நடிகர் மிர்ச்சி செந்தில் வீட்டில் அடுத்த விசேஷம்.. கைக்குழந்தையோடு மகிழ்ச்சியை பகிர்ந்த ஸ்ரீஜா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் ஒன்றாக நடித்த மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா காதலித்து திருமணமும் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் தான் பல வருடங்கள் கழித்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
அதே நேரத்தில் தங்களுடைய கைக்குழந்தையோடு இந்த தம்பதி மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கின்றனர்.

நிஜ வாழ்க்கையே போலவே சீரியலிலும் சினிமாவிலும் ஒன்றாக நடிப்பவர்கள் பலர் காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர். ஆனால் அந்த திருமண வாழ்க்கை பலருக்கு பாதியிலே முடிந்திருக்கிறது. ஒரு சிலர் மட்டும்தான் பல வருடங்களாக தங்களுடைய காதல் திருமண வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ஒரு காதல் தம்பதி தான் சரவணன் மீனாட்சி சீரியல் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இந்த சீரியலில் ஒன்றாக நடித்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தனர். இந்த சீரியலுக்கு முன்பு மிர்ச்சி செந்தில் மதுர என்கிற சீரியல் அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்பாக இவர் ஒரு ஆர்.ஜே வாக நிகழ்ச்சியை தொகுத்து வழக்கி கொண்டு இருந்தார்.
ஆனாலும் சரவணன் மீனாட்சியின் முதல் சீசனின் சரவணன் மற்றும் மீனாட்சி ஆக அதிகமான ரசிகர்களை கவர்ந்த இந்த ஜோடி நிஜ வாழ்க்கையில் சேர்ந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்தனர். அதை பொய்யாக்க விரும்பாமல் இந்த ஜோடியும் திருமணமும் செய்திருந்தனர். திருமணம் முடிந்து பல வருடங்கள் கழித்து சமீபத்தில் தான் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜாவின் திருமண நாள் வந்திருக்கிறது. அப்போது இருவரும் சில புகைப்படங்களையும் வெளியிட்டு எடுத்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மிர்ச்சி செந்தில் சமீபத்தில் என்னுடைய திருமண நாளை நான் தவற விட்டு இருப்பேன். ஆனால் அந்த நாள் முடிவதற்குள் சரியான நேரத்திற்குள் நான் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டேன்.
அதோடு இதுதான் எங்களுடைய மகளுடன் நாங்கள் கொண்டாடும் முதல் திருமண நாள். அந்த மகிழ்ச்சியை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று திருமணநாள் அன்று எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அந்த புகைப்படத்தில் அவருடைய கண்கள் வீங்கியது போன்று இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு மிர்ச்சி அண்ணா? உங்க கண்கள் வீக்கமாக இருக்கிறதே என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அதுபோல மிர்ச்சி செந்தில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலுக்காக பல கஷ்டமான செயல்களை செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சீரியல் நடிப்புக்காக ஏதேனும் இவர் கஷ்டப்பட்டதால் கண்களில் வீக்கம் வந்ததா? என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுபோல இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
-
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications