Naam Iruvar Namakku Iruvar Serial: மவுனராகம் லேட்டஸ்ட் வெர்ஷன்...பார்க்கறீங்களா?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இயக்குநர் மணிரத்தினம் அவர்களின் மவுனராகம் லேட்டஸ்ட் வெர்ஷன் வந்தால் இப்படித்தான் இருக்கும் என்பது போன்ற காட்சிகள், பிடிக்காமல் திருமணம் செய்துக்கொண்ட டாக்டர் அரவிந்துக்கு, இப்போது பொண்டாட்டியை பிடிச்சுப் போகுது.
ஆனால், பொண்டாட்டி தாமரை மீது மலர்ந்த காதலை சொல்லத் தயக்கம் அவனுக்கு. தாமரையின் வீட்டில் சும்மா இருப்பார்களா, இந்த கல்யாணம்தான் மக்களுக்கு ஃ பெயிலியர் ஆகிப் போச்சு. இன்னொரு கல்யாணம் செய்து வைக்கலாம்னு ஏற்பாடு செய்யறாங்க.
தாமரைக்கும் புருஷன் அரவிந்த் மேல காதல்தான். ஆனால், அவன் சொல்லுவான் என்று இவள் எதிர்பார்த்து காத்திருக்கையில், இரண்டாம் கல்யாணத்துக்கு சம்மதித்தே ஆக வேண்டிய கட்டாயம். மனம் இல்லாமல் சம்மதிக்கிறாள்.

சம்மதிக்கிறேன் ஆனால் அரவிந்த்
அம்மா கல்யாணத்துக்கு சம்மதிக்கலேன்னா செத்துருவேன்னு பிளாக் மெயில் செய்து தாமரையை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுடறாங்க. ஆனால், ஒரு கண்டிஷன் போடுகிறாள் தாமரை. கல்யாணத்துக்கு முதல் புருஷன் அரவிந்த் குடும்பத்தையும் கூப்பிடணும்னு இதற்கும் சம்மதிக்கிறார் தாமரையின் அம்மா. இப்போ கல்யாண மேடையில் தாமரை நிற்க, முதல் புருஷன் அரவிந்த் கண்கலங்கி நிற்கறான்.மேடையில் இவளும் கண்கலங்கித்தான் நிற்கிறாள்.

முதல் புருஷன் தாலி
மணமேடையில் நிற்கும் தாமரையின் கழுத்தில் முதல் புருஷன் கட்டின தாலியை பார்த்து விடுகிறார், கரண்ட் மாமியார். என்னாது இது உங்க பொண்ணு முதல் புருஷன் கட்டின தாலியோடு நிக்கறான்னு சத்தம் போட, உடனே அம்மா வர்றாங்க. என்ன தாமரை உன் மனசில்என்ன நினைச்சுகிட்டு இருக்கே.. தாலியைக் கழட்டி குடுன்னு மேடையில் அம்மா சொல்றாங்க. கீழே முதல் புருஷன் அரவிந்த் அம்மாவுடன் நின்றுக்கொண்டு இருக்கிறான்.

தாலி தாமரை
புருஷன் அரவிந்த் பார்த்து கண்ணீர் மல்க நிற்க, தாமரை தாலியை கழட்டி அம்மாவின் கையில் கொடுக்கிறாள். இதுதான் எமோஷன் சீன்...கல்யாணம் நடக்குமா, நடக்காதா? பொறுக்க முடியாமல் அரவிந்த் வந்து தனது காதலை சொல்லி, உன்னை வேண்டாம் என்று நான் சொன்னது தப்புதான். நீதான் எனக்கு வேணும் தாமரைன்னு சொல்லி வாய்விட்டு கதறி மனதில் இருப்பதை கொட்டிவிட்டால் என்றால், தாமரை எதிர்பார்த்தது நடக்கும். இப்போ சொல்லுங்க ஐந்து மவுனராகம் படம் லேட்டஸ்ட் வெர்ஷன்ம் மாதிரி இல்லை?

அரவிந்த் மாயன்
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஆர்.ஜெ.செந்தில் மாயன், அரவிந்த் என்கிற இரட்டை கதாபாத்திரத்தில் இரட்டை வேடம் ஏற்று நடிக்கிறார். மதுரை பாஷையை மிகச் சரளமாக பேசி நடிப்பது நன்றாக இருக்கிறது. இரண்டு வேடங்களுக்கும் சரியான வித்தியாசம் காண்பித்து நீடித்து வருகிறார். ஆரம்பத்தில் ரொம்ப சுறுசுறுப்பாக சென்று கொண்டு இருந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் டல்லடிக்குது.
ஏன் என்று பார்த்தால் மாயன் தேவி ரொமான்ஸ் மிஸ்ஸாகுதாம். . எது இந்த எபிசி சொல்லிக் கொடுக்கற ரொமான்ஸான்னு நீங்க கேட்கலாம். அதைத்தானே ரிப்பீட் ஆடியன்ஸ் பார்க்கறாய்ங்க.. கேட்கறாய்ங்க...கிடக்கற பிரச்சனைகளை எல்லாம் கிடப்பில் போட்டுட்டு அப்பப்போ நேயர் விருப்பத்தையும் கொஞ்சம் கவனிங்க சார்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications