காணாமல் போன நடிகர் மாதவன்.. என்ன ஆச்சு? அவரே வெளியிட்ட பதிவு.. நீட் விவாகரத்தில் உடைந்த மௌனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் நடிகர் மாதவனை காணவில்லை என்று சில போஸ்டர்கள் இணையத்தில் வைரலானது. பூனை திரைப்பட கல்லூரி தலைவரான நடிகர் மாதவனே ஆபிஸின் கதவிலேயே ஒரு பொம்மை வரைந்து அதில் நடிகர் மாதவனை காணவில்லை என்று கல்லூரி மாணவர்கள் ஒட்டிய போஸ்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு, மாணவர்கள் போராட்டம் என நாடு முழுக்க பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் மாதவன் எதுவும் பேசவில்லையே என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்று அவர் நீண்டமான ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

R Madhavan Madhavan NEET

நடிகர் மாதவன் வெளியிட்ட பதிவு

தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் வகையில் மாதவன் வெளியிட்ட பதிவில், நம்ம நாட்டோட எதிர்காலத்தை தீர்மானிக்கிற மிகப்பெரிய சக்தி கல்விதான். ஒவ்வொரு மாணவருக்கும் நியாயமான வெளிப்படையான திறமையை அடிப்படையில் இயங்கும் கல்வி அமைப்பு கிடைக்க வேண்டும் என்று மாதவன் சொல்லி இருக்கிறார். மேலும் இன்று பல மாணவர்களும், பெற்றோர்களும் உணரும் கவலையையும், ஏமாற்றத்தையும், நானும் பகிர்ந்து கொள்ளகிறேன்.

வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் ஒரு தேர்வை மட்டும் பாதிக்காது. ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளையும் குடும்பங்களையும், நம்பிக்கையும் உடைக்கிறது. அதோடு இந்த விவாகரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைவாகவும், எளிதாகவும் ஸ்ட்ராங்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காத அளவுக்கு கல்வி அமைப்பு வலுப்படுத்த வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

மாணவர்களுக்கு அட்வைஸ்

அதோடு இன்று மனம் உடைந்து இருக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் நான் சொல்ல விரும்புவது, தயவு செய்து நம்பிக்கை மட்டும் இழக்காதீர்கள். உங்கள் திறமையும், உழைப்பும் எந்த அமைப்பின் குறைபாடுகளையும் விட பெரியது என்று கூறியிருக்கிறார். அதோடு அமைதியான முறையில் சீர்திருத்தத்துக்காக போராடுபவர்களை பாராட்டிய அவர் அந்த போராட்டத்தை வேறு திசைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

R Madhavan Madhavan NEET

நீட் போராட்டம்

நீட் போராட்டத்திற்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக நடிகை ஆலியா பட், நடிகர் சல்மான்கான், ராஜ்குமார் ராவ், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரின் தங்களது கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அப்போது அமைதியாக இருந்த மாதவன் ஏன் பேசவில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது. இப்போது அந்த விமர்சனங்களுக்கு பதிலாகவே இந்த பதிவு பார்க்கப்படுகிறது.

4 வயதிலேயே என் மகனுக்கு கருத்தடை முதல் பாலியல் பாதுகாப்பு வரை சொல்லி கொடுத்தோம்.. ஏனென்றால் நடிகர் மாதவன் ஓபன்
மாதவன் இப்படி போஸ்ட் போட்டதும் இது லேட்டான பதிவாக இருந்தாலும் சரியான விஷயத்தை சொல்லி இருக்கிறார் என்று அவருடைய பதிவுக்கு ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் அவர் இதற்கு முன்னாடியே இதை பேசி இருக்கணும் என்றும் சொல்லி வருகின்றனர். கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் லீக் ஆனதிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதுதான் இப்போது சோசியல் மீடியா முழுக்க பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+