pandian stores serial: முல்லையின் கண்ணும்.. கதிரின் பார்வையும்.. அப்பப்பா.. மேக்கப் ஜாஸ்திதான்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிரின் கண் பேசும் பேச்சும்... அவர்கள் ஓரிரு வார்த்தைகளாக பேசிக்கொள்வதும்தான் சீரியலின் ஹைலைட்டே.
இதை பார்க்கத்தான் ரசிகர்கள் காத்து கிடந்து சீரியல் பார்க்கின்றனர். ஒரு சிலர் பார்த்த காட்சிகளையே போனில் திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கின்றனர்.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்பது போல உணர்கின்றனர்
தென்றல் போல இவர்களின் காதல் அனைவரையும் மகிழ்விக்கிறது. பலரும் விரசம் இல்லாத இந்த ரொமான்ஸை பார்த்து மகிழ்கின்றனர்.ஆனால், இப்படியே தொடர்ந்தாலும் போரடித்துப் போகுமே அது தெரியுமா உங்களுக்கு?

காதலுக்கு மரியாதை
ஒரு சில காதல் படங்கள் மாபெரும் வெற்றியை தருவது தென்றல் போல அந்த காதல் பார்ப்பவர்களை வருடுவதால்தான். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போன்ற படங்கள் இந்த ரகத்தில்தான் இருந்தது. இப்படி திரைப் படங்களில் சொன்னால் எத்தனையோ படங்களை சொல்லலாம்.

சீக்கிரம் முடிங்க
இப்படித்தான் தென்றல் போல சின்னத்திரைக்கு முல்லை கதிர் காதல் கதை பார்ப்பவர்களை வருடி வருகிறது. இதில் இருக்கும் விரசமில்லாத ரொமான்ஸ் இதே போல தொடர வேண்டும். அதே மாதிரி இதையே இழுத்தடிக்காமல் சட்டு புட்டென்று முல்லை கதிர் காதல் கதையை முடித்துக் கொண்டால் இந்த காதலுக்கும் மரியாதை கிடைக்கும்.

இயல்பான கேரக்டர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிச்சு இருக்கும் அனைவருமே இயல்பான கதாபாத்திரங்களாக அப்படி அப்படியே நடிச்சு இருக்காங்க. தனமாக நடிச்சு இருக்கும் சுஜிதா அவ்வளவாக மேக்கப் போடாமல் நடிச்சு இருக்கார். அதிக மேக்கப்பில் மீனா, முல்லை கதாபாத்திரங்கள் உலா வருகின்றனர். இது பார்க்கற நமக்கே ஓவராகத்தான் இருக்கிறது.

முல்லை கதிர்
முல்லையாக நடிக்கும் சித்ரா, கதிராக நடிக்கும் குமரன் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்தது என்னவோ உண்மைதான் என்று அவர்கள் ஒப்புக்கொண்டு வீடியோ விட்ட பின்னர் இருவரும் ஒன்றாக பேட்டிகளும் கொடுக்க ஆரம்பித்து உள்ளனர். அப்போதுதான் முல்லையாக அந்த கேரக்டருக்கு அதிகம் மேக்கப் தேவை இல்லை என்று நினைப்பதாக குமரன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications