Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொட்டச் சொட்ட நனைந்த தர்ஷா.. அந்த வெட்கத்தைப் பாருங்களேன்.. ரசிகர்கள் ஜிலீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தி இருக்கிறார் நம்ம டிவி நடிகை தர்ஷா குப்தா.

சினிமா சூப்பர் ஹீரோயின்களுக்குத் தேவையான அத்தனையும் பக்காவாக வைத்துள்ள நடிகைதான் தர்ஷா குப்தா. குறிப்பாக ரம்யா பாண்டியனுக்கு எடுப்பான போட்டியாக துடிப்பான இடையுடன் மிடுக்கான நடையுடன் வலம் வருபவர் தர்ஷா.

தனது இடுப்பழகை அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி வெளிச்சம் போட்டுக் காட்டி அதிர வைப்பவர் தர்ஷா.. இப்போதும் கூட ஒரு சூப்பர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். ஆனால் பாருங்க.. அவர் போட்டோ ஷூட் எடுக்க மொட்டை மாடிக்குப் போனபோது மழையும் கூட வரவே.. அது வேற லெவலில் போய் விட்டது.

ஹாட் ஸ்டார்

ஹாட் ஸ்டார்

தர்ஷா குப்தாதான் சின்னத்திரையின் ஹாட்டஸ்ட் நாயகிகளில் ஒருவர். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் கதாநாயகியாக நடித்திருப்பார். கிராமத்து கேரக்டர் அதில் அவருக்கு. சும்மா சொல்லக் கூடாது.. செமையாக நடித்திருப்பார். அதிலும் பாவாடை தாவணியில் பார்த்தவர் மனதை பச்சக்கென்று வசீகரித்திருப்பார். மாமன் மகனையே சுற்றிச் சுற்றி வரும் கேரக்டர் அது.

மொய்க்கும் ரசிகர்கள்

மொய்க்கும் ரசிகர்கள்

ஆனால் ரசிகர்களோ இப்போது தர்ஷாவையே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். காரணம் அவர் போட்டுத் தள்ளும் ஹாட்டஸ்ட் போட்டோக்கள்தான். நல்ல கேமராக்காரர் ஒருவரை கையில் வைத்துள்ளார். விதம் விதமாக அவரும் சுடுகிறார்.. இவரும் விருந்து படைக்கிறார். பார்க்கவே படு க்யூட்டாக இருக்கிறது போட்டோக்கள்.. அதை விட அதற்கு வரும் கமெண்ட்டுகள்தான் செம செம ரகம்.

நிறைய கவிதை

நிறைய கவிதை

அதில் நிறைய கவிதைகள் வந்து குவிந்திருக்கு.. தர்ஷாவே அதைப் பார்த்து மலைத்துப் போய் விட்டாராம்.. ஒவ்வொரு கவிதைக்கும் ஹார்ட்டின் விட்டு அவரும் மகிழ்ந்திருக்கிறார். ரசிகர்களையும் மகிழ்வித்திருக்கிறார்.. யாருக்குங்க இந்த பாக்கியம் கிடைக்கும்.. தர்ஷாவின் ஹார்ட்டின் கிடைப்பதற்கு.. பார்க்கவே செம ஜாலியாக இருக்கிறது தர்ஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கம்.

குழியில் விழுந்த ரசிகர்!

குழியில் விழுந்த ரசிகர்!

அதில் வரும் ஒரு கவிதை இது.

உன்னை கண்ட

நாள் முதல் நான் பைத்தியக்காரன் ஆகிவிட்டேன்..!

ஏன் இந்த அவஸ்தை

என்னில் நான் நிஜமாகத்தான் நினைக்கின்றேன் ஆனால் என் இதயம் சொல்கிறது

என் நிஜமும் உயிரும் என்னுடன் இல்லை என்று..

என் நிழல் தேவதை என் உயிர் ஊசலில் இன்பம்

என் இமைசாரல் எண்ணில் அடங்கா பேரழகியாக என் கிரீடத்தில் அமர்ந்திருக்கும்

என் காதல் தேவதை தர்ஷா..! அவர்களின் கன்ன குழியில் உள்ளது என் நிஜமும் உயிரும்..!!

அன்று தான் நான் உணர்ந்தேன்

நான் ஒரு பெரிய குழியில் விழுந்துவிட்டேன் , அதுவும் உன் கன்ன குழியில்விழுந்துவிட்டேன்..!

நான் அதிலிருந்து மீண்டு வர விரும்பவில்லை எனக்கு என் உயிர் தேவையும் இல்லை

உன் கன்ன குழி போதுமடி என் உயிர் அதில் ஊசலில் ஆட என் உயிர் தேவதையே தர்ஷா...!!

என்ன மாயம் செய்தாய் பெண்ணே

என்ன மாயம் செய்தாய் பெண்ணே

இது இன்னொரு கவிதைங்க.

பாவையே சாலையோரம் நீ நடந்தால் பூக்கள் பூத்துக் குலுங்கும்!

நீ இமை இமைக்கயில் அம்மலர்கள் நாணித்து தலை குனியும்!

நீ கடந்து செல்லும் பாதை எல்லாம்

பனிப் பிரதேசமாய் காட்சியளிக்கும்!

பெண்னே! என்ன மாயம் செய்தாய்!

அலை கடலென ஆர்ப்பரித்த கடல் உன்னை கண்டதும் அமைதியானதே!

சுட்டெரிக்கும் சூரியனும் குளிர்ந்த

நிலவானதே!

என் சிந்தனையில் கரை புரளும்

காவிரி நீ!

வெளிச்சத்திற்கு ஏங்கும் இந்த

பூமியின் இருள் நீக்கும்

நிலவும் நீ!

அழகே!

உன்னை வர்ணிக்க

தெரியாமலில்லை.

ஆனால்

உனக்கு ஏற்ற

அபூர்வ வார்த்தைகள்

இத் தரணியில்.

அடிமையாகும் ரசிகர்கள்

அடிமையாகும் ரசிகர்கள்

ரசிகர்கள் இப்படி தனது கவர்ச்சிக்கு அடிமையாகி வருவதை நன்றாகவே உணர்ந்துள்ள தர்ஷாவும் விடுவதாக இல்லை. கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டி விருந்து வைத்து விடுகிறார். இவருடைய பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறதாம். மேலும் இவர் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி போட்டோக்களை குவித்து வருகிறார். இவருடைய ஒல்லியான தேகமும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிச்சுப் போய்ருச்சு போல..

மழையில் கவர்ச்சி சொட்டச் சொட்ட

மழையில் கவர்ச்சி சொட்டச் சொட்ட

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக பெய்த மழையில் நனைந்தபடி ஆடையெல்லாம் உடம்போடு ஒட்டி மொத்த அழகையும் வெளியே காட்டுற மாதிரி அழகாக கவர்ச்சி போஸ் வேற கொடுத்து ரசிகர்களை சூடு ஏத்தி இருக்கிறார். இதற்கும் கவிதைகள் குவிந்து கொண்டுள்ளன. அந்த அளவிற்கு வெறித்தனமாக இருக்கிறது இந்த கவர்ச்சி போஸ்கள். போட்டோஸ்களுக்கு ரசிகர்கள் உருகி உருகி கமெண்ட்களை போட்டு அள்ளித் தெளிக்கிறார்கள்.

சூரியனே போய்ருச்சே

சூரியனே போய்ருச்சே

இந்த லேட்டஸ்ட் படங்களுக்கும் கூட கவிதை மழை பொழிந்தபடி இருக்கிறது.. அதில் ஒருவர் இப்படி கவிதை பாடியுள்ளார்..

சூரியனே

சூரியனே

உறங்க சென்று விட்டது...! என்னுடைய உறக்கம் ஏனோ என்னிடம் இல்லை... அது உன்னிடம் இருந்தால் பத்திரமாக பார்த்துக்கொள், உன்னை நினைத்து உறங்காமல் இருப்பது ஒருவித போதையாக உள்ளது பட்டு என்று போகிறது அந்தக் கவிதை.. இதற்கு ரோஜா சிம்பல் போட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் தர்ஷா குப்தா.

Recommended Video

    Sayyesha Bold reply for Rumours | Arya Sayyesha | LockDown stress buster
    மழைக்கே ஜுரம் வரும்ய்யா!

    மழைக்கே ஜுரம் வரும்ய்யா!

    அடுத்து இன்னொருவர் எழுதிய கவிதை இது... நனைக்கத்தான் வந்தேன் உன்னை,ஆனால் நனைந்தே போனேன் நான்,ஆம் !உன்னை நனைத்து உனக்குள் நனைந்தேன் நான் சந்தோசத்தில்! ....................இப்படிக்கு மழை! என்று மழைக்கே குளிர் ஜுரம் வருவது போல ஒரு சூப்பர் கவிதையை போட்டுத் தாக்கியுள்ளார்.. தர்ஷா மட்டும் சும்மா இருப்பாரா என்ன.. இந்த ரசிகருக்கும் 3 ஹார்ட்டின் விட்டு, அதுவும் பச்சை ஹார்ட்டின் விட்டு அவரது இதயத்தை வருடிக் கொடுத்து குஷியேற்படுத்தி விட்டார்.

    பேபிமா வேண்டாம்டா

    பேபிமா வேண்டாம்டா

    மழையில் நனைந்த உடம்பு சரி இல்லாம போயிடும் ஜலதோஷம் பிடித்து விடும் பேபிமா னு ரசிகர்கள் கொஞ்சிக் கெஞ்சுகிறார்கள்.. அத்தனை பாசம் போல. சிலர் இவருடைய போட்டோகிராபரைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.. மொத்த அழகையும் நேரில் அதுவும் படு பக்கத்தில் வைத்துப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு தான் கிடைத்திருக்கிறது என்று போட்டோகிராபரை வாருகிறார்கள். அடடா மழைடா என்று தர்ஷாவைப் பார்த்து பாடினால்.. விடாமல் பெய்யும் அடை மழையாக.. ரசிகர்களின் கொஞ்சல் நீண்டு கொண்டே போகிறது..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+