பிரபுவை பார்த்ததுமே தேம்பி தேம்பி அழுத ராதிகா.. அம்மாவின் உடலை கண்டு வெடித்து கதறிய நடிகை நிரோஷா
சென்னை: நடிகை ராதிகா வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், "மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், எனது தாயார் கீதா ராதா (வயது 86) அவர்கள் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.20 மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அறிவித்திருந்தார்.. இதையடுத்து, நடிகை ராதிகாவுக்கு திரைப்பிரபலங்கள் ஆறுதலை சொல்லி வருகிறார்கள்.
நடிகை ராதிகா சரத்குமாரின் அம்மாவும், நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மனைவியுமான கீதா ராதா நேற்றிரவு 9.20 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக் குறைவாலும் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு 3 மனைவிகள். அதில் 3வது மனைவி தான் கீதா... இவரது மகள்கள் தான் நடிகை ராதிகா மற்றும் நிரோஷா.
ராதிகாவுக்கு எல்லாமே அம்மாதான்
ராதிகாவின் அம்மா கீதா இலங்கையைச் சேர்ந்தவர். எனினும், ராதிகா பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்... ஓட்டல் தொழிலில் பயிற்சி பெற லண்டனுக்கு சென்றுவிட்டு, மீண்டும் சென்னை திரும்பியிருந்தார் ராதிகா. அப்போதுதான், ராதிகாவுக்கு சினிமா வாய்ப்பு வந்தது..
ராதிகாவை ஹீரோயினாக உருவாக்கியதே அவரது அம்மா கீதாதான்.. சின்ன வயதிலிருந்தே ராதிகாவுக்கு அம்மா மீது அதிக பிரியம்.. அப்பாவையும் இழந்த நிலையில், அப்பாவாக, தோழியாக ராதிகாவுக்கு திகழ்ந்தவர் கீதாதான்.. கண்டிப்பு, பாசம் என இரண்டையுமே ராதிகா மீது பொழிந்தவர். ராதிகாவின் கால்ஷீட், சம்பளம் முதல் அனைத்தையும் கவனித்து கொண்டது அவரது தாய் கீதா தான்.
அதுமட்டுமல்ல, அடுத்த வாரம் என்னென்ன நிகழ்ச்சிகள் உள்ளதோ, அத்தனையையும் முன்கூட்டியே ஷெட்யூல் போட்டு ராதிகாவுக்கு எழுதி தந்துவிடுவாராம்..
நிஜமான இரும்பு பெண்
ஒரு பேட்டியில் ராதிகா சொன்னார், "நிறைய பேர் என் அப்பாவை தைரியசாலி என்பார்கள்.. ஆனால், எனக்கு தெரிந்து என் அம்மாதான் தைரியமானவர்.. என் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மாற்றி அமைத்ததே என் அம்மாதான்" என்று தெரிவித்திருந்தார்.
எப்போதுமே ராதிகா தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம்... அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வீடியோக்களையும் போட்டோக்களையும் வருடா வருடம் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுவிடுவார்.. கடந்த பிறந்தநளின்போதுகூட, அம்மாவுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை போஸ்ட் செய்திருந்த ராதிகா, "என்னுடைய அம்மா உண்மையான இரும்புப் பெண்" என்று பதிவிட்டிருந்தார்.
அதேபோல நடிகை நிரோஷாவும் தன்னுடைய அம்மா மிகவும் ஸ்ட்ராங்கானவர்,. என் சகோதரிகளும் வலிமையானவர்கள். பெண்களின் வலிமை மற்றும் ஆற்றல் மீது எனக்கு எப்பவுமே மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

நடிகர் நாசர், நிரோஷா, பாக்யராஜ்
இந்நிலையில், கீதா வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.. அவரது உடலுக்கு திரைக்கலைஞர்கள், பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கிறார்கள்.. தன்னுடைய தாயின் உடலை கண்டு ராதிகா கதறி கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது. மறைந்த முதல்வர் கருணாநிதி மகள் செல்வி, நாசர், பாக்யராஜ், பூர்ணிமா, பொன்வண்ணன் உள்ளிட்டோர் திரண்டு வந்து மறைந்த கீதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஓடோடி வந்த பிரபு
இதில் அப்பிய சோகத்துடன் உள்ளே நுழைந்த பிரபுவை பார்த்ததுமே ராதிகா கதறி கதறி அழுதார்.. அதேபோல நாசரின் கைகளை பிடித்து கொண்டு, நிரோஷா அழுதுகொண்டேயிருந்தார்.. ராதிகா, நிரோஷாவை திரைப்பிரபலங்கள் சமாதானம் செய்து, ஆறுதலை சொல்லி வருகிறார்கள்.
அதேபோல சோஷியல் மீடியாவிலும் ரசிகர்கள் ராதிகாவுக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.. "அம்மாவின் மரணம் மிகப்பெரிய இழப்பு.. அதை தாங்கிக் கொள்ளும் தைரியத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கட்டும். உங்களை எப்படி தேற்றுவதென்றே தெரியவில்லை ராதிமா. அம்மா கீதாவ விட தைரியமானவர் நீங்கள். அதனால் இதையும் கடந்து வருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆறுதலாக பதிவிட்டு வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications