மனோஜ்ஜை கிட்ட போய் பார்க்காமல்.. தீபம் ஏற்றி? இந்த 3 பேருமே வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள்: பிரபலம்
சென்னை: "இசை இசைன்னு இருந்து, என் குழந்தையை கவனிக்காம விட்டுட்டேன்"னு இளையராஜாவே சொல்றாரு? இதுல பெருமை வேற.. இன்று மகனின் பிரிவில் அப்பா அழுவதை பார்க்க கடினமாகத்தான் உள்ளது.. அதேசமயம், பாரதிராஜாவே, மகனுக்காக லோ-பட்ஜெட்டில் நான்கைந்து படங்களை தயாரித்திருக்கலாம். அதில் ஒன்று கிளிக் ஆகியிருக்கக்கூடுமே என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
BBT Cinemas யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "உயிரோடு இருக்கும்போது, ஒரு மனிதனுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும்? உயிர் போனதுமே பூஜை செய்கிறார்கள். எனினும் இதெல்லாம் அவரவர் இறை நமபிக்கை.. அதை பற்றி நாம் கருத்து கூறக்கூடாது. இளையராஜா, பாரதிராஜா இவர்கள் மிகமிகப்பெரிய ஆளுமைகள்.. ஆனால், இந்த 2 பேருமே, தனிப்பட்ட தங்களது வாழ்க்கையில், தோல்வியடைந்த நபர்கள்..

பவதாரணி - மனோஜ்
இவர் மகளை பறிகொடுத்தவர், அவர் மகனை பறிகொடுத்தவர்.. இருவரிடமும் உள்ள பணத்தை வைத்து, செல்வாக்கை வைத்து, அந்த பிள்ளைகளை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.. இருவருமே துயரத்தில் தற்போது உள்ளனர்.
குழந்தையை விட்டுட்டேன்
ஆனால், இவர்கள் தங்களுக்கு அருகில் உள்ளவர்களை நேசிக்க தெரியாமல், இறைவனை அன்றாடம் பூஜித்து என்ன பயன்? இறைவனை வணங்குங்கள், அது உங்கள் விருப்பம்.. ஆனால், பக்கத்திலேயே இருந்த நபருக்கு, என்ன வேண்டும்? என்று ஆதரவாக கேட்டு செய்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் ஒரு உயிர் இன்று போயிருக்காது.
"இசை இசைன்னு இருந்து, என் குழந்தையை கவனிக்காம விட்டுட்டேன்"னு இளையராஜாவே சொல்றாரு? இதுல பெருமை வேற.. இன்று மகனின் பிரிவில் அப்பா அழுவதை பார்க்க அனைவருக்குமே கடினமாகத்தான் உள்ளது.. அதேசமயம், பாரதிராஜாவே, தன்னுடைய மகனுக்காக லோ-பட்ஜெட்டில் நான்கைந்து படங்களை தயாரித்திருக்கலாம். அதில் ஒன்று கிளிக் ஆகியிருந்திருக்கக்கூடும்.
மன உளைச்சலில் மனோஜ்
கட்டின மனைவி, பெற்ற பிள்ளைகளை விட்டுவிட்டு, கடவுளிடம் வேண்டி என்ன பயன்? இவங்களுக்கெல்லாம் 80 வயதாகிறது.. எப்பேர்ப்பட்ட ஜாம்பவனாக இருந்தாலும், அடிப்படை ஒழுக்கம் முக்கியம்.. உலகமும் இதைதானே இன்று முக்கியமாக கருதுகிறது?
மன அழுத்தம், மன உளைச்சலில் மனோஜ் இருந்ததாக இத்தனை பேரும் , இப்போது வந்து சொல்கிறார்கள்.. ஆனால், ஒருவரும் மனோஜூக்கு , எந்த சந்தர்ப்பத்தையும் உருவாக்கி தரவில்லை. அதேபோல, "நான்தான் மனோஜின் நெருங்கிய நண்பர், நான் அவரது கஷ்டத்துக்கு இப்படியெல்லாம் ஆறுதல் சொன்னேன், நான் வாய்ப்பு தந்தும், மனோஜ் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை" என்றும் ஒருத்தரும் இதுவரை சொல்லவில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications