நீயா நானாவில் கண்ணீர் சிந்திய மாணவன்.. நான் பைக் வழங்குகிறேன்.. இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கான எபிசோடில் பள்ளி படிக்கும் மாணவர்கள் குடும்ப கஷ்டத்திற்காக வேலை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் ஒரு மாணவர் கண்ணீரோடு தன்னுடைய கஷ்டத்தை தெரிவித்து இருந்த நிலையில் அந்த மாணவருக்கு இசையமைப்பாளர் தமன் பைக் வாங்கி கொடுக்க விரும்புவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
இந்த உலகத்தில் பலருடைய வாழ்க்கை கண்ணீரும் சோகங்களும் நிறைந்ததாக தான் இருக்கிறது. ஆனால் அது மேல்மட்டத்தில் இருக்கும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. ஒரு சிலர் ஆரம்ப காலகட்டத்தில் கண்ணீரோடு கவலைகளை அனுபவித்து இருந்தாலும் பிறகு அந்த வாழ்க்கையில் இருந்து மெல்ல மெல்ல முன்னேறி இருக்கிறார்கள். முயற்சி மற்றும் உழைப்பால் தங்களுடைய கஷ்ட காலங்களில் பலர் கடந்து வந்திருந்தாலும் இன்னொருவர் அதேபோல கஷ்டப்படுகிறார் என்பது தெரியும் போது ஒரு சிலர் மட்டும்தான் உதவி செய்கிறார்கள்.

அதில் ஒருவர் தான் தமன். இசையமைப்பாளர் தமன் 9 வயதிலேயே எஸ்பி பாலசுப்ரமணியன் குழுவில் பேண்ட் இசையமைக்கும் கலைஞராக வேலை செய்திருந்த நிலையில் அப்போது படிப்பையும் பார்த்துக்கொண்டு வேலை செய்திருக்கிறார். ஆனால் அவருடைய 13 வது வயதில் அவருடைய தந்தை இறந்து போன பிறகு படிப்பை நிறுத்திவிட்டு தன்னுடைய குடும்பத்திற்காக முழு நேரமாக வேலையில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்.
அதற்கு பிறகு பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேலைகள் செய்து வந்த தமன் தமிழில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். அதற்கு பிறகு தமிழில் சிந்தனை செய் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். தமிழில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கிய நேரத்திலேயே தெலுங்கிலும் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தமன் அறிமுகமாக இருந்தார்.
அப்போது தொடங்கிய பயணம் இப்ப வரைக்கும் அவருக்கு நீண்டு கொண்டிருக்கிறது. அவருடைய இசை அமைப்பில் பல பாடல்கள் பலருடைய கவலைகளை மறக்க வைக்கும் விதமாக உருவாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் அவருடைய மனிதநேயம் தான் இப்போது இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
அதாவது நேற்று ஞாயிற்றுகிழமை ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் பள்ளி படிப்பை படித்துக் கொண்டே குடும்ப சூழ்நிலைக்காக வேலை செய்யும் மாணவர்கள் கலந்து கொண்டு பேசி இருந்தார்கள். அப்போது பல மாணவர்கள் தங்களுடைய குடும்பத்திற்காக தாங்கள் செய்யும் தியாகங்கள் மற்றும் கஷ்டப்படுவது குறித்து கண்ணீரோடு பேசி இருக்கிறார்கள். இது பார்க்கும் பலரையும் கண் கலங்க வைத்திருக்கிறது.

பலருடைய வீட்டில் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவோ வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்தாலும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் தேவையில்லாத ஆடம்பரம் மற்றும் பொழுதுபோக்கில் ஈடுபட்டு தங்களுடைய பொன்னான வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் இன்னும் அதிகமான மாணவர்கள் தங்களுடைய குடும்பத்திற்காக கடினமான வேலைகளை செய்து கொண்டு கண்ணீரோடு படித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
அதில் ஒரு மாணவர் நீயா நானா நிகழ்ச்சியில் பேசியது பலரையும் ஃபீல் பண்ண வைத்தது. அதாவது தான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது காலையில் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை வீட்டிற்கு கொடுத்து விடுவேன். மார்க்கெட்டில் பெரிய பெரிய மூட்டைகள் தூக்குவதால் என்னுடைய கழுத்தில் ஒரு பக்கம் வலி எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
அந்த வலியோடு தான் நான் பள்ளிக்கு போவேன் எங்க வீட்டில் இருந்து பள்ளிக்கு 3 கிலோமீட்டர் இருக்கும் வேலைக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்து கிளம்பி போகும்போது சில நேரங்களில் பஸ்ஸை விட்டு விடுவேன். அதற்கு பிறகு மூன்று கிலோ மீட்டர் நடந்தே ஸ்கூலுக்கு போவேன் என்று சொல்லி இருந்தார். அப்போது கோபிநாத் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பையனை நீங்கள் வேலை பார்க்க வைக்கணுமா?
இந்த நேரத்தில் அவன் படிக்க வேண்டும்... படித்த பிறகு உங்களுக்காக அவன் எவ்வளவோ கடமைகளை செய்வான் என்று அவருடைய அம்மாவின் மனதையும் மாற்றி இனி நீ தூக்க வேண்டியது மூட்டை அல்ல புத்தகத்தை தான்.. என்று சொல்ல வைத்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்த தமன், "நான் இந்த மாணவருக்கு ஒரு பைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்... அவருடைய முகவரி தெரிந்தால் சொல்லுங்கள்" என்று twitter பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார். இது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தமனின் செயல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க? கமெண்டில் தட்டி விடுங்க.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications