எம்ஜிஆர் மரணப்படுக்கையில் இருந்தபோது, அம்பிகா, ராதா, அம்மா சரசம்மா இவர்கள் 3 பேரும் ஏவிஎம் ஸ்டுடியோ போல தாங்களும் ஒரு ஸ்டுடியோ கட்ட வேண்டும் என்றும், அதற்கான இடம் ஒதுக்கி தர வேண்டும் என்றும் கேட்டார்கள்.
அதற்காக 5 ஏக்கர் நிலம் இலவசமாக தரப்பட்டது.. அதுதான் ஏஆர்எஸ் கார்டன், ஏக்கரா 50 கோடிக்கு இன்று போகும். இதைக்கேள்விப்பட்ட பாரதிராஜா, நான்தானே இவர்களை அறிமுகப்படுத்தினேன் என்று சொல்லவும், அவருக்கும் 5 ஏக்கர் நிலம் தரப்பட்டது. பிறகு பாரதிராஜா அதனை ஒரு ஓட்டலுக்கு விற்றுவிட்டார்..
மீனாவின் சொத்துக்கள்
இப்படி நடிகைகளுக்கு பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள் உண்டு. இந்த சொத்துக்களை காப்பாற்ற அரசியல் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. மீனாவின் நிலைமையும் கிட்டத்தட்ட இப்படித்தான்..
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மீனாவுக்கு நிறைய சொத்துக்கள் உண்டு.. சின்ன வயதிலேயே நடிக்க வந்துவிட்டார்.. இந்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.. தொழிலதிபர்களால் பொருளாதார ரீதியான அழுத்தமும் மீனாவுக்கு உண்டு.
எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டு, திருவனந்தபுரத்தில் அமைதியாக வாழ வேண்டும் என்று மீனா நினைத்தார். ஆனால், அனைத்து சொத்துக்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு விற்பதற்கு மீனாவால் முடியவில்லை என்பதால்தான், அரசியல் ஆதரவு தேவைப்படுகிறது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
டாக்டர் காந்தராஜ்
சமீபத்தில் BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு தந்திருந்த டாக்டர் காந்தராஜ் பேட்டியில், "அம்பிகா, ராதாவுக்கு சென்னை போரூரில் எம்ஜிஆர் நிலத்தை வழங்கியது, பெரிய ரகளையாகிவிட்டது.. அதுதான் ஏஆர்எஸ் கார்டன்.. இத்தனைக்கும் அம்பிகா, ராதா இருவருமே எம்ஜிஆருடன் ஒரு படத்திலும் நடிக்கவில்லை..
தன்னுடைய ஊர்க்காரர்கள் என்று அரசு நிலத்தை தந்துவிட்டதாக மிகப்பெரிய விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டது. அதிலும் படுத்த படுக்கையில், அவர்களை கூப்பிட்டு தந்தார்.. எம்ஜிஆர் ஜானகி கல்லூரி இன்று உள்ளது.. 16 ஏக்கர் அரசு நிலத்தை அப்படியே தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டதும், கெட்ட பெயராகிவிட்டது..
சிஏஜி அறிக்கை
சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் என்ஜினியரிங் கல்லூரிகளை அனுமதி தந்து கட்ட வைத்தார் எம்ஜிஆர் என்றுதான் விமர்சனங்கள் பெருகின. ராமச்சந்திரா கல்லூரி, எம்ஜிஆர் ஜானகி கல்லூரி தொடர்பான வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன.
பல நல்ல விஷயங்களை எம்ஜிஆர் செய்திருக்கிறார். ஆனால், வளர்ச்சி திட்டங்களைவிட கவர்ச்சியான உதவிகளையே அதிகம் செய்தார்.. இதைத்தானே சிஏஜி அறிக்கையாக தாக்கல் செய்தது" என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
தனித்து வாழ்வதில் சிக்கல்
அதேபோல, மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தந்திருந்த பேட்டியில், "100 கோடி, 500 கோடி சம்பாதித்தாலும், அதை நடிகைகள் பாதுகாப்பது என்பதுதான் இன்றைய மிகப்பெரிய சிக்கலே.. இந்த சொத்துக்களை பாதுகாக்கவே, நடிகர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு, 2வது, 3வது மனைவியாக திருமணம் செய்து கொள்ளவும் முனைகிறார்கள்.
மேலும், பெண்கள் தனியாக வாழ்வதில் சிக்கல் இன்றும் நம்முடைய சமுதாயத்தில் நிலவுகிறது. துணையில்லாத ஏக்கம் மட்டுமே ஆண்களுக்கு இருக்கும். ஆனால், பெண்களுக்கு அதையும் தாண்டி, பாதுகாப்பு பிரச்சனைகளும் சமுதாயத்தில் உள்ளது என்று கூறியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications