அட.. நம்ம ஊரு பொண்ணுங்க இம்புட்டு அழகுன்னு இப்பத்தான்.. தெரியுதாக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் முன்னெல்லாம் சினிமாவுல மார்க்கெட் போன நடிகைங்களை சீரியலில் நடிக்க வைப்பாங்க.

அதுக்கப்புறம் ஒரு காலக்கட்டத்தில் ஹீரோயின் யங்கா இருக்கணும்னு தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, பெங்காலி மொழியில் இருந்து நடிகைகளை அழைச்சுட்டு வந்து நடிக்க வச்சாங்க.

இதை முதலில் ஆரம்பிச்சு வச்சது வாணி ராணி சீரியலில் ராதிகா மேடம்தான்.அதுக்கப்புறம் வரிசையா எல்லா சீரியல்களிலும் வேறு மொழி நடிகைகள்தான் அதிகம் நடிச்சுட்டு இருந்தாங்க.

More Tamil girls act in TV serials

அப்புறம் வந்தாங்க பாருங்க தெய்வமகள் சீரியலில் வாணி போஜன், இவங்க நீலகிரியை சேர்ந்தவங்க. மலைவாழ் மக்கள் பேசும் படுகா மொழி பேசறவங்கன்னு சொல்ற வாணி, ஆங்கில இலக்கியம் படிச்சுட்டு விமானப் பணிப்பெண் வேலையில் இருந்திருக்காங்க.ஒரு வழியா நடிக்கவும் வந்தாச்சு,

கண்மணி சீரியலில் முத்துசெல்வியா நடிக்கற பொண்ணு பேரு சங்கவி. இவங்க சொந்த ஊரு தஞ்சாவூரு. நல்ல பக்தி உள்ள பொண்ணு... தஞ்சாவூரு பிரகதீஸ்வரர் பெரிய கோயிலுக்கு அடிக்கடி போறது இவருக்கு பிடிக்குமாம்.

More Tamil girls act in TV serials

சுமங்கலி தொடரில் அனுவா நடிக்கற அழகான பொண்ணுக்கு ராமநாதபுரம் சொந்த ஊராம். ராமநாதபுரம் போறப்போ எல்லாம் மதுரையில இறங்கிட்டுத்தான் போகணும். அப்போ கண்டிப்பா மதுரை ஜிகர்தண்டா குடிக்காம ஊருக்கு போக மாட்டேன்னு இவர் சொல்றார்.

More Tamil girls act in TV serials

நாயகி சீரியலில் சுகாசினியா நடிக்கற பொண்ணு மதுரைக்கார பொண்ணாம். . நான் மதுரைக்கார பொண்ணு, என்கிட்டே வாலாட்ட நினைச்சா அவ்ளோதான்னு மதுரை கெத்து காமிக்கறார்.

More Tamil girls act in TV serials

நாயகி சீரியலில் நடிக்கும் சுமதியோட உண்மையான பேர் சாய் இலக்கியா. இவர் ஈரோடு பொண்ணு. நல்லா நடிச்சு நிறைய சாதிக்கணும், நிறைய பேருக்கு உதவணும்ன்ற எண்ணத்துல சென்னைக்கு வந்திருக்கும் இவர், கொஞ்சமாக காலூன்றி இருக்கார்னு சொல்லலாம்.

More Tamil girls act in TV serials

இன்னும் தேடிப்பார்க்கலாம்...நிறைய தமிழ் பொண்ணுங்க, சினிமாவில் இல்லேன்னாலும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்னு அந்தந்த ஊர் கல்லூரியில் விஸ்.காம் படிக்கறாங்க. அவங்களுக்கு இந்த பொண்ணுங்கதான் முன்னோடின்னு தாராளமா சொல்லலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+