மோதலும் காதலும் சீரியல் முடிய காரணம் இதுதானா? கடைசி நாளில் தெரிய வந்த விஷயம்.. மனம் திறந்த நடிகர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் சமீர் அகமது தனது இன்ஸ்டாகிராமில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது சீரியல் எதற்காக அவசரமாக முடிவு அடைய போகிறது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த லைவில் சமீரிடம் ரசிகர்கள் எதற்காக திடீரென்று சீரியல் முடிவடைகிறது? நீங்களும் ஒரு சில நாட்களாக எந்த போஸ்ட்டும் போடவில்லையே? என்று கேட்ட கேள்விக்கு சமீர், சீரியல் சில தவிர்க்க முடியாத காரணங்களால் முடிவுக்கு வர இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக டிஆர்பி கூட இருக்கலாம். ஆனால் சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்பது எங்களுக்கு கடந்த சூட்டிங்கில் தெரிய வந்துவிட்டது.

அதற்குப் பிறகு நாங்கள் எல்லோருமே சீரியல் முடிவு குறித்து மனதளவில் தயாராகி விட்டோம். இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே ஒரு குடும்பமாக தான் வாழ்ந்து வந்தோம். எங்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம். எப்போதும் சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக ரீல்ஸ் எடுத்து இருப்போம். புகைப்படங்களும் எடுப்போம். ஆனால் இப்போது எல்லாரையும் மிஸ் பண்ணுவோம் என்பது கஷ்டமாக இருக்கிறது.
ஆனாலும் நான் போஸ்ட் போடாததற்கு காரணம் எனக்கு லாஸ்ட் டே ஷூட்டிங்கில் அதிகமான ஷாட் இருந்தது. அதனால் நான் பிஸியாக இருந்தேன். அதனால்தான் சில நாட்களாக என்னால் போஸ்ட் மற்றும் புகைப்படங்கள் போட முடியவில்லை. ஆனால் நான் போஸ்ட் போடவில்லை என்பதால் சீரியல் தரப்பினரோடு எனக்கு கருத்து வேறுபாடு அதனால் தான் சீரியல் முடிவடைய போகிறது என்று சில செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது.
நான் கொஞ்சம் பிஸியாக இருந்தேன் அதனால் தான் எந்த புகைப்படங்களும் வெளியிட முடியவில்லை. அதுபோல இப்போது லைவில் கூட ரசிகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று தான் நான் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் சில ரசிகர்கள் நீங்கள் சீரியல் முடிவடைய போகிறது என்று கொஞ்சம் கூட வருத்தப்படவில்லையே என்று கேட்கிறார்கள்.
அதற்கு காரணம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம் வரதான் செய்யும். எல்லா நேரங்களில் சந்தோஷம் மட்டும்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. சில இடங்களில் சில மாற்றங்கள் வரும் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த நிலைமையில் தான் நாங்கள் இருக்கிறோம்.
எங்களுக்கு ஏற்கனவே சீரியல் முடிவடைய போகிறது என்று தெரிந்ததால் நாங்கள் அதற்கு மனதளவில் எல்லோரும் தயாராகி விட்டோம். சீக்கிரமாக இன்னொரு நல்ல வாய்ப்போடு மீண்டும் உங்கள் முன்பு திரும்பி வருவோம். இதுபோல எப்போதும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று அந்த வீடியோவில் சமீர் பேசி இருக்கிறார்.

நடிகர் சமீர் அகமதுவின் சொந்த ஊர் கோவை மாவட்டம் தானாம். அங்கு தான் டிசம்பர் 4, 1994 ஆம் ஆண்டு இவர் பிறந்திருக்கிறார். இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் மாடலாகவும், பாடி பில்டர் ஆகவும் இருக்கிறாராம். அதுவும் எம் ஆர் தமிழ்நாடு வேர்ல்ட் வைட் 2019 இல் வெற்றியாளராகவும இவர் இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் கலர் தமிழில் ஒளிபரப்பான சில்லுனு ஒரு காதல் என்ற சீரியலில் மூலமாகத்தான் இவர் சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார்.
சில்லுனு ஒரு காதல் சீரியலில் சூர்யா குமார் என்ற கேரக்டரில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அந்த சீரியல் முடிவடைந்த பிறகு தான் சமீர் அகமதுவுக்கு மோதலும் காதலும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் முதலில் விக்ரம் வேதா என்ற பெயரோடு தொடங்கப்பட்ட நிலையில் பின்பு பெயர் மாற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சமீர் அகமதுவை இந்த சீரியலில் பார்த்ததும் இவருக்கு அதிகமான பெண் ரசிகைகள் உருவாகி இருக்கின்றனர். ஆனாலும் நடிகர் சமீருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியோடு சமீர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications